தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து அமைச்சர் ரகுபதி திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையம் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் ரகுபதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் தி.மு.க பிரமுகர்கள் அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தி.மு.க அமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்