இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (திங்கட்கிழமை) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பான ஜாக் அமைப்பின் கூட்டம் இன்று (ஏப்ரல் 7) மதுரையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையை நீதித்துறை அமல்படுத்தியுள்ளது. ஆனால் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் செய்வதற்கு எந்த கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் வழக்குகளை தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். எனவே, இந்தச் சிக்கல் தீரும் வரை இ-ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்கக் கோரி, நாளை முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“