/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-2020-09-01T165254.964-1.jpg)
Tamil News Today Live Tn assembly
தமிழக சட்டப்பேரவை செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது என்று தமிழக சட்டப் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் வழக்கமாக நடைபெறும் கோட்டையில் நடைபெறாமல் வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, அண்மையில், தமிழக சட்டப் பேரவை சபாநாயகர் தனபால், சட்டப் பேரவைக் கூட்டம் நடத்துவதற்காக, கலைவாணர் அரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது என்று தமிழக சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்திய அரசியலமைப்பு பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10 மணிக்கு சென்னை 600 002 வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவானர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டியிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.