Advertisment

Tamil News Today :29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழ் நாடு லைவ் நியூஸ் உடனுக்குடன் தெரிந்துகொள்ள, இந்த இணைப்பில் தொடர்ந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Toll gate

Tamil News Today Live, 20th March 2023: மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 432.71 புள்ளிகள் சரிந்து 57,557.19 புள்ளிகளில் வர்த்தகம் தொடக்கம். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 113.35 புள்ளிகள் சரிந்து 17,000 புள்ளிகளில் வர்த்தகம் தொடக்கம்.

Advertisment

publive-image

சென்னையில் தங்கம் வெள்ளி விலை:

சென்னையில் இன்று 22கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,560 என்றும் சவரனுக்கு ரூ.44,480 என்றும் விற்கப்படுகிறது. 24கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,065 என்றும் சவரனுக்கு ரூ.48,520 என்றும் விற்கப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.74 என்றும் கிலோவுக்கு ரூ.74,000 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.400 சரிந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

இன்று (மார்ச் 20ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல் டீசல் விலை:

இன்று சென்னையில் பெட்ரோலின் விலை 1 லிட்டருக்கு ரூ.102.63, மேலும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.94.24 என்று விற்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:28 (IST) 20 Mar 2023
    WPL கிரிக்கெட் தொடர் - டெல்லி அணிக்கு 110 ரன்கள் இலக்கு

    WPL கிரிக்கெட் தொடர் - டெல்லி அணிக்கு 110 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்தது



  • 20:43 (IST) 20 Mar 2023
    பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு. பாலியல் புகாரில் சிக்கி, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு



  • 20:12 (IST) 20 Mar 2023
    ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை : அண்ணாமலை கருத்து

    நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள் காத்திருக்க, ஏமாற்றம் அளிக்கும் விதமாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது" தமிழக பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து



  • 20:09 (IST) 20 Mar 2023
    தமிழக பட்ஜெட் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

    பொதுமக்கள் நம்பியிருந்த முக்கிய அறிவிப்புகளான கல்விக்கடன் ரத்து, எரிவாயு மானியம், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" தமிழக பட்ஜெட் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து



  • 20:08 (IST) 20 Mar 2023
    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு 3 நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் சந்திப்பு



  • 19:19 (IST) 20 Mar 2023
    பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

    பொறியியல் முதலாமாண்டு படிக்கும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு! தேர்வுக்கான முழு அட்டவணையை http://coe1.annauniv.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்



  • 19:15 (IST) 20 Mar 2023
    12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சென்னை அண்ணாநகர் கோபுரம்!

    ₹30 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட, சென்னை அண்ணாநகர் கோபுரத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு



  • 19:14 (IST) 20 Mar 2023
    மகளிர் ப்ரீமியர் லீக் : பெங்களூரு, குஜராத் அணிகள் வெளியேறின

    மகளிர் ப்ரீமியர் லீக்கின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின மும்பை, டெல்லி, உத்தரப்பிரதேச அணிகள்! பெங்களூரு, குஜராத் அணிகள் வெளியேறின!



  • 18:24 (IST) 20 Mar 2023
    மணிஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 2-ந் தேதி வரை காவல் நீடிப்பு

    மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் காவலை நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 2-ந் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது.



  • 17:39 (IST) 20 Mar 2023
    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

    அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு. பழங்குடியின நலப்பிரிவு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்தார்



  • 17:00 (IST) 20 Mar 2023
    இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது

    இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக, 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து, தூத்துக்குடி தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்



  • 17:00 (IST) 20 Mar 2023
    சென்னையில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

    தகுதியான குடும்பத் தலைவிகள் அனைவருக்கும், கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்” - சென்னையில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி



  • 16:58 (IST) 20 Mar 2023
    தங்கம் விலை கிராமுக்கு ரூ160 அதிகரிப்பு

    சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.44,640க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.5,580க்கு விற்பனை



  • 16:08 (IST) 20 Mar 2023
    அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நிறைவு; இ.பி.எஸ் வேட்புமனு ஏற்பு

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இ.பி.எஸ்-யை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 16:06 (IST) 20 Mar 2023
    உடல்நலம் தேறி வருகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்; மருத்துவமனை அறிக்கை

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மிதமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • 16:03 (IST) 20 Mar 2023
    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆய்வில் உள்ளது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை ஆய்வில் உள்ளது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துளது.



  • 16:02 (IST) 20 Mar 2023
    3 மாதங்களுக்குள் ஆர்.டி.ஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும்; ஐகோர்ட்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    மூன்று மாதங்களுக்குள் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:01 (IST) 20 Mar 2023
    ரூ.155.8 லட்சம் கோடி கடன் மதிப்பிடப்பட்டுள்ளது நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பதில்

    மத்திய அரசுக்கு ரூ. 155.8 லட்சம் கோடி கடன் மதிப்பிடப்பட்டுள்ளது; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 57.3% நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.



  • 14:24 (IST) 20 Mar 2023
    நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு!

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



  • 14:01 (IST) 20 Mar 2023
    ஜி7 மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு!

    ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்துள்ளார்.



  • 14:00 (IST) 20 Mar 2023
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பி.எஸ் மனு!

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர் செல்வமும் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க கோரி முறையீடும் செய்துள்ளார்.



  • 13:40 (IST) 20 Mar 2023
    லிவ்-இன் உறவு: பொதுநல மனு தள்ளுபடி!

    லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • 13:39 (IST) 20 Mar 2023
    இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:38 (IST) 20 Mar 2023
    3வது அணி சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்

    எதிர்வரும் 2024 பொதுத்தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.



  • 12:35 (IST) 20 Mar 2023
    பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்திப்பு!

    டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை, பிரதமர் மோடி வரவேற்ற பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவுடன் அவர்கள் நேரடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



  • 11:43 (IST) 20 Mar 2023
    23ஆம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    23ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் வாய்ப்புள்ளது.



  • 11:16 (IST) 20 Mar 2023
    இங்கிலாந்தில் இந்தியக் கொடி கழற்றப்பட்டது: பிரிட்டன் துணை தூதருக்கு சம்மன்

    லண்டனில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பிய ஒரு குழு இந்தியக் கொடியை அகற்றினர். அதன் சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தை வரவழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.



  • 10:37 (IST) 20 Mar 2023
    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு

    அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.82.48 இல் தொடங்கி, பின்னர் ரூ.82.52 ஆக சரிந்தது. இது மேலும் அதிகரித்து ரூ.82.48 ஆக, தற்போது 11 பைசா அதிகரித்துள்ளது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment