scorecardresearch
Live

News Highlights: மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருக்கள்

senthilbalaji

Tamil Nadu updates : பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் இன்று பதவி ஏற்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வர் பொறுப்பு ஏற்பது இதுவே முதல்முறையாகும்.

IPL 2021

19/09/2021 அன்று 14வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மே மாதம் 2ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட தொடரின் மீத ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 157 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டிகாக் 17 ரன்களிலும், அறிமுக வீரர் அன்மோல்பிரீத் 16 ரன்களிலும், சூர்ய குமார் யாதவ் 3 ரன்களிலும், இஷான் கிஷான் 11 ரன்களிலும், பொல்லார்ட் 15 ரன்களிலும் குணால் பாண்டியா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்

இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 93.26 ஆக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
21:46 (IST) 20 Sep 2021
அதிமுக ஆட்சியில் விடப்பட்ட ரூ.119 கோடி டெண்டர் ரத்து – சென்னை மாநகராட்சி

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் மறுசீரமைப்பு பணிக்காக விடப்பட்ட ரூ.119 கோடி மதிப்பிலான பேக்கேஜ் டெண்டரை மாநகராட்சி ரத்து செய்தது.

19:19 (IST) 20 Sep 2021
ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

18:40 (IST) 20 Sep 2021
பெங்களூரில் ராணுவ தளங்களை உளவு பார்த்தவர் கைது

ராணுவ தளங்களை உளவு பார்த்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல்களை விற்க முயன்றதாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் என்பவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். துணி வியாபாரி போல பெங்களூருவில் பதுங்கி இருந்து, ராணுவ கேப்டன் உடையில் தளவாடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து தகவல்களை திரட்டியுள்ளார்.

17:43 (IST) 20 Sep 2021
வீரர்களின் ஊதியம் உயர்வு – பிசிசிஐ அறிவிப்பு

உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த வீரர்களுக்கான ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.60,000 உயர்த்தப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

17:34 (IST) 20 Sep 2021
அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

17:29 (IST) 20 Sep 2021
நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு

கொரோனா பரிசோதனையை அதிகரித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

17:20 (IST) 20 Sep 2021
செஸ் வரியை கைவிட்டால், நாங்கள் ஜிஎஸ்டிக்குள் வருகிறோம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசு செஸ் வரியை கைவிட்டால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

17:11 (IST) 20 Sep 2021
திமுக மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு – பிடிஆர் பதில்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என திமுக நடந்துகொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த விஷயத்தில் ஓபிஎஸ்-க்கு புரிதல் இல்லை என்று தெரிவித்தார்.

16:45 (IST) 20 Sep 2021
அடுத்த 3 மாதங்களில் 100 கோடி டோஸ்கள்

அக்டோபர் மாதத்தில் 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை அரசு பெற உள்ளது என்றும், அடுத்த 3 மாதங்களில் 100 கோடி டோஸ்கள் பெறப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

15:36 (IST) 20 Sep 2021
அக் 2ம் தேதி கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

15:15 (IST) 20 Sep 2021
5 நாட்களுக்கு கனமழை தொடரும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் எனவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14:16 (IST) 20 Sep 2021
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு மேலும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

13:15 (IST) 20 Sep 2021
பி.இ. படிப்பவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவித உள்ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

13:09 (IST) 20 Sep 2021
இணையத்தில் வெளியான சர்ச்சை வீடியோ

பாஜக மூத்த தலைவர் சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

12:50 (IST) 20 Sep 2021
திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்

திருப்பதியில் இன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது. நாள்தோறும் இரவு 11.30 வரை 8,000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

12:32 (IST) 20 Sep 2021
பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

11:25 (IST) 20 Sep 2021
உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் கால அவகாசமா?

சட்டமன்ற தேர்தலை நடத்திவிட்டு, உள்ளாட்சி தேர்தலை நடத்த மட்டும் கால அவகாசம் தேவையா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த ஒரு நாள் கூட கால அவகாசகத்தை நீட்டித்து அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவிப்பு

11:16 (IST) 20 Sep 2021
மேற்கு வங்கத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

கொல்கத்தாவின் லேக் கார்டன்ஸ் பகுதியில் காலையில் இருந்து பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழ்ந்ந்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கே கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

10:40 (IST) 20 Sep 2021
தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்து ஒரு சவரன் ரூ. 34,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

10:31 (IST) 20 Sep 2021
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பு – கனிமொழி கருத்து

கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வு பொதுமக்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

10:16 (IST) 20 Sep 2021
தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை கண்டித்து திமுகவினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

09:35 (IST) 20 Sep 2021
நகருக்குள் வனம் திட்டத்தை துவங்கி வைத்தார் கே.என். நேரு

சேலம் மாவட்டத்தில் நகருக்குள் வனம் என்ற திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சேலம் அருகே அமைந்திருக்கும் வாய்க்கால்ப்பட்டறையில் அந்த திட்டட்தை துவங்கி வைத்தார் கே.என். நேரு.

09:20 (IST) 20 Sep 2021
திருப்பதியில் துவங்கியது இலவச தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி 8 ஆயிரம் பேர் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதார் அடையாள அட்டையை காட்டி பொதுமக்கள் டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.

09:15 (IST) 20 Sep 2021
இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி

இன்று காலை 11 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி. 2 நபர்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

09:03 (IST) 20 Sep 2021
காபூல் மாநகராட்சியில் பெண்கள் வேலைக்கு வர தடை

ஏற்கனவே ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சியில் பெண்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலைக்கு மட்டுமே பெண்கள் வந்தால் போதும். மற்ற மாநகராட்சி பெண் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் காபூலின் இடைக்கால மேயர் ஹம்துல்லா நமோனி.

08:50 (IST) 20 Sep 2021
ஆர்.சி.பி. கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோலி

இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன் என்று விராட் கோலி அறிவித்துள்ளாஅர். நான் ஐ.பி.எல்.ல்லில் விளையாடும் கடைசி போட்டி வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடுவேன். இதுநாள் வரையில் என்னை நம்பி எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று விராட் கோலி அறிவித்துள்ளார்.

08:41 (IST) 20 Sep 2021
Weather update – திருப்பூரில் பெய்த ஆலங்கட்டி மழை

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் திருப்பூர், அவினாசி, காங்கேயம், பல்லடம் போன்ற பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை, தென்காசி போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

Web Title: Tamil nadu live updates dmk aiadmk bjp congress weather politics ipl

Best of Express