Advertisment

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குப்பதிவு

27 மாவட்டங்களில் உள்ள 46,639 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறதது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Local Body Election 2019 Results, District Panchayat President Election, Union Chairman, vise chairman selection, உள்ளாட்சித் தேர்தல்

Tamil Nadu Local Body Election 2019 Results, District Panchayat President Election, Union Chairman, vise chairman selection, உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தின் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. 27 மாவட்டங்களில் உள்ள 46,639 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

Advertisment

நேற்று நடந்த இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 30 வாக்குச் சாவடிகளில் 72.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் - ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு கடந்த 26ம் தேதி முதற்கட்ட ஊராட்சித் தேர்தல் நடைபெற்றது .  4700 ஊராட்சி தலைவர்கள், 37,830 வார்டு உறுப்பினர்கள், 2546 ஒன்றிய வார்டு உறுப்பினர், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அன்றைய தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 76.19% வாக்குகள்  பதிவானதாக  தமிழ்நாடு  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Live Blog

Tamil Nadu Local Body Election updates : தமிழகத்தில் இன்று நடக்கும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கே காணலாம்.














Highlights

    17:03 (IST)30 Dec 2019

    வாக்குப்பதிவு நேரம் நிறைவு

    தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தது. பதிவான வாக்குகள், ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    2ஆம் கட்டமாக 27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களில், 46,639 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    16:34 (IST)30 Dec 2019

    3 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு

    2ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

    15:29 (IST)30 Dec 2019

    ராமேஸ்வரம் மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

    ராமேஸ்வரத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்  மிகவும் அமைதியாக  நடந்து வருகிறது. 

     

    15:14 (IST)30 Dec 2019

    45.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன - மதியம் 1 மணி நேர நிலவரம்

    இன்று நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி அளவிலான  நேர நிலவரப்படி 45.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    13:21 (IST)30 Dec 2019

    சத்குரு ஜாகி வாசுதேவ் வாக்களித்தார்

    இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், கோயம்புத்தூரில் முட்டத்துவயல் வாக்குச் சாவடியில் சத்குரு ஜாகி வாசுதேவ் வாக்களித்தார்.  

    11:54 (IST)30 Dec 2019

    24.65  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன - 11 மணி நேர நிலவரம்

    இன்று நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நேர நிலவரப்படி 24.65  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  

    11:52 (IST)30 Dec 2019

    தேர்தல் விடுமுறை நாளில் இயங்கிய தனியார் பள்ளிக்கு நோட்டிஸ்

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுரில் டிசம்பர் 27ம் தேதி தேர்தல் விடுமுறையன்று இயங்கிய ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    11:43 (IST)30 Dec 2019

    ஒரத்தநாடு ஒன்றியம் 15வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தம்

    ஒரத்தநாடு ஒன்றியம் 15வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தம்.  வாக்குச் சாவடியில் வேட்பாளர்களின்  சின்னங்கள் இடம் மாறியிருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கபப்டுள்ளது.  

    11:41 (IST)30 Dec 2019

    சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்றால் என்ன?

    அரசு நிர்வாகம்: இலஞ்ச-ஊழல் இல்லாமலும் - இருப்பதே தெரியாமலும் இயங்கும் விரைவான, வெளிப்படையான, மக்கள் சேவகனாக இருக்கும் அரசு நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்; குடிமக்கள் விழிப்புணர்வு: ஓட்டுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், கடமைகள், சட்டங்கள் பற்றிய புரிதலை விதைத்து அனைத்து குடிமக்களிடம் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; அனைவருக்கும் வளர்ச்சி: கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில், அடிப்படைக் கட்டமைப்புகள், சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவமளித்து வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் சென்றுசேர்வதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை முன்வைத்தல்; இந்த மாபெரும் இலட்சியங்களை நோக்கிய பயணமே "சட்ட பஞ்சாயத்து இயக்கம்".

    ஒருவரியில் சொல்வதென்றால் "சட்டத்தின் ஆட்சி", "அனைவருக்கும் வளர்ச்சி" தரும் "நல்லாட்சியை" மலரச் செய்வதற்கான மக்கள் இயக்கமே சட்ட பஞ்சாயத்து இயக்கமாகும். டிசம்பர் 14, 2013 அன்று, சென்னையில் திரு.சகாயம்.ஐ.ஏ.எஸ்.அவர்களால் சட்ட பஞ்சாயத்து இயக்கமும், இயக்கத்தின் தொலைபேசி சேவை மையமும் துவங்கி வைக்கப்பட்டது.

    11:39 (IST)30 Dec 2019

    10.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

    இன்று நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணி நேர நிலவரப்படி 10.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  

    11:34 (IST)30 Dec 2019

    ஊரக உள்ளாட்சி தொடர்பான சட்ட பஞ்சாயத்து அமைப்பு மனு தள்ளுபடி

    நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடித்தி முடிவுகள் அறிவிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளையும் வெளியிடக்கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம் .  

    10:30 (IST)30 Dec 2019

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடுதல்பற்றிய விவரங்கள் (2/2)

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கோரிக்கை அல்லது ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள ஏதேனும் பதிவு தொடர்பான ஆட்சேபணை குறித்து தெரிவிக்க விரும்பும் ஒருவர் வாக்காளர் பதிவு விதிகள் 1960ன் கீழ், தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் உரிய முறையில் தனது கோரிக்கையை அல்லது ஆட்சேபணையை சமர்ப்பிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு சட்டங்களின்படி மற்றும் மேற்படி கோரிக்கைகள் ஆட்சேபணைகள் தொடர்பாக சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரது உத்தரவுகளின் அடிப்படையில் உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட பகுதியில் மாற்றங்களை உள்ளடக்கிய திருத்தங்களை மேற்கொள்வார்.

    10:30 (IST)30 Dec 2019

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடுதல்பற்றிய விவரங்கள் (1/2)

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடுதல் மற்றும் செய்யப்பட்ட பதிவுகள் மீதான ஆட்சேபணைகள் குறித்து முடிவு செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறை என்ன?

    வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் எந்த நேரத்திலும் அப்பட்டியலின் எப்பகுதியிலும் பெயர்கள் விடுபட்டுள்ளது குறித்த அல்லது பதிவுகள் தொடர்பான ஆட்சேபணைகள், முதலில் உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருக்கும் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதன் மூலம் நேர்செய்யப்படும்.

    10:05 (IST)30 Dec 2019

    27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 குறித்த முழு விவரங்கள்

    10:02 (IST)30 Dec 2019

    30 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது

    தமிழ்நாடு உஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலின் பொது வாக்குச் சீட்டுகளை மாற்றி வழங்குதல், வாக்குச் சீட்டுகளில் சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வாக்குப் பெட்டியை கைப்பற்றுதல் போன்ற காரணங்களுக்காக   30 வாக்குச் சாவடிகளில்  மீண்டும் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. 

    மறுவாக்குப்பதிவு நடக்கும் வாக்குச் சாவடிகள் : 

    08:59 (IST)30 Dec 2019

    இன்றைய நாளில் இன்னும் கூடுதலான விழிப்புடன் இருங்கள் - ஸ்டாலின்

    இன்று நடக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் பொது தி.மு.கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் கூடுதலான விழிப்புடன் இருந்து, வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் நமது கூட்டணிக்குச் சேர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.  

    08:54 (IST)30 Dec 2019

    வில்லிபத்திரி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 4 வார்டுகளில் ரத்து

    விருதுநகர் வில்லிபத்திரி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1,3,5,7,9 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டன

    08:48 (IST)30 Dec 2019

    மின் விநியோகம் இல்லாததால் வாக்குப்பதிவு மந்தம்

    சென்னகாரம்பட்டி 144 வாக்குச்சாவடிக்கு மின் விநியோகம் இல்லாததால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னகரம்பட்டி ஊராட்சி , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

    08:46 (IST)30 Dec 2019

    தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள்

    வாக்குப் பதிவு நாளன்று ஒருவர் தனது ஒப்புதலைத் தந்தாலும் வேறொருவர் அவரது சார்பில் வாக்களிக்க இயலாது. அவ்வாறு செய்வது ஆள் மாறாட்டம் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 

    08:45 (IST)30 Dec 2019

    தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

    ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை 18004257072, 18004257073 மற்றும் 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 

    08:24 (IST)30 Dec 2019

    இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கியது

    255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும்,  2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும், 4,924 கிராம ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கும், 38,916 உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் இன்று இரண்டாம் கட்டம் தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கியது.     

    Tamil Nadu Local Body Election updates : ஒவ்வொரு வாக்காளர்களும் 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவினை வீடியோவாக பதிவு செய்வதுடன், வெப் கேமராக்கள் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும். வாக்காளர் தவிர, எந்தவொரு நபரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைதல் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment