Advertisment

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடையில்லை, திமுகவின் ஒரு கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்

இன்று, உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரனையை இங்கே லைவ்வாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். தமிழக அரசியலோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.         

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடையில்லை, திமுகவின் ஒரு கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி டிசம்பர் 7ம் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  மேலும், பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என திமுக தொடர்ந்த வழக்கால் 9 மாவட்டங்களில் இந்த  உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

 

இந்நிலையில், டிசம்பர் 7ம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி  திமுக, காங்கிரஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள்  உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்கின்றது. உள்ளாச்சித் தேர்தலில் இடஒதுக்கீடு கொள்கையை முழுவதுமாக நடைமுறைபடுத்தவில்லை என்று திமுக தனது மனுவில் கூறியுள்ளது.

இன்று, உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரனையை இங்கே லைவ்வாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். தமிழக அரசியலோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

Live Blog

Tamil Nadu Local Body Election News Live updates : தமிழகத்தின் உள்ளாட்சித்  தேர்தல் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளொக்கில் காணலாம்.














Highlights

    15:51 (IST)11 Dec 2019

    தேர்தல் நெறிமுறைகளுக்காக போராடினாம் - திருமாவளவன்

    தேர்தல் சந்திக்க திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் எப்போதும் தயாராக உள்ளது என்றும், தேர்தல் நெறிமுறைகளையும், அரசியலமைப்பை சித்தாந்தங்களை காப்பதற்க்காக நீதிமன்றத்தை நாடினோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்   தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.         

    15:48 (IST)11 Dec 2019

    திமுக வாதங்கள் பொய் - அதிமுக வழக்கறிஞர் வாதம்

    திமுக தரப்பில் வாதாடிய ஏ.எம் சிங்வி உள்ளாட்சித்  தேர்தல்களில் சில மாவட்டங்களில் 1991  மக்கட்தொகை கணக்கெடுப்பும், சில பகுதிகளில்  1991 மக்கட்தொகை கணக்கெடுப்பும் கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அதிமுக வழக்கறிஞர் முகுல் ரோஹடகி திமுக வாதங்கள் முற்றிலும் தவறானது என்றும் வாதிட்டார்.     

    15:31 (IST)11 Dec 2019

    2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு உங்களுக்கு சம்மதமா? நீதிபதிகள் கேள்வி

    1991 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித்  தேர்தலை நடத்தக் கூடாது என்ற திமுக வின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் , 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின் மூலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் உங்களுக்கு சம்மதமா ? என்று திமுக தரப்பு வழக்கறிஞரிடம்  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியை எழுப்பினர். இதற்கு திமுக வழக்கறிஞர் சம்மதம் என்று பதில் அளித்த பின்பு நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.   தீர்ப்பில்,  2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியது.  

    15:16 (IST)11 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுகவின் யுக்தி தோல்வி - அமைச்சர் ஜெயக்குமார்

    உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக கையாண்ட யுக்திகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.  திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியது தான் மிச்சம் என்றும் கூறினார்.  

    13:40 (IST)11 Dec 2019

    9 மாவட்டங்களில் வார்டு மறுவரை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை 3 மாதங்களுக்குள் முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு 

    13:15 (IST)11 Dec 2019

    தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு-

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் எந்த தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும்,    உள்ளாட்சித் தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.  

    11:23 (IST)11 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல் வழக்கு - காங்கிரஸ் கட்சி சார்பாக ப.சிதம்பரம் ஆஜர்?

    திமுக, மதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அரிவிப்பை  தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணை இன்னும் சற்று நேரத்தில் நடைபெற விருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக ப.சிதம்பரம் ஆஜாராகி வாதாட உள்ளார் என்ற   தகவல் தற்போது வந்துள்ளது.  

    11:12 (IST)11 Dec 2019

    பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன.  இதனைத் தொடர்ந்து மக்களாட்சித் தத்துவதற்கு புறம்பாக நடைபெறும் இத்தகைய செயக்களை தடுக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று தெரிவித்து இருந்தது.  

    10:47 (IST)11 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல் : திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு

    தமிழகத்தில் அனைத்து மாட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலைக் கட்சி சிறுத்தை தலைவர்  திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் புதிய  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  

    09:49 (IST)11 Dec 2019

    தமிழக உள்ளாட்சித் தேர்தல் - இது வரை நடந்தது என்ன ? (2/2)

    இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த 6ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ;  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ளாட்சி த் தேர்தளை நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. வழக்கை தீர்ப்பை அடுத்து, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தனது முந்தைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாகவும் அறிவித்தது .

    பிறகு டிசம்பர் 7ம் தேதி உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 9 மாவடங்கலைத்  தவிர்த்து, தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதில்  தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் (9 மாவட்டங்கள் நீங்க ) டிச.27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவித்தது. 

    இந்த தேர்தல் அறிவிப்புக்கு எதிராகவும்  தற்போது திமுக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. அந்த மனுவின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.        

    09:28 (IST)11 Dec 2019

    தமிழக உள்ளாட்சித் தேர்தல் - இது வரை நடந்தது என்ன ? (1/2)

    தமிழ்நாடு தேர்தல் ஆணையம், கடந்த  டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.,27 மற்றும் டிச.,30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   அந்த டிசம்பர் 2ம் தேதி அறிவிப்பில் - கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தல் அர்விப்பை தொடர்ந்து, திமுக கழகம் மற்றும் 5 போது மக்கள் தேர்தல் அறிவிப்பை  ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். 

    Tamil Nadu Local Body Election News Live updates : உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை. இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம் என்று கமல் ஹாசன் அறிக்கை விடுத்தார்.

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்று ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

    Dmk Aiadmk Election Commission M K Stalin
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment