Advertisment

Tamil Nadu Local Body Election Results : அதிமுகவுக்கு பலத்த அடி; அசுர பலத்துடன் ஸ்வீப் செய்த திமுக

Local Body Election Results: வாக்கு எண்ணிக்கை முடிவினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https//tnsec.tn.nic.in- இல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவினை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil Nadu Local Body Election Results : அதிமுகவுக்கு பலத்த அடி; அசுர பலத்துடன் ஸ்வீப் செய்த திமுக

Local Body Election Results: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஒன்பது மாவட்டக் குழுத் தலைவர்கள், 74 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 2,901 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது

Advertisment

முதல்கட்ட தேர்தலில் 77.43 விழுக்காடும், இரண்டாம்கட்ட தேர்தலில் 78.47 விழுக்காடு வாக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 70.51 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு பெட்டிகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் ஒவ்வொருவரும் 4 வாக்குகளை தனித்தனிவாக்குச்சீட்டுகளில் செலுத்தியுள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குகளை வெள்ளை நிற வாக்குச் சீட்டிலும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டிலும், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர் பதவிக்கு பச்சை நிறவாக்குச் சீட்டிலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டிலும் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கைகாக தனித்தனியாக 40 மேசைகள் போடப்பட்டுள்ளன. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, வட்டாரபார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி, தோல்வி விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்யவும், வெப் ஸ்ட்ரீமிங் முறையில், மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வேட்பாளர், முகவர் தவிரப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

வாக்கு எண்ணிக்கை முடிவினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https//tnsec.tn.nic.in- இல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை ஒருநாள் முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளது.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:50 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலை 11 மணி நிலவரம்: திமுக 517; அதிமுக 106 முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை 11 மணி நிலவரம்:

    திமுக 517 முன்னிலை

    அதிமுக 106 முன்னிலை

    மற்றவை 76 முன்னிலை


  • 23:00 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட கவுன்சிலர்கள் முன்னிலை இரவு 10 மணி நிலவரம்: திமுக 96 ; அதிமுக 3 முன்னிலை

    மாவட்ட கவுன்சிலர்கள் வார்டு மொத்தம் 140

    திமுக 96 முன்னிலை

    அதிமுக 3 முன்னிலை

    மற்றவை 1 முன்னிலை


  • 21:39 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்: திமுக 457; அதிமுக 78 முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை 9 மணி நிலவரம்:

    திமுக 457 முன்னிலை

    அதிமுக 78 முன்னிலை

    மற்றவை 56 முன்னிலை


  • 20:19 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்: திமுக 353; அதிமுக 59 முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை 8 மணி நிலவரம்:

    திமுக 353 முன்னிலை

    அதிமுக 59 முன்னிலை

    மற்றவை 37 முன்னிலை


  • 20:17 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர்கள் முன்னிலை நிலவரம்: திமுக 88 முன்னிலை; அதிமுக 2 முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட கவுன்சிலர்கள் முன்னிலை 8 மணி நிலவரம்:

    மாவட்ட கவுன்சிலர்கள் வார்டு மொத்தம் 140

    திமுக 88 முன்னிலை

    அதிமுக 2 முன்னிலை

    மற்றவை 1 முன்னிலை


  • 19:18 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்: திமுக 296; அதிமுக 49 முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்:

    திமுக 296 முன்னிலை

    அதிமுக 49 முன்னிலை

    மற்றவை 41 முன்னிலை


  • 19:14 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட கவுன்சிலர்கள் முன்னிலை நிலவரம்: திமுக 71 முன்னிலை; அதிமுக 4 முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட கவுன்சிலர்கள் முன்னிலை நிலவரம்:

    மாவட்ட கவுன்சிலர்கள் வார்டு மொத்தம் 140

    திமுக 71 முன்னிலை

    அதிமுக 4 முன்னிலை

    மற்றவை 1 முன்னிலை


  • 18:33 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்: திமுக 260 முன்னிலை; அதிமுக 47 முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்:

    திமுக 260 முன்னிலை

    அதிமுக 47 முன்னிலை

    மற்றவை 50 முன்னிலை


  • 18:20 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய கவுன்சிலர்கள் திமுக 121; அதிமுக - 06 வெற்றி

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நிலவரம்:

    மாவட்ட கவுன்சிலர்கள் மொத்தம் 140

    திமுக - 04 வெற்றி

    அதிமுக - 0

    ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி நிலவரம்

    திமுக - 121 வெற்றி

    காங்கிரஸ் - 02 வெற்றி

    விசிக - 01 வெற்றி

    மார்க்சிஸ்ட் - 01 வெற்றி

    இந்திய கம்யூனிஸ்ட் - 01

    அதிமுக - 06 வெற்றி

    பாமக - 03 வெற்றி


  • 18:20 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய கவுன்சிலர்கள் திமுக 121; அதிமுக - 06 வெற்றி

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நிலவரம்:

    மாவட்ட கவுன்சிலர்கள் மொத்தம் 140

    திமுக - 04 வெற்றி

    அதிமுக - 0

    ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி நிலவரம்

    திமுக - 121 வெற்றி

    காங்கிரஸ் - 02 வெற்றி

    விசிக - 01 வெற்றி

    மார்க்சிஸ்ட் - 01 வெற்றி

    இந்திய கம்யூனிஸ்ட் - 01

    அதிமுக - 06 வெற்றி

    பாமக - 03 வெற்றி


  • 17:37 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் திமுக 224 வார்டுகளில் முன்னிலை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்

    திமுக 224 வார்டுகளில் முன்னிலை

    அதிமுக 31 வார்டுகளில் முன்னிலை

    மற்றவை 29 இடங்களில் முன்னிலை


  • 16:43 (IST) 12 Oct 2021
    தமிழக ஊரக உள்ளாட்சி நிலவரம்

    தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட கவுன்சிலர்களுக்காக போட்டியில் தற்போதைய நிலவரப்படி திமுக 61 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.


  • 16:15 (IST) 12 Oct 2021
    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 13 வார்டுகளில் ஒரு வார்டு முடிவுகள் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


  • 15:25 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர் தேர்தல் 3 மணி நிலவரம்; 58 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 3 மணி நிலவரப்படி, 58 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன


  • 15:25 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர் தேர்தல் 3 மணி நிலவரம்; 58 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 56 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன


  • 15:24 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர் தேர்தல் 3 மணி நிலவரம்; 58 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 58 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன


  • 15:24 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர் தேர்தல்; 58 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 58 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன


  • 15:24 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர் தேர்தல் 3 மணி நிலவரம்; 58 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 3 மணி நிலவரப்படி, 58 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன


  • 15:04 (IST) 12 Oct 2021
    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திமுக கூட்டணி 3 இடங்களில் வெற்றி

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 4வது வார்டில் திமுகவின் திருப்பதி, 5வது வார்டில் காங்கிரசின் தெய்வானை, 6வது வார்டில் திமுகவின் தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்


  • 15:04 (IST) 12 Oct 2021
    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திமுக கூட்டணி 3 இடங்களில் வெற்றி

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 4வது வார்டில் திமுகவின் திருப்பதி, 5வது வார்டில் காங்கிரசின் தெய்வானை, 6வது வார்டில் திமுகவின் தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றி


  • 15:03 (IST) 12 Oct 2021
    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திமுக கூட்டணி 3 இடங்களில் வெற்றி

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 4வது வார்டில் திமுகவின் திருப்பதி, 5வது வார்டில் காங்கிரசின் தெய்வானை, 6வது வார்டில் திமுகவின் தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றி


  • 15:03 (IST) 12 Oct 2021
    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திமுக கூட்டணி 3 இடங்களில் வெற்றி

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 4வது வார்டில் திமுகவின் திருப்பதி, 5வது வார்டில் காங்கிரசின் தெய்வானை, 6வது வார்டில் திமுகவின் தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்


  • 14:47 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர் தேர்தல்; 56 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 56 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன


  • 14:46 (IST) 12 Oct 2021
    மாவட்ட கவுன்சிலர் தேர்தல்; 56 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 56 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன


  • 14:27 (IST) 12 Oct 2021
    ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்

    கோவை குருடாம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்தி ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். அவரது குடும்பத்தில் 5 வாக்குகள் உள்ள நிலையில் அவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருக்கிறார்.


  • 14:26 (IST) 12 Oct 2021
    ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்

    கோவை குருடாம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்தி ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்


  • 14:07 (IST) 12 Oct 2021
    நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் வெற்றி

    நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் முத்துப்பாண்டி 661 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்


  • 14:07 (IST) 12 Oct 2021
    நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் வெற்றி

    நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் முத்துப்பாண்டி 661 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்


  • 13:59 (IST) 12 Oct 2021
    குமராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி

    காட்டுமன்னார்கோயில் அடுத்த குமராட்சி ஒன்றியம் 19வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சங்கர், அதிமுக வேட்பாளர் சுந்தரமூர்த்தியை விட 181 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


  • 13:58 (IST) 12 Oct 2021
    குமராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி

    காட்டுமன்னார்கோயில் அடுத்த குமராட்சி ஒன்றியம் 19வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சங்கர், அதிமுக வேட்பாளர் சுந்தரமூர்த்தியை விட 181 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


  • 13:39 (IST) 12 Oct 2021
    2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர்கள் குழு பரிந்துரை

    இந்தியாவில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 13:24 (IST) 12 Oct 2021
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்

    திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் கடல் மணி என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


  • 13:20 (IST) 12 Oct 2021
    1 மணி நிலவரம் : ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

    மாவட்ட கவுன்சிலர்களுக்கான முடிவுகள் வெளியாகி வருகிறது. 47 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகிறது.


  • 12:36 (IST) 12 Oct 2021
    வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்

    உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய கோரிய வழக்குகளுக்கு பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  • 12:36 (IST) 12 Oct 2021
    தேர்தல் முடிவுகள் நிலவரம்

    9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை 159 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,428 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 12:33 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

    திமுக 52 இடங்களில் முன்னிலை வகுத்து வருகிறது. அதிமுக 4 இடங்களில் முன்னிலை வகுத்து வருகிறது.


  • 12:21 (IST) 12 Oct 2021
    2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி வெற்றி

    சிதம்பரம் தில்லைநாயகபுரம் ஊராட்சி தலைவர் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளர் மகாவதி வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


  • 12:18 (IST) 12 Oct 2021
    ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றிச் செல்வி வெற்றி

    ஒரத்தநாடு ஊராட்ச் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளார் வெற்றிச் செல்வி 1203 வாக்குகள் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளார்கள் டெபாசிட் இழப்பு


  • 11:47 (IST) 12 Oct 2021
    ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

    ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. திமுக 31 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் பாமக 1 இடத்திலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


  • 11:31 (IST) 12 Oct 2021
    பெட்டியின் சாவி தொலைந்ததால் பூட்டை உடைத்து திறந்த அதிகாரிகள்

    திருக்கோவிலூர் ஒன்றியத்தில் தபால் வாக்குகள் வைக்கப்பட்ட பெட்டியின் சாவி தொலைந்ததால், பூட்டை உடைத்து பெட்டியை திறந்து வாக்குகளை அதிகாரிகள் எண்ணியுள்ளனர்.


  • 11:24 (IST) 12 Oct 2021
    வாக்குச் சீட்டுக்கு பதில் பூத் சிலிப்பை ஓட்டுபெட்டியில் போட்ட வாக்காளர்கள்

    திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாய்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 1இல் வாக்களித்த 2 பேர், வேட்பாளிரிடம் உங்களுக்குத்தான் வாக்களித்தேன் என்பதை காட்டுவதற்காக வாக்குச்சீட்டை எடுத்துக்கொண்டு, பூத் சிலிப்பை வாக்குப்பெட்டியில் செலுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.


  • 11:23 (IST) 12 Oct 2021
    வாக்குச் சீட்டுக்கு பதில் பூத் சிலிப்பை ஓட்டுபெட்டியில் போட்ட வாக்காளர்கள்

    திருப்பத்தூர் மாவட்டம் கெஜ்ல்நாய்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 1இல் வாக்களித்த 2 பேர், வேட்பாளிரிடம் உங்களுக்குத்தான் வாக்களித்தேன் என்பதை காட்டுவதற்காக வாக்குச்சீட்டை எடுத்துக்கொண்டு, பூத் சிலிப்பை வாக்குப்பெட்டியில் செலுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.


  • 11:14 (IST) 12 Oct 2021
    வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டை

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை, சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.


  • 11:00 (IST) 12 Oct 2021
    'காலை உணவு தரவில்லை' - வாக்கு எண்ணும் ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், மாங்காடு பகுதியில் வாக்கு எண்ணும் பணியைத் தொடங்காமல் வாக்கு எண்ணும் மைய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உணவு, குடிநீர் வசதி செய்துத் தரவில்லை என்று கூறி மாங்காட்டில் வாக்கு எண்ணும் மைய பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2.30 மணி நேரமாக வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படவில்லை


  • 10:34 (IST) 12 Oct 2021
    வல்லம் ஒன்றியத்தில் 310 தபால் வாக்குகள் செல்லாது என அறிவிப்பு

    விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாத தபால் வாக்குகள் செல்லாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 10:05 (IST) 12 Oct 2021
    தாம்பரத்தில் வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தம்

    தாம்பரம் வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் முதலில் 3 ஊராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணுவதை பார்வையிட வந்த 3 ஊராட்சிகளின் முகவர்கள் நிற்கும் இடம் குறுகலாக இருந்ததால், அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்கள். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படாமல், பெட்டிகள் மேஜைகளில் வைக்கப்பட்டுள்ளன.


  • 09:51 (IST) 12 Oct 2021
    கரூரில் வாக்கு எண்ணும் பணி 1 மணி நேரமாக தாமதம்

    கரூரில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்கு எண்ணும் பணி தாமதம்.


  • 09:17 (IST) 12 Oct 2021
    பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

    குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கு அடிப்படை வசதி இல்லையென்றும், சமூக இடைவெளி இன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் முகவர்கள் புகார் அளிக்கின்றனர்.


  • 08:56 (IST) 12 Oct 2021
    வாக்குச்சீட்டுகள் வகைபிரித்தல் பெட்டியில் கட்சி சின்னம் இல்லை

    காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குச்சீட்டுகள் வகைபிரித்தல் பெட்டியில் பாமக, நாம் தமிழர் கட்சி சின்னங்கள் இல்லாததால் அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை, அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  • 08:16 (IST) 12 Oct 2021
    வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள்

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.


  • 08:16 (IST) 12 Oct 2021
    வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள்

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்!


  • 08:14 (IST) 12 Oct 2021
    திமுகவினர் போட்டியின்றி தேர்வு

    திமுகவைச் சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


  • 08:13 (IST) 12 Oct 2021
    வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள்

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.


Tamilnadu Local Body Election Local Body Polls
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment