சுழன்றடித்த திமுக சுனாமி: இதரக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டதால் வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது.

Tamil Nadu local body elections : தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் 12.10.2021 அன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டதால் வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையில் இருந்து வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள்

திமுக 987 இடங்களிலும், அ.இ.அ.தி.மு.க. 198 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள்

திமுக 133 இடங்களிலும், அ.இ.அ.தி.மு.க. 2 இடங்களிலும் முன்னணி வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 19

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் 180

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 412

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் 3162

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

நெல்லை மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 12

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 122

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் – 204

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 1731

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள் இதர கட்சியினர் வெற்றி விபரங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
(122)
திமுக கூட்டணி 91 இடங்களில் வெற்றி
திமுக – 83
காங்கிரஸ் – 6
மார்க்சிஸ்ட் – 1
விசிக – 1
அதிமுக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
அதிமுக – 13
பாஜக – 3
சுயேட்சை – 13
அமமுக – 2
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

தென்காசி மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 14

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 144

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் – 221

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 1905

வரிசை எண்பதவி திமுக கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் இதர கட்சி வெற்றி விபரங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
(144)
திமுக கூட்டணி 120 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
திமுக 95
காங்கிரஸ் 12
மதிமுக 13
13 சுயேட்சை – 9
அமமுக – 2
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 11

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 98

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் – 274

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 1938

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 16

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 154

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் – 359

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 2679

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

வேலூர் மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 14

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 138

கிராம ஊராட்சி தலைவர்களுக்கான மொத்த காலியிடங்கள் – 247

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 2079

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 13

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 127

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் – 288

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 2220

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 13

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 125

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் – 208

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 1078

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

விழுப்புரம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 28

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 293

கிராம ஊராட்சி தலைவர்களுக்கான மொத்த காலியிடங்கள் – 688

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான மொத்த பதவி இடங்கள் – 5088

வரிசை எண்பதவி திமுக வெற்றி பெற்ற இடங்கள் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்
01மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
02ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
03கிராம ஊராட்சி தலைவர்
04கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

மொத்தமாக 153 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 1421 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 3007 கிராம ஊராட்சி தலைவர்கள், 23211 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தபட்டது. முடிவுகள் தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 5 நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 137 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3221 நபர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கான முடிவுகள்

9 மாவட்டங்களில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் 138 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி அசத்தியது. அ.இ.அ.தி.மு.க. இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் இந்திய தேசிய காங்கிரஸ் 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனித்து போட்டியிட்ட பாமக ஒரு கவுன்சிலர் பதவியையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu local body elections dmk and allies sweep 9 district elections

Next Story
தொழிலாளர் மரணத்திற்கும் திமுக எம்பிக்கும் என்ன சம்பந்தம்? தீவிரமாகும் விசாரணை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X