தமிழகத்தில் எஞ்சியுள்ள மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனிக்குழுவை அமைத்துள்ளார்.
முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், விபி துரைசாமி, எம்.என்.ராஜா, பொது செயலர்கள் கே.டி.ராகவன், செல்வகுமார், ராம ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், செயலாளர் கார்த்தியாயினி, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கு.க.செல்வம், சம்பத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் கூறுகையில், மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கட்சியின் வெற்றி வாய்ப்புகளை ஆராயும். உறுப்பினர்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து பிரச்சார உத்திகள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை வகுப்பார்கள், ”என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil