Coimbatore, Madurai, Trichy News: கவின் ஆணவக் கொலை வழக்கு - பெண்ணின் தந்தையான எஸ்.ஐ சரவணன் கைது

Coimbatore, Madurai, Trichy News Live- 30 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 30 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saravanan arrest

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை

Advertisment

திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி காவல்துறை ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது. தொடர்ந்து 2வது நாளாக கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Jul 31, 2025 00:07 IST

    கவின் ஆணவக் கொலை வழக்கு - பெண்ணின் தந்தையான எஸ்.ஐ சரவணன் கைது

    நெல்லையில், கவின் ஆணவக் கொலை வழக்கில், பெண்ணின் தந்தையான எஸ்.ஐ சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, பெண்ணின் சகோதரர் சுர்ஜித், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • Jul 30, 2025 19:49 IST

    1300 ஆண்டுகள் பழமை... பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டுபிடிப்பு

    திண்டிவனம் அருகே பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்துப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அன்னம்புத்தூரில் ஏரிக்குள் சன்னியாசிமேடு பகுதியில் பழமை வாய்ந்த ஐயனார் சிற்பம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்துள்ளனர். 



  • Advertisment
    Advertisements
  • Jul 30, 2025 19:38 IST

    சொந்த செலவில் விளையாட்டு திடல் - திறந்து வைத்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

    ராணிப்பேட்டை கலவை மாம்பாக்கத்தில், போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மாற்றி, விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய விளையாட்டு திடலை தனது சொந்த செலவில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் அமைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் வரவேற்பு விளையாட்டு திடலை முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்



  • Jul 30, 2025 19:19 IST

    பவானிசாகர் அணையிலிருந்து 135 நாட்கள் பாசனத்திற்காக நீர் திறப்பு

    தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2025-2026-ம் ஆண்டு, முதல்போக பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாக 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 31.07.2025 முதல் 14.08.2025 முடிய நாளொன்றுக்கு 2300 கனஅடி/விநாடி வீதம் 15 நாட்கள் சிறப்பு நனைப்பிற்கு 2,980.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் 15.08.2025 முதல் 12.12.2025 முடிய 120 நாட்களுக்கு, முதல்போக நன்செய் பாசனத்திற்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 135 நாட்களுக்கு 26,827.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



  • Jul 30, 2025 17:51 IST

    கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு

    திருச்சியில் ஒலிம்பிக் அகாடமியின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்தார். 



  • Jul 30, 2025 17:30 IST

    கபிஸ்தலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு

    தஞ்சாவூரில் கபிஸ்தலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு பெண் கூச்சலிட்டதில் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், சதீஷ்குமார் என்பவனை பிடித்து காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.



  • Jul 30, 2025 16:42 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.10 லட்சம் கன அடியில் இருந்து 50,500 கன அடியாக குறைந்தது அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 50,500 கன அடியாக உள்ளது.



  • Jul 30, 2025 16:42 IST

    கொடைக்கானலில் 500 கிலோ பிளாஸ்டிக்குகள் அகற்றம்

    கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து இன்று ஒரே நாளில் 500 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றினர்.



  • Jul 30, 2025 16:08 IST

    உதகை - கூடலூர் நெடுஞ்சாலை - போக்குவரத்து சீரானது

    உதகை - கூடலூர் நெடுஞ்சாலையில், பைக்காரா என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு. சாலையில் சரிந்திருந்த மண் உடனடியாக அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.



  • Jul 30, 2025 15:16 IST

    நெல்லை ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

    திருநெல்வேலி கவின் ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.“விசாரணை பாரபட்சமற்றதாக இருப்பதை உறுதி செய்ய சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 



  • Jul 30, 2025 15:04 IST

    நாளை முதல் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி

    கோவை குற்றாலம் அருவியில் நாளை (ஜூலை 31) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ளப் பெருக்கு சீரானதை அடுத்து நாளை (ஜூலை 31) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • Jul 30, 2025 15:02 IST

    6 பேரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள்

    கற்குடி கிராமத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. குளத்தில் மீன் பாசி குத்தகை எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொல்ல முயன்றுள்ளனர். 2019ல் ஆட்டோவில் பயணித்த ஒருவரை லாரி ஏற்றி கொல்ல முயன்றபோது 6 பேர் உயிரிழந்த வழக்கில் நவாஸ்கான், சங்கிலி ஆகியோருக்கு தென்காசி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.



  • Jul 30, 2025 14:54 IST

    மாணவிக்கு 900 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் கிளை ஆணை

    சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிக்கு 900 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு 900 மதிப்பெண் வழங்கி எம்.பி.பி.எஸ். சீட் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை கீரனூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. சிவக்குமார் மகளுக்கு 900 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.



  • Jul 30, 2025 14:18 IST

    அஜித்குமார் மரண வழக்கில் கைதான காவலர்கள் 5 பேருக்கும் ஆக.13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

    அஜித்குமார் மரண வழக்கில் கைதான காவலர்கள் 5 பேருக்கும் ஆக.13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யபப்ட்டுள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு தொடர்பாக கைதான தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கரமணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானர். 5 காவலர்களுக்கும் நீதிமன்றக் காவலை நீட்டித்து மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jul 30, 2025 14:10 IST

    நாங்கள் முன்வைக்கும் அரசியல் காலத்தின், நிலத்தின், மக்களின் அரசியல்: சீமான் பேச்சு

    நாங்கள் முன்வைக்கும் அரசியல் காலத்தின், நிலத்தின், மக்களின் அரசியல் என திருச்சியில் சீமான் தெரிவித்துள்ளார். என்னை எதிர்த்து போராடும் அளவுக்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டன. உள்ளே பயந்து நடுங்குவார்கள்; ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். மாட்டோடு பேசுகிறேன் என்கிறார்கள்; அதற்கு அறிவு இருக்கிறது, அதனால் பேசுகிறேன் என்றும் கூறினார்.



  • Jul 30, 2025 14:09 IST

    டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    ஆகஸ்ட் 2ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு. ஆகஸ்ட் 5ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Jul 30, 2025 13:28 IST

    நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை: கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

    நெல்லையில் பட்டியல் இன இளைஞர் கவின் ஆணவக் கொலையில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு செய்துள்ளனர்.



  • Jul 30, 2025 13:17 IST

    ‘கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்’ - இ.பி.எஸ் விமர்சனம்

    கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி:  “இப்போது கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். தமிழனின் பெருமையை பறைசாற்றுவதே எங்கள் நோக்கம். கீழடி தொடர்பாக மத்திய அரசு கேட்கும் விளக்கத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும். என்ன விளக்கம் என்பதில் வெளிப்படையாக எதுவும் சொல்லப்படவில்லை. இரு பக்கமும் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. இருப்பினும், கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்கும்போது நாங்கள் துணை நிற்போம்” என்று கூறினார்.
    .



  • Jul 30, 2025 11:15 IST

    அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்

    போலீசார் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. 

    Video: Sun News 



  • Jul 30, 2025 10:51 IST

    நெல்லை கவின் ஆணவ கொலை: சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

    நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.



  • Jul 30, 2025 10:20 IST

    கூடலூர் எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம்

    நீலகிரி மாவட்டம் முழுவதும் பெய்துவரும் தொடர் கனமழையால் கூடலூர் எம்.ஜி.ஆர். அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.



  • Jul 30, 2025 09:47 IST

    பராமரிப்பு பணி: திருச்செந்தூரில் இன்று மின்தடை

    தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமிநகர், சூசைநகர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 30, 2025 09:11 IST

    குப்பை வண்டியில் வாக்காளர் அடையாள அட்டைகள்

    கடலூர் மாநகராட்சியின் குப்பை வண்டியில் 100க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தது. வாக்காளர் அடையாள அட்டைகளை யார் போட்டது என வட்டாட்சியர் விசாரணை நடத்திவருகின்றனர்.

     



  • Jul 30, 2025 09:11 IST

    கவின் உடலை வாங்க 3வது நாளாக உறவினர்கள் மறுப்பு

    நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 3வது நாளாக அவரது உறவினர்கள் மறுத்துவருகின்றனர். கவின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் நேற்று இரவு நடைபெற்ற 4 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவினின் உறவினர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

     



  • Jul 30, 2025 09:10 IST

    கீழணையில் இருந்து 1.06 லட்சம் கனஅடி நீர் திறப்பு

    தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வினாடிக்கு 1,06,526 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் 1.06 லட்சம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது.

     



  • Jul 30, 2025 09:10 IST

    கோவில்பட்டி: போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை

    கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சண்முகையா (வயது 36) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகையாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனை, ரூ.2,000 அபராதமும் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

     



  • Jul 30, 2025 09:10 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை நபரிடம் தீவிர விசாரணை

    திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது. தொடர்ந்து 2-வது நாளாக கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: