/indian-express-tamil/media/media_files/2025/07/04/mayiladuthurai-murder-2025-07-04-21-34-12.jpg)
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 10வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Jul 04, 2025 21:39 IST
மயிலாடுதுறையில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி படுகொலை
மயிலாடுதுறை, செம்பனார்கோவில் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Jul 04, 2025 20:06 IST
ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையத்திற்கு டெண்டர் கோரிய அரசு
குலசேகரபட்டினத்தில் ராக்கெட்டுகளுக்கான பொது தொழில்நுட்ப சேவை மையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கான அதிநவீன சோதனை மையமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
Jul 04, 2025 19:44 IST
கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார்
கள்ளக்குறிச்சியில், கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் புகார் தொடர்பாக போலீசாரிடம் முறையிட சென்ற போது, சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் தாக்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி தெரிவித்துள்ளார்.
-
Jul 04, 2025 19:01 IST
உரிமை கோரப்படாத 20 சடலங்கள் நல்லடக்கம்
தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத 20 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 13 ஆண் சடலங்கள், 7 பெண் சடலங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மாவட்ட எஸ்.பி.ராஜாராமன்.
-
Jul 04, 2025 18:32 IST
நாய் கடித்து சிறுமி காயம்
திருவள்ளூர் அடுத்த மப்பேடு கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி சந்திரிகா, பள்ளி முடிந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் காயம் டைந்துள்ளார். தற்போது அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
Jul 04, 2025 18:22 IST
உதகை அருகே பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான ஆசிரியர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆசிரியர் செந்தில் குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டது. 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஏற்கெனவே செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Jul 04, 2025 17:23 IST
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி திறப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் 52 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
-
Jul 04, 2025 16:24 IST
குலசேகரன்பட்டினம் ஏவுதளம்: திட்ட அறிக்கை தர அரசு டெண்டர்..!!
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட்டுகளுக்கான பொது தொழில்நுட்ப சேவை மையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது ஏவுதளம் அமைய உள்ளது. ராக்கெட்டுகள் தயார் செய்வது, சோதனை செய்வது போன்ற பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
Jul 04, 2025 15:52 IST
நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை வனப்பகுதியில் வனத்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் பிடிபட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. வன விலங்குகளின் இறைச்சியும் பறிமுதல்
-
Jul 04, 2025 13:22 IST
ரிதன்யாவின் மாமியார் கைது
தன்னை குடும்பத்தினர் துன்புறுத்துவதாக தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டுள்ளார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Jul 04, 2025 12:30 IST
ஒசூர் சிறுவன் கொலை வழக்கு: கல்லூரி மாணவி கைது
ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், மாதவன் தன் காதலியான கல்லூரி மாணவி ரதியுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்து விட்டதால் சிறுவனை காரில் கடத்தி கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. மாதேவன், மாதேவா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லூரி மாணவி ரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Jul 04, 2025 11:48 IST
இளம்பெண் கூட்டு பலாத்காரம் – 3 பேர் கைது
மதுரை, மேலூர் அருகே காதலனின் உதவியுடன் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் காதலன் தீபன்ராஜ் உள்பட மூவரை மேலூர் அனைத்து மகளிர் காவல்துறை கைது செய்துள்ளது
-
Jul 04, 2025 11:37 IST
இளம்பெண் தற்கொலை வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில் கைதான கணவர், மாமனார் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்ததற்கு ரிதன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், கணவர் கவின் குமார் தரப்பில் கால அவகாசம் கேட்ட நிலையில் விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
-
Jul 04, 2025 11:08 IST
பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் விசாரணை
திருப்புவனம் இளைஞர் அஜித்க்கும் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட நீதிபதி 3வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார். திருப்புவனம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் விசாரணைக்காக வருகை தந்துள்ளார்
-
Jul 04, 2025 10:39 IST
தேனியில் காவலர்கள் தாக்கிய நபர் தலைமறைவு
தேனி, தேவதானப்பட்டியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபரை காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தாக்குதலுக்கு உள்ளான ரமேஷ்-க்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ரமேஷ் தலைமறைவானதால் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல மணி நேரம் காத்திருந்தும் விசாரணை செய்ய முடியவில்லை
-
Jul 04, 2025 10:18 IST
21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசாரிடம் அடுத்தடுத்து மாணவிகள் புகார்
-
Jul 04, 2025 09:46 IST
நிகிதா இன்று ஆஜராக வாய்ப்பு
போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை. புகார் அளித்த நிகிதா விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பு
-
Jul 04, 2025 09:17 IST
கோவை கோவிலில் பிரசன்னா, சினேகா தம்பதி தரிசனம்
Credit: Sun News
#JustNow | கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா தம்பதி!
— Sun News (@sunnewstamil) July 4, 2025
பிரசன்னா - சினேகா தம்பதியுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி! #SunNews | #Kovai | #ActressSneha pic.twitter.com/s8vsH0k3c8 -
Jul 04, 2025 09:15 IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,615 கன அடியிலிருந்து 19,286 கன அடியாக அதிகரிப்பு. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக சரிவு. அணையிலிருந்து மொத்தம் 24 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
Jul 04, 2025 09:15 IST
விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை: கணவர் ஸ்டீபன்ராஜ் சரண்
திருவள்ளூர், திருநின்றவூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி பெண் கவுன்சிலர் கோமதியை, வெட்டி கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரண்
-
Jul 04, 2025 09:14 IST
சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு
ஈரோடு: குமலன்குட்டை பகுதியில் பிளஸ் 2 மாணவன் ஆதித்யா நேற்று சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு
அதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் இருவர் கைது. கைதான இருவரும் 17 வயதினர் என்பதால் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.