Coimbatore, Madurai, Trichy News Highlights: திருப்பூர் வழக்கறிஞர் கொலை வழக்கில் 5 பேர் சரண்

Coimbatore, Madurai, Trichy News Live- 28 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 28 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tirupur advocate murder

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 1.05 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

  • Jul 28, 2025 21:21 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை - கைது செய்யப்பட்டவரை காவலில் விசாரிக்க போலீசார் மனு

    திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை காவலில் விசாரிக்க திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீசார் மனு அளித்துள்ளனர்.



  • Jul 28, 2025 20:32 IST

    திருப்பூர் வழக்கறிஞர் கொலை வழக்கில் 5 பேர் சரண்

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொலை செய்யப்பட்ட முருகானந்தத்தின் சித்தப்பா உட்பட 5 பேர் சரணடைந்த நிலையில், முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



  • Advertisment
  • Jul 28, 2025 20:00 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,15,000 கன அடியில் இருந்து 1,25,000 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட விவாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Jul 28, 2025 19:55 IST

    ராமேஸ்வரத்தில் ஆட்டோவும் சரக்கு வாகனமும் மோதி விபத்து - 2 பேர் பலி 

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அக்காள்மடம் பகுதியில் ஆட்டோவும் சாக்கு வாகனமும் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பாவேஸ்வரன், சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 28, 2025 19:27 IST

    நெல்லை ஆணவக் கொலை - கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு

    நெல்லை அருகே கவின் (26) என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சுர்ஜித் (24) புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.ஐ.களாக உள்ள சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என சாலை மறியலில் ஈடுபட்ட கவினின் உறவினர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்



  • Jul 28, 2025 18:19 IST

    நாமக்கல் முட்டை விலை ஒரே நாளில் 30 காசுகள் சரிவு

    நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.20 ஆக குறைந்தது. இன்று ஒரே நாளில் 30 காசுகள் சரிவு. கடந்த 2 நாட்களில் 60 காசுகள் சரிந்துள்ளது



  • Jul 28, 2025 18:18 IST

    மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று இரவு 7 மணியளவில் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், 1.10 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது,



  • Jul 28, 2025 17:07 IST

    சாலை மறியல் போராட்டம் வாபஸ்

    நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலை வழக்கில், கொலை செய்த சுர்ஜிதின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்ததை அடுத்து முக்காணி பகுதியில் கடந்த 3 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெற்ப்பட்டது. எஸ்.ஐ.களாக உள்ள இருவரும் கைது செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்ட கவினின் உடலைப் பெற்றுக்கொள்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுர்ஜித் மற்றும் எஸ்.ஐ.கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Jul 28, 2025 16:33 IST

    மேலூர் மீன்பிடித்திருவிழா

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளம் கண்மாயில் இன்று பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்தனர். இது போன்ற மீன் பிடித் திருவிழாக்கள் நடத்தப்படுவதன் மூலம் தங்களது பகுதியில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.



  • Jul 28, 2025 15:34 IST

    மேலணைக்கு வரும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 90,000 கன அடியாக உள்ளது

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வரும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 90,000 கன அடியாக உள்ளது. காவிரிக்கு 22,700 கன அடி நீரும், கொள்ளிடத்திற்கு 67,100 கன அடி நீரும், கிளை வாய்க்கால்களுக்கு 200 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.

     



  • Jul 28, 2025 15:30 IST

    ஐடி ஊழியர் கொலை - 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    நெல்லையில் ஐடி ஊழியர் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்திற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் கவின் கொலை தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவல். 



  • Jul 28, 2025 14:04 IST

    பழனிசாமியின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கிறர்கள் - கண்கலங்கி பேசிய ராஜேந்திர பாலாஜி

    சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ பழனிசாமியின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கின்றனர்; தி.மு.க ஆட்சியில் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். என்னை மிரட்டி பணியவைக்க தி.மு.க நினைத்தது. சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்” என்று கண்கலங்கியபடி பேசினார்.



  • Jul 28, 2025 13:00 IST

    நெல்லை ஐ.டி ஊழியர் கொலை: பெற்றோரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் - உறவினர்கள் போராட்டம்

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐ.டி ஊழியர் கவினின் உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு உறவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல் அதிகாரிகளாக உள்ள சுர்ஜித்தின் பெற்றோரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் காவல் துறையில் இருப்பதால் தைரியமாக ஆணவக் கொலை செய்துள்ளார் சுர்ஜித் என்று கூறியுள்ளனர்.



  • Jul 28, 2025 11:56 IST

    ஐடி ஊழியர் கொலை –போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு

    நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான சுர்ஜித்தின் பெற்றோர் SI சரவணன்,SI கிருஷ்ணகுமாரி மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட  6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 



  • Jul 28, 2025 11:31 IST

    நெல்லை ஐடி ஊழியர் கொலை- உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

    நெல்லையில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கவின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கவின் காதலித்த பெண்ணின் தாய், தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்என உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். 



  • Jul 28, 2025 10:56 IST

    நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கொலை வழக்கு- 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

    நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலையான கவினும், அவர் காதலித்த பெண்ணும் பள்ளி படிக்கும்போது இருந்து பழகி உள்ளனர்.பள்ளி நட்பு காதலாக தொடர்ந்ததற்கு கைதான சுர்ஜித் எதிர்ப்பு தெரிவித்து, காதலைக் கைவிட வலியுறுத்தியும் கேட்காததால் கவின் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 
    கைதான சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இருவரும் சிறப்பு காவல் படையின் உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். சுர்ஜித் கொலை செய்ய அவரது பெற்றோர் தான் தூண்டியதாக கவினின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். 



  • Jul 28, 2025 10:24 IST

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோலாகலம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருக்கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டத்தின் ட்ரோன் காட்சிகள்



  • Jul 28, 2025 09:48 IST

    மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக திங்கள்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதமும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 82,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.



  • Jul 28, 2025 09:13 IST

    மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 25ம் தேதி மீண்டும் நிரம்பியது. இதனால், நீர் திறப்பும் விநாடிக்கு 75,400 கனஅடியிலிருந்து 1 லட்சத்து 400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம், 3வது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

     



  • Jul 28, 2025 09:12 IST

    செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

    மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

     



  • Jul 28, 2025 09:12 IST

    பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

    பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதள மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திலிருந்து 30-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி எஃப் 16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால் பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.



  • Jul 28, 2025 09:12 IST

    மதுரை: மாங்குளப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்குச் சொந்தமான மாங்குளக் கண்மாயில் இன்று மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: