Tamil Nadu Exit Poll Live: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Exit Poll 2024 Live Updates
இன்றைய 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கும். இன்று முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை, முடிவுகள் வெளியாகும் வரை, அடுத்த ஆட்சியை முடிவு செய்வதற்கு முன், நாட்டின் மனநிலையை மதிப்பிடுவதற்கு இந்த கருத்துக் கணிப்புகள் உதவும். இந்த லைவ் பக்கத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 02, 2024 11:04 IST7 தொகுதிகளில் கடும் இழுபறி
தமிழகத்தில் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் கடும் இழுபறி நிலவுவதாக தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன
1). வேலூர்
2). தருமபுரி
3). கள்ளக்குறிச்சி
4). ராமநாதபுரம்
5). திருநெல்வேலி
6). கோயம்புத்தூர்
7). புதுச்சேரி
-
Jun 02, 2024 11:01 ISTதந்தி டிவி கருத்துக்கணிப்பு
தி.மு.க கூட்டணி: 33–40 தொகுதிகள்
அ.தி.மு.க கூட்டணி: 0-2 தொகுதிகள்
பா.ஜ.க கூட்டணி: 0-5 தொகுதிகள்
-
Jun 02, 2024 10:57 ISTநாகப்பட்டினம் தொகுதி நிலவரம்
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கணித்துள்ளது. அ.தி.மு.க இரண்டாம் இடத்திலும், பா.ஜ.க மூன்றாம் இடத்திலும் வர வாய்ப்புள்ளது
-
Jun 02, 2024 10:50 ISTவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி நிலவரம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் இடத்தில் பா.ஜ.க.,வும், மூன்றாம் இடத்தில் அ.தி.மு.க.,வும் வர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது
-
Jun 01, 2024 23:19 ISTவேலூர்
வேலூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 35 சதவீதம், புதிய நீதி கட்சி 33 சதவீதம், அ.தி.மு.க 22 சதவீதம், பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 23:17 ISTகோவை
கோவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 31.5 சதவீதம், அ.தி.மு.க 31 சதவீதம், பா.ஜ.க 30.5 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 23:16 ISTநாமக்கல்
நாமக்கல் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, கொ.ம.தே.க 35 சதவீதம், அ.தி.மு.க 30 சதவீதம், பா.ஜ.க 21 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 23:13 ISTதேனி
தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 35 சதவீதம், அ.ம.மு.க 30 சதவீதம், அ.தி.மு.க 21 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 23:12 ISTதிருவண்ணாமலை
திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 44 சதவீதம், அ.தி.மு.க 30 சதவீதம், பா.ஜ.க 14 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:49 ISTஈரோடு
ஈரோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 43 சதவீதம், அ.தி.மு.க 35 சதவீதம், தா.மா.க 11 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:48 ISTவிழுப்புரம்
விழுப்புரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க 41 சதவீதம், அ.தி.மு.க 30 சதவீதம், பா.ம.க 16 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:47 ISTதென் சென்னை
தென் சென்னை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 37 சதவீதம், அ.தி.மு.க 30 சதவீதம், பா.ஜ.க 24 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:46 ISTபுதுச்சேரி
புதுச்சேரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 37 சதவீதம், பா.ஜ.க 35 சதவீதம் அ.தி.மு.க 14 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:45 ISTதிருப்பூர்
திருப்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.ஐ 37 சதவீதம், அ.தி.மு.க 32, பா.ஜ.க 23 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:43 ISTசிதம்பரம்
சிதம்பரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க 45 சதவீதம், அ.தி.மு.க 27, பா.ஜ.க 19 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:42 ISTஅரக்கோணம்
அரக்கோணம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 40 சதவீதம், அ.தி.மு.க 30, பா.ஜ.க 21 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:41 ISTசிவகங்கை
சிவகங்கை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 38 சதவீதம், அ.தி.மு.க 30, இ.ம.க.மு.க 23 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:39 ISTமதுரை
மதுரை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் 35 சதவீதம், அ.தி.மு.க 29, பா.ஜ.க 23 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:11 ISTகரூர்
கரூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 36 சதவீதம், அ.தி.மு.க 32 சதவீதம், பா.ஜ.க 23 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 21:09 ISTகாஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 40 சதவீதம், அ.தி.மு.க 32 சதவீதம், பா.ஜ.க 17 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 20:41 ISTபெரம்பலூர் தொகுதி நிலவரம்
பெரம்பலூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணி 38 சதவீதம், ஐஜேகே 27 சதவீதம், பாஜக அதிமுக 25 சதவீதம்,
-
Jun 01, 2024 20:40 ISTதிருச்சி தொகுதி நிலவரம்
திருச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணி மதிமுக 38 சதவீதம், அதிமுக 31 சதவீதம், பாஜக அமமுக 22, சதவீதம்,
-
Jun 01, 2024 20:39 ISTகன்னியாகுமரி தொகுதி நிலவரம்
கன்னியாகுமரிதொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணி காங்கிரஸ் 40 சதவீதம், பாஜக 34, சதவீதம், அதிமுக 16 சதவீதம்
-
Jun 01, 2024 20:38 ISTதிருவள்ளூர் தொகுதி நிலவரம்
திருவள்ளூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணி காங்கிரஸ் 37.4 சதவீதம், தேமுதிக 30.1, சதவீதம், பாஜக 15 சதவீதம்
-
Jun 01, 2024 20:36 ISTபொள்ளாச்சி தொகுதி நிலவரம்
பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 37 சதவீதம், அதிமுக 34, சதவீதம், பாஜக 22 சதவீதம்
-
Jun 01, 2024 20:36 ISTஆரணி தொகுதி நிலவரம்
ஆரணி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 41 சதவீதம், அதிமுக 33, சதவீதம், பாமக 18 சதவீதம்
-
Jun 01, 2024 20:34 ISTதஞ்சை தொகுதி நிலவரம்
தஞ்சை தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 42 சதவீதம், பாஜக 27 சதவீதம், தேமுதிக 24 சதவீதம்
-
Jun 01, 2024 20:11 ISTதென்காசி தொகுதி நிலவரம்
தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 37 சதவீதம், அதிமுக கூட்டணி புதிய தமிழகம் 31 சதவீதம், தமகா 22 சதவீதம்
-
Jun 01, 2024 20:10 ISTதர்மபுரி தொகுதி நிலவரம்
தர்மபுரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 44 சதவீதம், பாமகவுக்கு 32 சதவீதம், அதிமுக கூட்டணிக்கு 26 சதவீதம்.
-
Jun 01, 2024 20:08 ISTதூத்துக்குடி தொகுதி நிலவரம்
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 44 சதவீதம், அதிமுக கூட்டணிக்கு 29 சதவீதம், தமகா 13 சதவீதம்
-
Jun 01, 2024 20:06 ISTவட சென்னை தொகுதி நிலவரம்
வட சென்னை தொகுதியில் தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு நிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதில் திமுக கூட்டணி 40 சதவீதம், அதிமுக 32 சதவீதம், பாஜகவுக்கு 12 சதவீதம்,
-
Jun 01, 2024 20:04 ISTநெல்லை தொகுதி நிலவரம்
நெல்லை தொகுதியில் தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு நிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதில் திமுக கூட்டணி காங்கிரஸ் 35 சதவீதம், பாஜகவுக்கு 34 சதவீதம், அதிமுக 21 சதவீதம்
-
Jun 01, 2024 19:56 ISTகடலூர் தொகுதி நிலவரம்
கடலூர் தொகுதியில் தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு நிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதில் திமுக கூட்டணிக்கு 38 சதவீதம், பாமகவுக்கு 27 சதவீதம், தேமுதிக 23 சதவீதம்
-
Jun 01, 2024 19:54 ISTமத்திய சென்னை தொகுதி நிலவரம்
மத்திய சென்னை தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி , 41 சதவீதம், பாஜக 26 சதவீதம், அதிமுக கூட்டணியில் தேமுதிக 22 சதவீதம்,
-
Jun 01, 2024 19:53 ISTதிண்டுக்கல் தொகுதி நிலவரம்
திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி சிபிஎம், 40 சதவீதம், அதிமுக எஸ்.டி பி.ஐ 32 சதவீதம், பாமக 17 சதவீதம்
-
Jun 01, 2024 19:52 ISTகள்ளக்குறிச்சி தொகுதி நிலவரம்
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு, 39 சதவீதம், அதிமுக 36 சதவீதம், பாமக 16 சதவீதம்
-
Jun 01, 2024 19:51 ISTசேலம் தொகுதி நிலவரம்
சேலம் தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு, 41 சதவீதம், தேமுதிக 36 சதவீதம், பாமக 13 சதவீதம்
-
Jun 01, 2024 19:50 ISTராமநாதபுரம் தொகுதி நிலவரம்
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் ஐயூஎம்.எல் 35 சதவீதம், சுயேச்சை ஒ.பி.எஸ் 33, அதிமுக 22 சதவீதம்
-
Jun 01, 2024 19:48 ISTவிருதுநகர் தொகுதி நிலவரம்
விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு, 36 சதவீதம், தேமுதிக 27 சதவீதம், பாமக 21 சதவீதம்
-
Jun 01, 2024 19:47 ISTமயிலாடுதுறை தொகுதி நிலவரம்
மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு, 36 சதவீதம், அதிமுக 27 சதவீதம், பாமக 20 சதவீதம்
-
Jun 01, 2024 19:46 ISTஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிலவரம்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு, 44 சதவீதம், அதிமுக 29 சதவீதம், தமிழ் மாநில காங்கிரஸ் 13 சதவீதம்
-
Jun 01, 2024 19:45 ISTகிருஷ்ணகிரி தொகுதி நிலவரம்
கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு, 40 சதவீதம், அதிமுக 36 சதவீதம், பாஜக 11 சதவீதம்
-
Jun 01, 2024 19:44 ISTநீலகிரி தொகுதியில் தி.மு.க
நீலகிரி தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு, 36 சதவீதம், அதிமுக 31 சதவீதம், பாஜக 24 சதவீதம்
-
Jun 01, 2024 19:13 ISTஏ.பி.பி.நாடு கருத்துக்கணிப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் 37 - 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என ஏபிபி நாடு வெளியிட்டுள்ளது.
-
Jun 01, 2024 19:10 ISTதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு சாதகம்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் திமுக 39-39, அதிமுக 0-2, பாஜக 1-3 என்றும், இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுக 33-37, அதிமுக0-2, பாஜக 2-4 என்றும், ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டள்ள கருத்துக்கணிப்பில், திமுக 39-39, அதிமுக 0-2, பாஜக 1-3 வெளியிட்டுள்ளது.
-
Jun 01, 2024 18:42 ISTலோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா தமிழ்நாட்டிற்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தொடங்கியுள்ளன. அவர்களின் கணிப்பின்படி, 39 இடங்களில், இந்திய அணி 33-37 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-4 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2024 18:34 ISTதேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நிலவரம்
தந்தி டிவி வெளியிட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 34 இடங்களிலும், பா.ஜக. கூட்டணி புதுச்சேரி தொகுதியிலும், அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், 5 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்திருந்து.
-
Jun 01, 2024 17:36 ISTதமிழ்நாட்டில் 2014, 2019 கணிப்பு எவ்வளவு துல்லியமாக இருந்தது?
2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 44.9% வாக்குகளைப் பெற்று 37 இடங்களைக் கைப்பற்றி தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளை தவிடு பொடியாகியது. ஆனால், 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தி.மு.க 38 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.
தமிழகத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அதிகபட்சமாக 4 இடங்களிலும் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதன்படி, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் (தேனி) வென்றது.
-
Jun 01, 2024 17:22 ISTதமிழ்நாடு தேர்தல் 2024: 2014 மற்றும் 2019ல் நடந்தது என்ன?
2014 மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க 39 தொகுதிகளில் 37 இடங்களில் வென்றது. பாஜக 1 இடத்திலும் (கன்னியாகுமரி), பா.ம.க 1 இடத்திலும் (தருமபுரி) வெற்றி பெற்றன.
2019ல் தி.மு.க கூட்டணி மொத்தமாக 38 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க 24 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, சி.பி.ஐ(எம்) 2, சி.பி.ஐ 2, த.மு.மு.க 1, அ.தி.மு.க 1 என வெற்றி பெற்றன. பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
-
Jun 01, 2024 17:07 ISTமுக்கிய கட்சிகள் போட்டி - தொகுதி பங்கீடு
தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகிய முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், பா.ஜ.க தங்களது வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் பல மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
காங்கிரஸ் (9 இடங்கள்), சிபிஐ(எம்) (2), சிபிஐ (2), இந்திய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் ஆகிய 8 கட்சிகள் கொண்ட கூட்டணியில் தி.மு.க 22 இடங்களில் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க- (34 இடங்கள்) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (5 இடங்கள்) மற்றும் நான்கு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும், அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிய தமிழகம் மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
மறுபுறம், பா.ஜ.க 23 இடங்களை இலக்காகக் கொண்டுள்ளது. அ.ம.மு.க, ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை - பா.ஜ.க ஆதரவு) பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே.வாசன்) ஆகிய ஒன்பது கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.