Tamil Nadu Chennai News Update: பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 6- வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கு, ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கு விற்பனை.
மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். பா.ஜ.க கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது அமமுக.ஒரு தொகுதிதான் கேட்டோம். ஆனால், 2 வைத்துக்கொள்ளுங்கள் என பாஜக கூறியதாக தொகுதிப் பங்கீடுக்குப் பின்பு பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 21, 2024 22:58 ISTஇப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் கைது செய்வதும் சாதாரண விஷயமாகிவிட்டது: ராகுல் காந்தி
“ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி, கட்சிகளை உடைத்து, நிறுவனங்களை மிரட்டி, பிரதான எதிர்க்கட்சியின் கணக்கை முடக்கி வைத்தது போதாதென்று, ‘பிசாசு சக்தி’க்கு, இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்வதும் சாதாரண விஷயம் ஆகிவிட்டது” என கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான X இல் பதிவிட்டுள்ளார்.
-
Mar 21, 2024 22:22 ISTகெஜ்ரிவால் கைது; மு.க.ஸ்டாலின் கண்டனம்
"தேர்தல் 2024க்கு முன்னதாக, பத்தாண்டு கால தோல்விகள் மற்றும் உடனடி தோல்வியின் பயத்தால் உந்தப்பட்டு, பாசிச பா.ஜ.க அரசு, ஹேமந்த் சோரனை அநியாயமாகக் குறிவைத்ததைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் வெறுக்கத்தக்க ஆழத்தில் மூழ்கியுள்ளது” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று X இல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"எதிர்க்கட்சித் தலைவர்களை பா.ஜ.க அரசு இடைவிடாமல் துன்புறுத்துவது ஒரு அவநம்பிக்கையான சூனிய வேட்டையை அடித்து நொறுக்குகிறது. இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டுகிறது, பா.ஜ.க.,வின் உண்மை நிறத்தை அவிழ்த்துவிடுகிறது. ஆனால் அவர்களின் பயனற்ற கைதுகள் எங்கள் உறுதியை மட்டுமே தூண்டுகின்றன, இந்தியா கூட்டணியின் வெற்றியை வலுப்படுத்துகின்றன" என்று ஸ்டாலின் எழுதினார்.
-
Mar 21, 2024 21:54 ISTஅரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்: டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, "அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இருந்தார், டெல்லி முதல்வராக இருக்கிறார், எப்போதும் டெல்லி முதல்வராக இருப்பார். அவர் ராஜினாமா செய்ய மாட்டார்" என்று டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி கூறினார்.
-
Mar 21, 2024 21:40 ISTஅரவிந்த் கெஜ்ரிவால் கைது; இன்றிரவு உச்ச நீதிமன்றத்தில் அவசர விசாரணைக்கு ஆம் ஆத்மி கோரிக்கை
"டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை ரத்து செய்யக் கோரி நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இன்றிரவு உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணைக்கு நாங்கள் கேட்டுள்ளோம்" என்று டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி தெரிவித்துள்ளார். கலால் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட்டார்.
-
Mar 21, 2024 21:37 ISTஅரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டுள்ளார்
-
Mar 21, 2024 21:16 ISTத.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது
-
Mar 21, 2024 21:16 ISTத.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது
-
Mar 21, 2024 20:39 ISTஉச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கை இன்றிரவு விசாரிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. -
Mar 21, 2024 19:59 ISTகைது ஆகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு, வாரண்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைதாக வாய்ப்பு. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்தார்.
-
Mar 21, 2024 18:56 ISTகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியாகிறது
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகிறது.
-
Mar 21, 2024 18:54 ISTவிளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் போட்டியிட சுமார் 130 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தொகுதி 10 இடங்கள் மற்றும் விளவங்கோடு தொகுதிக்கும் சேர்த்து 290 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று டெல்லியில் கூட உள்ளது. விருப்ப மனு அளித்தவர்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னரே முடிவெடுக்கப்படும். இதனிடையே, தமிழக காங். தலைவர் செல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து தொண்டர்கள் தங்களுக்கு சீட் கேட்டு வருகின்றனர்.
-
Mar 21, 2024 18:49 ISTமேகதாது அணையை தமிழகம் ஏற்கும் காலம் வரும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்: “மேகதாது அணையைக் கட்டுவதற்கு தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் காலம் வரும். மேகதாது அணையைக் கட்டவே நீர்பாசனத்துறை அமைச்சர் பதவியை நான் ஏற்றிருக்கிறேன். கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
-
Mar 21, 2024 18:30 ISTபா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை போட்டி
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், மத்திய சென்னையில் வினோஜ் செல்வம் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் ஏ.சி சண்முகம் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரியில் சி. நரசிம்மன் போட்டியிடுகிறார். நீலகிரி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிருக்கிறார். கோவையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். பெரம்பலூரில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் நயினார் நாகேண்திரன் போட்டியிடுகிறார். கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 21, 2024 18:10 ISTஆளுநர் ரவி உடனே பதவி விலக வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
ஆளுநர் ரவி தனது பொறுப்பில் இருந்து உடனே விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை; தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
-
Mar 21, 2024 17:50 ISTஇரட்டை இலை சின்னம் வழக்கு: தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி புதிய மனு அளித்துள்ளார். அதில் கட்சி உடைந்திருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
Mar 21, 2024 17:48 ISTதிருச்சியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நாளை (22.03.2024) தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நாளை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெறும் முதல் பிரசார கூட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி,பெரம்பலூர் வேட்பாளரை ஆதரித்து நாளை வாக்கு சேகரிக்கிறார்.
-
Mar 21, 2024 17:17 ISTமக்களவைத் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
-
Mar 21, 2024 17:11 ISTஆளுநருக்கு உச்சநீதிமன்றம் குட்டியது வலிக்காது - அமைச்சர் ரகுபதி
“உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு சரியான குட்டு, தலையில் குட்டியுள்ளது. ஆனால், அவருக்கு அது வலிக்காது. ஏனென்றால், அவருக்கு இரும்பு தலையர் என்று பெயர். ஆளுநர் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு ஆளுநர் இருக்கிறார் என்றால், எந்த அளவுக்கு மோசமான நிலை என்பதை அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
Mar 21, 2024 17:03 ISTதேர்தல் பத்திர எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கியது எஸ்.பி.ஐ
தேர்தல் பத்திர எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆணையத்திடம் வழங்க உச்ச நீதிமன்றம் எஸ்.பி.ஐ-க்கு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15 வரையிலான தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வழங்கியது.
-
Mar 21, 2024 16:56 ISTஈஷா யோகா மையத்தில் தற்போது வரை 6 பேர் மாயம் - ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்
கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றியவர்களில் தற்போது வரை 6 பேர் மாயமாகி உள்ளனர்; விசாரணை நடைபெற்று வருகிறது. தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த நிலையில், மாயமானதாக தென்காசியைச் சேர்ந்த விவசாயி திருமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Mar 21, 2024 15:35 ISTஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு
பொன்முடி பதவிப்பிரமாண விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நாளை வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. குற்றவாளி தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த நபர் குற்றவாளி இல்லையென்றே அர்த்தம். நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Mar 21, 2024 15:35 ISTதமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலையளிக்கிறது. தீர்ப்பை உச்சநீதிமன்றமே நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநருக்கு இதில் என்ன வேலை?
ஆளுநர் என்பது வெறும் அடையாள பதவி மட்டுமே. குற்றவாளி தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநர் இதில் தலையிட முடியுமா?. பொன்முடிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டுமா? என்று தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை அடுக்கியுள்ளது.
-
Mar 21, 2024 15:34 ISTபொன்முடி வழக்கில் தமிழக அரசு வாதம்
"தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட எம்.எல்.ஏ-வுக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டியதில்லை. சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்ததால், பொன்முடி தகுதி நீக்கத்திற்கு உள்ளானார். பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உத்தரவிட வேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.
-
Mar 21, 2024 15:05 ISTதமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜ.க போட்டி
39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், 4 தொகுதியில் பா.ஜ.க சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகவும், 24 தொகுதி வேட்பாளர்களுடன் இன்று டெல்லி செல்வதாகவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Mar 21, 2024 15:05 IST"பா.ஜ.க கூட்டணியில் ஓ.பி.எஸ்?"
ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது, அவரே விரைவில் அறிவிப்பார் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Mar 21, 2024 15:02 ISTஇ.பி.எஸ்-க்கு பதில் அவைத்தலைவர் கையெழுத்து - மனு
தேர்தல் ஆவணங்களில் அ.தி.மு.க சார்பில் இ.பி.எஸ்-க்கு பதில், அவைத்தலைவர் கையொப்பமிட உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
"நிலுவை வழக்குகளில், பொதுக்குழு தீர்மானம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், இ.பி.எஸ் கையொப்பமிட்ட படிவங்கள் செல்லாமல் போகலாம். அதனால் தேர்தலில் வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
ஏற்கனவே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவர் கைவிரல் ரேகை பதிவிட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாமல் இருக்க, அவைத்தலைவர் கையொப்பமிட அதிகாரம் வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 21, 2024 14:26 ISTஎந்த சின்னம் கொடுத்தாலும் வெல்வோம் - சீமான்
"நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை, வெற்றி பெறுவோம். எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்." என்று சீமான் கூறியுள்ளார்.
-
Mar 21, 2024 14:25 ISTமத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
2023-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை தடை செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு நிலுவையில் இருக்கும் போது, உண்மை சரிபார்ப்பு குழுவை செயல்படுத்த கூடாது என்று கூறி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
Mar 21, 2024 14:24 ISTவிக்சித் பாரத் வாட்ஸ்அப் செய்தி அனுப்புவதை நிறுத்த உத்தரவு
வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Mar 21, 2024 13:52 ISTதி.மு.க வேட்பாளர் ஒருவரை கைது செய்ய திட்டம்; துரைமுருகன் புகார்
திமுக வேட்பாளரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்: துரைமுருகன்#DuraiMurugan | #DMK | #Elections2024 pic.twitter.com/GLjIJml3R2
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 21, 2024 -
Mar 21, 2024 13:49 ISTஇன்று மாலைக்குள் பாஜக தொகுதி பங்கீடு இறுதியாகும்- வானதி சீனிவாசன்
பாஜக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது
இன்று மாலைக்குள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் - வானதி சீனிவாசன்
-
Mar 21, 2024 13:34 ISTபிரேமலதா விஜயகாந்த் பேட்டி
வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்
ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்போம்
நேர்காணல் நடத்தி முறைப்படி வேட்பாளர்களை தேர்வு செய்வோம்
தேமுதிக விரும்பிய தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளது
பிரேமலதா விஜயகாந்த்
-
Mar 21, 2024 13:31 ISTமார்ச் 23-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 23) நண்பகல் 12 மணிக்கு அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
-
Mar 21, 2024 13:30 ISTதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி
சமூக வலைதளங்களில் போலி தகவல்களை பரப்புவோர்களை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
21,229 உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் இதுவரை 15,113 துப்பாக்கிகளை உரியவர்கள் ஒப்படைத்துள்ளனர்
தபால் வாக்குகள் செலுத்த தகுதியுடையோர் இதுவரை தங்களது வாக்குகளை தபாலில் அனுப்பி வந்த நிலையில், அம்முறை மாற்றப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிக்கும் தேதியில் அதற்கான மையத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் தபால் வாக்குகளை செலுத்த வேண்டும்"
- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி
-
Mar 21, 2024 13:08 ISTராகுல் காந்தி பேட்டி
ஒரு குடும்பத்தின் ஏடிஎம் கார்டு, வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டால் என்ன நிலையில் இருக்கும்?;
தற்போது காங்கிரஸ் கட்சி அந்த நிலையை தான் சந்தித்து வருகிறது”
மக்களவைத் தேர்தல் நெருங்கும் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டுள்ளது;
இதனால் எங்களால் தொலைக்காட்சி, செய்தித்தாள் விளம்பரங்கள் கூட செய்ய முடியவில்லை;
இவ்வளவு பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது ஆனால் தலைமை தேர்தல் ஆணையம், ஊடகங்கள் போன்றவை இந்த விவகாரத்தை பெரிதாகவில்லை
- டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பேட்டி
-
Mar 21, 2024 13:07 ISTபிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன்;
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை (மார்ச்22) வெளியிடப்படும்;
மார்ச் 24-ம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பரப்புரையை தேமுதிக தொடங்குகிறது;
மார்ச் 25-ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்கள்
- சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
-
Mar 21, 2024 13:05 ISTதுரை வைகோ பேட்டி
திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதால் அனைத்து தொகுதிகளிலும் பெறுவோம்
- திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ பேட்டி
-
Mar 21, 2024 13:04 ISTவிஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்
குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்
ஒப்புதல் அளித்த கோப்புகள் சிபிஐ.யின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தகவல்
வழக்கின் விசாரணை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைப்பு
-
Mar 21, 2024 12:44 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மரியாதை
#BREAKING || தேமுதிக அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை
— Thanthi TV (@ThanthiTV) March 21, 2024
விஜயகாந்த் நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மரியாதை#DMDK #AIADMK #EPS #vijayakanth pic.twitter.com/a4fEuwdKag -
Mar 21, 2024 12:41 ISTசோனியா காந்தி பேட்டி
காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கினால் எப்படி தேர்தலில் செலவிடுவது?;
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது;
தேர்தல் பத்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தியுள்ளது;
பாஜகவின் இந்த நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது
- டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி
-
Mar 21, 2024 12:40 ISTதிமுக கூட்டணிக்கு ஆதரவு
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அறிவித்துள்ளார்
-
Mar 21, 2024 12:10 ISTமக்களவை தேர்தல் - திமுக vs அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள்
▪️ வடசென்னை
▪️ தென்சென்னை
▪️ ஸ்ரீபெரும்புதூர்
▪️ காஞ்சிபுரம்
▪️ அரக்கோணம்
▪️ வேலூர்
▪️ தர்மபுரி
▪️ திருவண்ணாமலை
▪️ ஆரணி
▪️ கள்ளக்குறிச்சி
▪️ சேலம்
▪️ ஈரோடு
▪️ நீலகிரி
▪️ கோவை
▪️ பொள்ளாச்சி
▪️ பெரம்பலூர்
-
Mar 21, 2024 12:09 ISTபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி
முந்தைய தேர்தல்களில் டிவி சின்னத்தில் போட்டியிட்டோம். எனவே முன்னுரிமை அடிப்படையில் அச்சின்னத்தை ஒதுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிவி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம் - கிருஷ்ணசாமி பேட்டி
-
Mar 21, 2024 12:09 ISTதேர்தலில் திமுக கூட்டணிக்கு நடிகர் கருணாஸின் கட்சி ஆதரவு
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
Mar 21, 2024 12:09 ISTமல்லிகார்ஜூன கார்கே பேட்டி
மத்திய பாஜக அரசு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்றுள்ளது
மக்களவைத் தேர்தல் நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடைபெற வேண்டும்
- டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
-
Mar 21, 2024 11:47 IST18 தொகுதிகளில் நேரடி போட்டி
மக்களவை தேர்தலில் அதிமுக- திமுக 18 தொகுதிகளில் நேரடி போட்டி
-
Mar 21, 2024 11:46 ISTநெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை
அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை- எடப்பாடி பழனிசாமி
-
Mar 21, 2024 11:42 ISTவிளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்
விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிப்பு
-
Mar 21, 2024 11:35 ISTஅ.தி.மு.க 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது
வேலூர் - பசுபதி தருமபுரி - டாக்டர் அசோகன் திருவண்ணாமலை - எம்.கலியபொருமாள் கள்ளக்குறிச்சி - ரா. குமரகுரு நீலகிரி (தனி) - லோகேஷ் தமிழ்ச்செல்வன் திருப்பூர் - அருணாச்சலம்
-
Mar 21, 2024 11:34 ISTஅ.தி.மு.க 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்
அ.தி.மு.க 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் திருச்சி - பி. கருப்பையா பொள்ளாச்சி - அப்புசாமி (எ) கார்த்திகேயன் மயிலாடுதுறை - பாபு புதுச்சேரி - தமிழரசன் ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார் தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி சிவகங்கை - சேகர்தாஸ் பெரம்பலூர் - சந்திரமோகன் திருநெல்வேலி - சிம்லா முத்துசோழன் கோவை - சிங்கை ராமச்சந்திரன் கன்னியாகுமரி - பசுலியான் நாசரேத்து
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.