Advertisment

Lok Sabha Election 2024 Results AIADMK Alliance Live Updates: வெற்றியை தவறவிட்ட அ.தி.மு.க : தொண்டர்களுக்கு இ.பி.எஸ் கடிதம்

Lok Sabha Election 2024 Results AIADMK Alliance In Tamil : நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றியை தவறவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Lok Sabha Election Aiadmk Alliance Results in Tamil

நாடாளுமன்ற தேர்தல் -2024 : அ.தி.மு.க கூட்டணி

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1-ந் தேதி முடிவடைந்தது. இதில் தமிழகத்தில் மொத்தமாக 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று (ஜூன் 4) தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி என 3 பிரதான கூட்டணி போட்டியிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.

Advertisment

அ.தி.மு.க கூட்டணி

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க, பா.ம.க, மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு சென்றுவிட்டது. அதனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க மட்டுமே பிரதான கட்சியாக இடம் பெற்றுள்ளது. அ.தி.மு.க தலைமையிலான இந்த கூட்டணியில், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ, மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் அ.தி.மு.க 32 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகள் தலா ஒரு இடத்திலும், தே.மு.தி.க 5 இடங்களிலும் போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து 4 தொகுதிகள் வரை முன்னிலையில் வந்த அ.தி.மு.க நேரம் செல்ல செல்ல, முன்னிலை தொகுதிகளை இழந்த நிலையில், மதியம் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணியில் உள்ள விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 7 ஆயிரம் வாக்குகளுக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து இருந்தார். 

அ.தி.மு.க கூட்டணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேறிய விஜயபிரபாகரன் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சரிவை சந்தித்த நிலையில், 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இதன் மூலம் அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் 39 பாண்டிச்சேரி 1 என 40 தொகுதிகளிலும் வெற்றியை தவறவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றபின் அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

  • Jun 04, 2024 20:04 IST
    கடின உழைப்பிற்கும் தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? இ.பி.எஸ் வருத்தம்

    உங்கள் கடின உழைப்பிற்கும் தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று நனைத்து கண் கலங்குகிறேன். இன்னும் தீவிரமாகவும் தீர்க்கமாகவும், பணியாற்றி நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றிநடைபோட உறுதி ஏற்கிறேன் என்று தோல்வி குறித்து இ.பி.எஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.



  • Jun 04, 2024 19:27 IST
    பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது : தொண்டர்களுக்கு இ.பி.எஸ் ஆறுதல்

    இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும் என கூறியுள்ளார்.



  • Jun 04, 2024 17:39 IST
    விளவங்கோடு இடைத்தேர்தல் : அ.தி.மு.க.வுக்கு 4-வது இடம்

    விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் 60% வாக்குகளுடன் வெற்றி முகத்தில் உள்ளார் அதிமுகவை நான்காவது இடத்திற்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி



  • Jun 04, 2024 15:53 IST
    விருதுநகர் தொகுதியில், பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி

    விருதுநகர் தொகுதியில், பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூர் 260876 வாக்குகள், தேமுதிகவின் விஜயபிரபாகரன், 257033 வாக்குகள், பாஜகவின் ராதிகா 112001 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் கௌசிக், 51364 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூர் 3843 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 14:35 IST
    மாறி மாறி முன்னிலை : கவனம் ஈர்க்கும் விருதுநகர் தொகுதி

    விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி அடுத்தடுத்த சுற்று முடிவுகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருவரும் மாறிமாறி முன்னிலை



  • Jun 04, 2024 14:07 IST
    விருதுநகர் தொகுதியில் முன்னேறும் காங்கிரஸ்

    விருதுநகர் தொகுதியில், 7 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையில் முன்னலையில் இருந்த தே.மு.தி.கவின் விஜயபிரபாகரன், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் 5761 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 13:30 IST
    விஜய பிரபாகரன் மீண்டும் முன்னிலை

    விருதுநகர் தொகுதியில் சற்று பின்னடைவை சந்தித்த தேமுதிகவின் விஜய பிரபாகரன் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை விட 461 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 13:00 IST
    விஜயபிரபாகரன், 3365 வாக்குகள் முன்னிலை

    அ.தி.மு.க கூட்டணியில் முன்னணியில உள்ள ஒரே தொகுதியான விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், 3365 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்



  • Jun 04, 2024 12:35 IST
    3 தொகுதிகளில் 4வது இடம் , 7 தொகுதிகளில் 3வது இடம் : அ.தி.மு.க கடும் பின்னடைவு

    பகல் 12:20 நிலவரப்படி அதிமுக 3 தொகுதிகளில் 4வது இடத்தையும், 7 தொகுதிகளில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதியில் 4 வது இடத்தையும், தென்சென்னை, வேலூர், தருமபுரி, நீலகிரி, கோவை, தேனி ராமநாதபுரம், விளவங்கோடு இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்தில் உள்ளது



  • Jun 04, 2024 11:54 IST
    10 தொகுதிகளில் அ.தி.மு.க 3-வது இடம்

    சென்னை தெற்கு, மத்திய சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.



  • Jun 04, 2024 11:41 IST
    சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க 4-வது இடம்

    நாடாளுமன்ற தேர்தலில், 3 தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அ.தி.மு.க விளவங்காடு இடைத்தேர்தலிலும் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



  • Jun 04, 2024 11:09 IST
    அ.தி.மு.க அதிர்ச்சி; 3 தொகுதிகளில் 4-வது இடம்

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் அ.தி.மு.க சென்னை தொகுதிகளில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 



  • Jun 04, 2024 10:54 IST
    விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் தொடர்ந்து முன்னிலை

    அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், 25375  பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், திமுக வேட்பாளர் 24917 பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.



  • Jun 04, 2024 10:19 IST
    சென்னை தொகுதிகளில் அ.தி.மு.க 3-வது இடம்

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை பல தொகுதிகளில் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை தொகுதிகளில் அ.தி.மு.க 3-வது இடத்தை பிடித்துள்ளது. பா.ஜ.க. 2-வது இடத்தை பிடித்துள்ளது.



  • Jun 04, 2024 09:43 IST
    விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் முன்னிலை

    அதிமுக கூட்டணியில் நட்சத்திர தொகுதியாக இருக்கும் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 09:38 IST
    முன்னிலை பெற்ற தொகுதிகளில் பின்னடைவு

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த அ.தி.மு.க கூட்டணி காலை 9.30 மணி நிலரப்படி முன்னிலை பெற்ற தொகுதிகள் 3-ல் பின்னடைவை சந்தித்துள்ளது. 



  • Jun 04, 2024 09:15 IST
    வட சென்னை முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை - அதிமுக 3-வது இடம்

    வட சென்னை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், திமுக 5750 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், பா.ஜ.க 2468 வாக்குகள் பெற்று 2-வது இடத்திலும், அ.தி.மு.க 1054 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.



  • Jun 04, 2024 09:09 IST
    கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலை

    மும்முனை போட்டி என்று சொல்லப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் தொடக்கத்தில் தி.மு.க வேட்பாளர் மலையாரசன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க வேட்பாளர் மலையாரசன் முன்னிலை பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 09:03 IST
    கரூர் தொகுதியில் முன்னிலை

    கரூர் தொகுதியில அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேல் முன்னலை பெற்றுள்ளார். 



  • Jun 04, 2024 08:57 IST
    மறைந்த ஜெயலலிதா : சறுக்கிய அ.தி.மு.க

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தல், 2019 மக்களவை தேர்தல், 2021 தமிழக சட்டமன்ற தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்துள்ளது.



  • Jun 04, 2024 08:55 IST
    மக்களவை தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வாக்கு சதவீதம்

    2014-ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க 45 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இதன் மூலம் மக்களவை தேர்தலில் ஒரு கட்சி அதிகபட்ச வாக்குகள் வாங்கியது இதுவே முதல்முறையாகும் 



  • Jun 04, 2024 08:53 IST
    12 தேர்தல்களில் 5 அதிகபட்ச வெற்றிகள்

    இதுவரை 12 மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள அ.தி.மு.க இதில் 5 முறை அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. 



  • Jun 04, 2024 08:52 IST
    32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க

    முதல் பேரவை தேர்தலை 1977-ம் ஆண்டு சந்தித்த அதிமுக இதுவரை 47 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது.



  • Jun 04, 2024 08:50 IST
    ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலை

    ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட அருண்குமார் முன்னிலை பெற்றுள்ளார். இதன் மூலம் தற்போது 39 தொகுதிகளில் அ.தி.மு.க 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.



  • Jun 04, 2024 08:34 IST
    தென்காசி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி முன்னிலை

    அ.தி.மு.க கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னலை பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 08:11 IST
    அ.தி.மு.க - தி.மு.க - பா.ஜ.க : மும்முனை போட்டியாக கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு போட்டியிட்ட நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க சார்பில் தேவதாஸ், தி.மு.க சார்பில் மலையரசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி தொகுதி கவனம் ஈர்த்துள்ளது. 



  • Jun 04, 2024 08:09 IST
    நட்சத்திர தொகுதியாக விருதுநகர்

    2024 நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ஜ.க சார்பில் நடிகை ராதிகா போட்டியிட்டுள்ளார். இதன் மூலம் விருதுநகர் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.



  • Jun 04, 2024 06:35 IST
    2019 தேர்தலில் சரிந்த அதிமுக

    2019ல் திமுக தலைமையிலான கூட்டணி, மாநிலத்தில் அபார வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அக்கட்சி 24 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    அதிமுக 19.15% வாக்குகளுடன் 1 இடத்தில் மட்டுமே வென்றது, திமுக 33.12% வாக்குகளைப் பெற்றது. அதன் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்று 12.46% வாக்குகள் பெற்றது.

    ஆனால், பா.ஜ.,வுக்கு, 3.58 சதவீத வாக்கு மட்டுமே கிடைத்தது.



  • Jun 04, 2024 06:35 IST
    2014 தேர்தல் வெற்றி

    2014 தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்காத பாஜகவும், பாமகவும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க.விற்கு வாக்குப் பங்கின் அடிப்படையில் இது ஒரு பரந்த வெற்றியாகும் - அக்கட்சி 44.28% வாக்குகளைப் பெற்ற நிலையில், திமுகவுக்கு வெறும் 23.57% வாக்குகள் கிடைத்தன.

    5.48% வாக்குகளைப் பெற்ற பாஜக அடுத்த பெரிய கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 4.31% வாக்குகளைப் பெற்றது.



  • Jun 04, 2024 06:34 IST
    அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

    கடந்த அக்டோபரில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முடிவுக்கு கொண்டு வந்தது.

    இந்த மக்களவை தேர்தலில் அதிமுக புதிய தமிழகம், மற்றும் எஸ்.டி.பி.ஐ  உள்ளிட்ட மைனாரிட்டி கட்சிகளின் கூட்டணியை ஒன்றாக இணைத்துள்ளது. தேமுதிகவுக்கு 5 இடங்களையும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐக்கு தலா ஒரு இடத்தையும், தனக்கென 32  இடங்களையும் அதிமுக ஒதுக்கியுள்ளது.



Pmk General Election Lok Sabha Polls Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment