Advertisment

Lok Sabha Election 2024 Results DMK Alliance Updates: வரலாறு படைத்த தி.மு.க அணி; 40 தொகுதிகளிலும் மெகா வெற்றி

Lok Sabha Election 2024 Results DMK Alliance Updates : மக்களவை தேர்தலில், தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

மக்களவைத் தேர்தல் தி.மு.க கூட்டணி 2024: லைவ் அப்டேட்ஸ்

Lok Sabha Election 2024 Results DMK Alliance  Updates: மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது, இந்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த தி.மு.க கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

Advertisment

இந்நிலையில் திமுக- 21,  காங்கிரஸ்- 10, விசிக- 2,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2 , ம.தி.மு.க-1 , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1 , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- 1 இடங்களில் நேற்று வெற்றி பெற்றது. தி.மு.க வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடியில் 4,26, 617 பெற்று வெற்றி பெற்றார்.

 நீலகிரி தொகுதியில் ஆ.ராசா 4,73,212 பெற்றும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர். பாலு 7,58,611 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கடந்த 2019ம் தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வென்றது. இந்த முறை புதுச்சேரியையும் சேர்த்து 40க்கு 40 தொகுகுதியை தி.மு.க கூட்டணி  கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று எல்லா தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.  

 

  • Jun 04, 2024 19:43 IST
    தஞ்சாவூரில் தி.மு.க வெற்றி

    தஞ்சாவூரில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் முரசொலி 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 



  • Jun 04, 2024 19:26 IST
    40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி: ஸ்டாலின்

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். அனைவருக்கும் நன்றி - மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்



  • Jun 04, 2024 19:22 IST
    நாகப்பட்டினம் : சி.பி.ஐ வேட்பாளர் வெற்றி

    நாகையில் வை.செல்வராஜ் வெற்றியை உறுதி செய்துள்ளார்.  நாகை தொகுதியில் சி.பி.ஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 4,07,106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 18:54 IST
    தூத்துக்குடி தி.மு.க வெற்றி: வாக்குகளின் முழு விவரம்

    தி.மு.க சார்பாக போட்டியிட்ட கனிமொழி – 4,26, 617 (54.38%)  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணி- 1,23,214 ( 15.71%)  வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரவினா ரூத் ஜெயின் - 1,01,065 ( 12.88%) வாக்குகள் பெற்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட  விஜயசீலன் எஸ்.டி.ஆர் 9,38,69 ( 11.96%) வாக்குகள் பெற்றுள்ளார்.  



  • Jun 04, 2024 18:45 IST
    வெற்றியை உறுதி செய்தார் ஆ.ராசா

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றியை உறுதி செய்தார் .ராசா. சுமார் 1.97 லட்சம் வாக்குகள் பெற்று  முன்னிலையில் உள்ளார்.



  • Jun 04, 2024 17:28 IST
    மதுரை தொகுதி: 4 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்ற சு.வெங்கடேசன்

    மதுரை தொகுதி : வாக்கு எண்ணிக்கை விபரம் : சி.பி.எம் - 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க - 2,20,914  வாக்குகள் பெற்று 2ம் இடம் இடத்திலும்,  அ.தி.மு.க - 2,04,804 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும் உள்ளது.  நாம் தமிழர் கட்சி - 92,879 வாக்குகள் பெற்றுள்ளது.  2.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 16:43 IST
    தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட  தி.மு.க வேட்பாளர் கனிமொழி  2,83,690 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 



  • Jun 04, 2024 16:22 IST
    விருதுநகர் மக்களவைத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து முன்னிலை

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில்  11வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ,  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார்.  



  • Jun 04, 2024 16:01 IST
    திருநெல்வேலி: காங்கிரஸ் முன்னிலை

    திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நடந்து முடிந்த 12-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி – 2,71,251  வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. 



  • Jun 04, 2024 15:49 IST
    சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி: இனிப்பு ஊட்டி பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து

    மதுரையில் வெற்றி பெற்ற சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 



  • Jun 04, 2024 15:46 IST
    தருமபுரி தொகுதி: தி.மு.க முன்னிலை

    தருமபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்த செளமியா அன்புமணி பின்தங்கி உள்ளார். திமுக வேட்பாளர் ஆ.மணி 2.82 லட்சம் வாக்குகள் பெற்று, 6,925 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 



  • Jun 04, 2024 15:42 IST
    பெரம்பலூர் தொகுதி: தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு 3 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு, 12 - வது சுற்றின் முடிவில் முன்னிலையில் உள்ளார்.  தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு - 3, 58,306 வாக்குகள் இதுவரை பெற்றுள்ளார்.  



  • Jun 04, 2024 15:01 IST
    கனிமொழி வெற்றி உறுதி

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட  தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது. 2,43, 946 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார். எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளதால் கனிமொழி வெற்றி உறுதியாகி உள்ளது. 



  • Jun 04, 2024 14:46 IST
    திருவள்ளூர்: காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை

    திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 2,03,708 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 



  • Jun 04, 2024 14:39 IST
    நீலகிரி தொகுதி: 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா முன்னிலை

    நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் .ராசா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.



  • Jun 04, 2024 14:25 IST
    திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது

    காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் பி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் (தேமுதிக. தேசிய ஜனநாயகக் கூட்டணி) அதிமுக கூட்டணி கட்சியான விஜயபிரபாகரனை முந்திக்கொண்டு, தர்மபுரியில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.



  • Jun 04, 2024 14:05 IST
    கணபதி ராஜ்குமார் முன்னிலை வகிக்கிறார்

    கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 24,614 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயர் ராஜ்குமார், 2020ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.



  • Jun 04, 2024 13:41 IST
    தயாநிதி மாறன் 63,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பாஜகவின் வினோஜ் செல்வத்தை எதிர்த்து 63,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    இதுவரை கிடைத்த வாக்குகள்

    தயாநிதி மாறன் - 1,18,675 (திமுக)

    வினோஜ் பி செல்வம் - 55,044 (பாஜக)

    பி பார்த்தசாரதி - 21,152 (தேமுதிக)



  • Jun 04, 2024 13:09 IST
    நாமக்கல்லில் திமுகவின் மாதேஸ்வரன் விஎஸ் வெறும் 3216 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்

    நாமக்கல்லில் திமுகவின் மாதேஸ்வரன் VS வெறும் 3216 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார், இது தற்போது தமிழகத்தில் திமுகவின் மிகக் குறைந்த முன்னிலைகளில் ஒன்றாகும். 

    இதற்கிடையில், திமுக கடும் போருக்கு அஞ்சும் மற்ற அனைத்து முக்கிய இடங்களும் அவர்களுக்கு ஆதரவாக தங்கள் நிலைகளை மேம்படுத்தியுள்ளன. வேலூர், திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ளன.

    கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் குமரகுருவை விட திமுகவின் மயிலரசன் 22339 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திருநெல்வேலியில் பாஜகவின் பிரபல வேட்பாளர் நைனார் நாகேந்திரனை விட காங்கிரஸின் ராபர்ட் புரூஸ் சி 39,732 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாகேந்திரன் சற்றுமுன் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 

    தேனியில் திமுகவின் தங்க தமிழ்செல்வன் 53,451 வாக்குகள் பெற்று அதிமுகவின் டிடிவி தினகரனை விட முன்னிலையில் உள்ளார்.



  • Jun 04, 2024 13:03 IST
    கனிமொழி தூத்துக்குடியில் நல்ல வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணியை எதிர்த்து 1,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.



  • Jun 04, 2024 12:55 IST
    கரூரில் அதிமுக பின்தங்கியுள்ளது

    கரூரில் அதிமுகவின் தங்கவேல் எல். காங்கிரஸின் ஜோதிமணி தற்போது அந்த இடத்தைப் பிடித்துள்ளார் 



  • Jun 04, 2024 12:53 IST
    சென்னை தெற்கு தொகுதி புதுப்பிப்பு

    சுற்று 3 முடிவில்: பதிவான மொத்த வாக்குகள்: 1,74,150

    திமுக: 79,355

    பாஜக: 50,885

    அதிமுக: 26,110

    NTK: 12,176



  • Jun 04, 2024 12:23 IST
    தி.மு.க கூட்டணி கட்சிகள் முன்னிலை நிலவரம்

    தென்காசி தி.மு.க முன்னிலை, சிவகங்கை காங்கிரஸ் முன்னிலை, கரூர் காங்கிரஸ் முன்னிலை, கோவை தி.மு.க முன்னிலை, விழுப்புரம் (தனி)  வி.சி.க முன்னிலை, திருச்சியில் தி.மு.க முன்னிலை



  • Jun 04, 2024 11:22 IST
    அமைச்சர் கே.என்.நேருவின் மகன் முன்னிலை

    பெரம்பலூரில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு முன்னிலை வகித்து வருகிறார். திமுக அருண் நேரு: 78587 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 



  • Jun 04, 2024 11:21 IST
    தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் : எந்த தொகுதிகளில் முன்னிலை ?

    பிரகாஷ் முன்னிலை ( ஈரோடு), அண்ணாதுரை முன்னிலை ( திருவண்ணாமலை) , மலையரசன்  முன்னிலை ( கள்ளக்குறிச்சி) , கோபிநாத் முன்னிலை ( கிருஷ்ணகிரி தொகுதி) , ராணி ஸ்ரீ குமார் முன்னிலை ( தென்காசி) , ராபர்ட் புரூஸ் முன்னிலை ( நெல்லை), தரணிவேந்தன் முன்னிலை ( ஆரணி) , செல்வம் முன்னிலை ( காஞ்சிபுரம்), அருண் நேரு முன்னிலை ( பெரம்பலூர்). 



  • Jun 04, 2024 10:51 IST
    அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டம்: ஸ்டாலின் வாழ்க என தொண்டர்கள் ஆரவாரம்

    தமிழகத்தில் தி.மு.க கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகமாக நடனம் ஆடி, ஸ்டாலின் வாழ்க என கோஷங்கள் எழுப்பி கொண்டாடி வருகின்றனர்.  



  • Jun 04, 2024 10:19 IST
    விஜய் வசந்த் முன்னிலை

    கன்னியாகுமரியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட விஜய் வசந்த் முன்னிலை. 



  • Jun 04, 2024 10:17 IST
    பெரம்பலூரில் தி.மு.க முன்னிலை

    பெரம்பலூரில் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு முன்னிலை:  திமுக - 29,276 வாக்குகள் பெற்று முன்னிலை 



  • Jun 04, 2024 09:50 IST
    38 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை

    தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பில் வெளியான தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.  



  • Jun 04, 2024 09:13 IST
    திருமாவளவன் முன்னிலை

    தி.மு.க கூட்டணியில் உள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க தலைவர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார். 



  • Jun 04, 2024 09:03 IST
    தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்

    டி.ஆர்.பாலு முன்னிலை ( தி.மு.க) , கணபதி ராஜ்குமார் ( தி.மு.க)  முன்னிலை, வை.செல்வராஜ் முன்னிலை, தங்க தமிழ்ச்செல்வன் ( தி.மு.க)  முன்னிலை, டி.எம்.செல்வகணபதி முன்னிலை (தி.மு.க), சச்சிதானந்தம் முன்னிலை ( இடது சாரிகள்) , விஷ்ணுபிரசாத் முன்னிலை ( காங்கிரஸ்) , செல்வகணபதி (தி.மு.க) முன்னிலை. 



  • Jun 04, 2024 08:47 IST
    திருச்சி மக்களவைத் தொகுதி: தபால் வாக்குகள்: ம.தி.மு.க முன்னிலை

    திருச்சி மக்களவைத் தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ முன்னிலை.



  • Jun 04, 2024 08:45 IST
    முக்கிய தொகுதிகளில் தி.மு.க முன்னிலை

    தமிழகத்தில் மதுரை, நாகப்பட்டினம், திருச்சி, நீலகிரி, காஞ்சிபுரம் சென்னை, வடசென்னை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் தபால் வாக்கில் தி.மு.க கூட்டணி முன்னிலையில் உள்ளது.



  • Jun 04, 2024 08:40 IST
    மதுரையில் சி.பி.எம் வேட்பாளர் முன்னிலை

    மதுரையில் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை. சி.பி.எம்  : 38,  அ.தி.மு.க : 20 , பா.ஜ.க : 15 , நாம் தமிழர் கட்சி : 7



  • Jun 04, 2024 08:35 IST
    தி.மு.க கூட்டணி 3 இடங்களில் முன்னிலை

    காலை 08.30 மணி நிலவரப்படி தி.மு.க கூட்டணி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 



  • Jun 04, 2024 08:24 IST
    தபால் வாக்குகள் : தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை

    தபால் வாக்கு எண்ணிக்கை : தி.மு.க வேட்பாளர்கள் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), கனிமொழி (தூத்துக்குடி) முன்னிலையில் உள்ளனர்.  



  • Jun 04, 2024 08:05 IST
    வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: சற்று நேரத்தில் வெளியாகும் தி.மு.க கூட்டணி முன்னிலை நிலவரம்

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. தி.மு.க கூட்டணி கட்சிகள் எந்த இடங்களில் முன்னிலையில் உள்ளது என்ற விவரங்கள் சற்று நேரத்தில் வெளியாகும்.  



  • Jun 04, 2024 07:57 IST
    தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற மக்களவை தேர்தல்கள்

    1980, 1996, 2004, 2019 மக்களவை தேர்தல்களில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.



  • Jun 04, 2024 07:43 IST
    12 மக்களவைத் தேர்தல் : 6 முறை வெற்றி பெற்ற தி.மு.க கூட்டணி

    கடந்த 50 ஆண்டுகளில் 12 மக்களவை தேர்தல்களைத் தமிழ்நாடு சந்தித்துள்ளது. இதில் தி.மு.க , அ. தி.மு.க தலைமையிலான அணிகள் தலா 6 முறை பெரும்பான்மை வெற்றிகளை பெற்றுள்ளன.



  • Jun 04, 2024 07:37 IST
    தி.மு.க கூட்டணி கட்சிகள் : 2019 வெற்றி நிலவரம்

    திமுக - 18, காங்கிரஸ் - 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, இந்திய கம்யூனிஸ்டு - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, மதிமுக - 1, ஐஜேகே - 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, இந்திய ஜனநாயக கட்சி - 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1.



  • Jun 04, 2024 07:27 IST
    2019 மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி

    2019 மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.



  • Jun 04, 2024 07:27 IST
    2019: மக்களவை தேர்தல் : தி.மு.க கூட்டணி

    தி.மு.க 20 தொகுதிகள், காங்கிரஸ் 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள்- 2 தொகுதிகள் , இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள்,இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதியும்,  கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 1 தொகுதியும்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டது. 



  • Jun 04, 2024 06:42 IST
    கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையாகுமா?

    மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    தமிழகத்தில் திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.



  • Jun 04, 2024 06:41 IST
    2019 தேர்தல் முடிவுகள்

    2019ல் திமுக தலைமையிலான கூட்டணி, மாநிலத்தில் அபார வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அக்கட்சி 24 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    அதிமுக 19.15% வாக்குகளுடன் 1 இடத்தில் மட்டுமே வென்றது, திமுக 33.12% வாக்குகளைப் பெற்றது. அதன் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்று 12.46% வாக்குகள் பெற்றது.

    ஆனால், பா.ஜ.,வுக்கு, 3.58 சதவீத வாக்கு மட்டுமே கிடைத்தது.



  • Jun 04, 2024 06:41 IST
    திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி திமுக தலைமையில் உள்ளது, இதில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், வைகோவின் ம.தி.மு.க., கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை அடங்கும்.

    திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், மதிமுகவுக்கு திருச்சியும், காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளுடன், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் காண்கிறது.



Pmk Lok Sabha Lok Sabha Polls
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment