தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 69.72% வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் ஜுன் 4 (செவ்வாய்கிழமை) எண்ணப்பட்டன.
தி.மு.க கூட்டணியில் இந்தியா கூட்டணி கட்சிகள் 8 கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணியில் 4 கட்சிகளும், பா.ஜ.க கூட்டணியில் 9 கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டுள்ளது.
தி.மு.க கூட்டணியில் தி.மு.க (22), சி.பி.எம், சி.பி.ஐ தலா 2 தொகுதிகள், திருமாவளவனின் வி.சி.க 2 தொகுதிகள், வைகோவின் ம.தி.மு.க 1 தொகுதி, இ.யூ.மு.லீ, கொ.ம.தே.க தலா 1 தொகுதியில் போட்டியிட்டுள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் அ.தி. மு.க (34), தே.மு.திக 5 தொகுதிகள், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுள்ளன.
பா.ஜ.க கூட்டணியில் பா.ஜ.க(23), பா.ம.க 10 தொகுதிகள், த.மா.கா 3 தொகுதிகள், அ.ம.மு.க 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்டுள்ளார். இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை பா.ஜ.க சின்னத்தில் போட்டியிட்டுள்ளன.
இந்நிலையில்,வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, நா.த.க கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
சில இடங்களில் இந்தக் கட்சிகள் டெபாசிட் இழந்தனர். முன்னதாக, விருதுநகர், தருமபுரியில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர் இடையே கடும் நிலவியது. விருதுநகரில் தே.மு.தி.க விஜயபிரபாகரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதே போல் தருமபுரியில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.கவின் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், இறுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ. மணி 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
Jun 05, 2024 10:40 ISTவிடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்
மக்களவை தேர்தலில் 8% வாக்குகள் பெற்ற விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் .இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும் என தகவல். 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதன் மூலம் மாநில கட்சி அங்கீகாரம் பெற உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் என தகவல் வி.சி.க, நா.த.கவிற்கு மாநில கட்சி அங்கீகாரம்.
-
Jun 05, 2024 10:23 ISTகரூர் தொகுதி: ஜோதிமணி வெற்றி
மக்களவை தேர்தல் 2024 - கரூர் தொகுதியில் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி (காங்கிரஸ்) அமோக வெற்றி!
-
Jun 05, 2024 10:20 ISTகடலூர் தொகுதியில் விஷ்ணு பிரசாத் வெற்றி
மக்களவை தேர்தல் 2024 - கடலூர் தொகுதியில் 1.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ( காங்கிரஸ்) வெற்றிபெற்றுள்ளார்.
-
Jun 05, 2024 10:19 ISTதிருப்பூர் தொகுதியில் சுப்பராயன் வெற்றி
மக்களவை தேர்தல் 2024 - திருப்பூர் தொகுதியில் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் வெற்றிபெற்றுள்ளார்.
-
Jun 05, 2024 09:59 ISTதிருச்சி தொகுதி துரை வைகோ அமோக வெற்றி
மக்களவை தேர்தல் 2024 - திருச்சி தொகுதியில் 3.13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ அமோக வெற்றி.
-
Jun 05, 2024 08:52 ISTசேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வெற்றி
மக்களவை தேர்தல் 2024 - சேலம் தொகுதியில் 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அமோக வெற்றி!
-
Jun 05, 2024 08:30 ISTகிருஷ்ணகிரி தொகுதியில் 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி
| மக்களவை தேர்தல் 2024 - கிருஷ்ணகிரி தொகுதியில் 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கோபிநாத் அமோக வெற்றி!
-
Jun 05, 2024 07:57 ISTதென் சென்னை தொகுதி: தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி
மக்களவை தேர்தல் 2024 - தென் சென்னை தொகுதியில் 2.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி.
-
Jun 04, 2024 21:13 IST40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி- அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை
40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
-
Jun 04, 2024 20:56 ISTவிழுப்புரத்தில் வி.சி.க வெற்றி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்
-
Jun 04, 2024 20:12 ISTடெல்லியில் நாளை நடக்கும் 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன் - மு.க.ஸ்டாலின்
ஆட்சி அமைக்க தேவையான தனி பெரும்பான்மை இடங்களை கூட கிடைக்காத அளவிற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை நடக்கும் 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Jun 04, 2024 19:32 ISTமோடி எதிர்ப்பு அலை பல மாநிலங்களில் உள்ளது; தமிழகத்தில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
மோடியின் எதிர்ப்பு அலை பல மாநிலங்களில் உள்ளது; தமிழகத்தில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Jun 04, 2024 19:09 ISTதிருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கரூரில் ஜோதிமணி வெற்றி
திருவள்ளூர் தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றுள்ளார். கரூர் தொகுதியில் சிட்டிங் எம்.பி ஜோதிமணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
-
Jun 04, 2024 18:44 ISTசிவகங்கையில் 2-வது முறையாக கார்த்தி சிதம்பரம் வெற்றி
சிவகங்கை தொகுதியில் 2ஆவது முறையாக காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார்
-
Jun 04, 2024 18:10 ISTபாரிவேந்தர் பரிதாப தோல்வி
பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பரிதாப தோல்வி.
பெரம்பலூர் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் டெபாசிட் இழந்து பரிதாப தோல்வி. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை விட 4,20,941 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் நின்று 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர் தற்போது அதே வித்தியாசத்தில் பரிதாப தோல்வி
-
Jun 04, 2024 17:48 ISTதிருவள்ளூரில் காங். வெற்றி உறுதி
திருவள்ளூர் தொகுதியில் வெற்றியை உறுதி செய்தார் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில். இதுவரை 4,10,246 வாக்குகள் பெற்று, 2,90,824 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்
-
Jun 04, 2024 17:44 ISTவிருதுநகர் முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் மாணிக்கம் தாகூர் 2,49,609 வாக்குகள், விஜய பிரபாகரன் 2,41,803 வாக்குகள் பெற்றுள்ளனர். 7,806 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் முன்னிலை
-
Jun 04, 2024 17:22 ISTசௌமியா அன்புமணி தோல்வி
தருமபுரியில் சௌமியா அன்புமணி தோல்வி; தி.மு.க வேட்பாளர் மணி வெற்றி
தி.மு.க வேட்பாளர் மணி 3,89,837 வாக்குகள் பெற்றுள்ளார். சௌமியா அன்புமணி- மணி இடையே 18,524 வாக்குகள் வித்தியாசம்
-
Jun 04, 2024 16:33 ISTமாணிக்கம் தாகூர் முன்னிலை
11 சுற்றுகள் நிறைவு 563 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் பின்னடைவு
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை.
-
Jun 04, 2024 16:32 ISTதருமபுரி: திமுக மணி 13,703 வாக்குகள் முன்னிலை
சௌமியா அன்புமணி மீண்டும் பின்னடைவு, 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் முந்திய தி.மு.க வேட்பாளர் மணி. மணி 13,703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
-
Jun 04, 2024 16:06 IST40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி முன்னிலை
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி முன்னிலை. விருதுநகர், தருமபுரியில் கடும் இழுபறி நீடித்த நிலையில் தி.மு.க கூட்டணி முன்னிலை
-
Jun 04, 2024 15:56 ISTதருமபுரி: தி.மு.க மணி 6,925 வாக்குகள் முன்னிலை
தருமபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்த செளமியா அன்புமணி பின்னடைவு திமுக வேட்பாளர் ஆ.மணி 2.82 லட்சம் வாக்குகள் பெற்று, 6,925 வாக்குகள் முன்னிலை
-
Jun 04, 2024 15:41 ISTசௌமியா அன்புமணி பின்னடைவு
தருமபுரியில் சௌமியா அன்புமணி பின்னடைவு; தி.மு.க வேட்பாளர் மணி முன்னிலை
தி.மு.க வேட்பாளர் மணி - 3,00,237வாக்குகள்
பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி- 2,89,094 வாக்குகள்
-
Jun 04, 2024 14:33 ISTபொள்ளாச்சி தொகுதி நிலவரம்
தொகுதி - பொள்ளாச்சி
திமுக ஈஸ்வர சாமி - 144841
அதிமுக கார்த்திகேயன் - 93293
பாரதிய ஜனதா வசந்தகுமார் 66354
நாதக சுரேஷ்குமார் - 18011
6வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர். ஈஸ்வரசாமி 51548 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
-
Jun 04, 2024 13:51 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தியானம்
விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம்
விருதுநகர் தொகுதியில் தேமுதிக விஜயபிரபாகர் மற்றும் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மாறி மாறி முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம்
#ElectionUpdate | விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம்#SunNews | #ElectionResults2024 | #மக்கள்தீர்ப்பு2024 | #ElectionResultsWithSunNews pic.twitter.com/ni2o7zuJs6
— Sun News (@sunnewstamil) June 4, 2024 -
Jun 04, 2024 13:44 IST1 லட்சம் வாக்குகள் வித்தியாசம் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர்கள்
தமிழகத்தில் திண்டுக்கல் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 40,356 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் விஜய சீலன் 31,866 வாக்குகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 899 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக 45,757 வாக்குகளை பெற்றுள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் டி .ஆர். பாலு ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
-
Jun 04, 2024 13:42 ISTசசிகாந்த் செந்தில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 2,03,708 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
-
Jun 04, 2024 13:39 ISTநாமக்கல் தொகுதி தி.மு.க கூட்டணி முன்னிலை
நாமக்கல் தொகுதி 5வது சுற்று முடிவுகள்
தி.மு.க., கூட்டணி ( கொ.ம.தே.க.,) மாதேஸ்வரன், 1,15,908.
அ.தி.மு.க., தமிழ்மணி, 1,14,091.
பா.ஜ.க, ராமலிங்கம், 22,821.
நா.த.க., 22,796.
நோட்டா, 2,974.
தி.மு.க., 1,817. ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது
-
Jun 04, 2024 13:36 ISTதமிழகத்தில் முதன்முறையாக தனித்து 10 சதவீத வாக்கை கடந்தது பா.ஜ.க
தமிழகத்தில் முதன்முறையாக பா.ஜ.க தனித்து 10 சதவீத வாக்கை கடந்தது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற வாக்கு சதவீதம், தி.மு.க - 25.09%, அ.தி.மு.க- 20.94%, பா.ஜ.க- 10.02%, காங்கிரஸ் - 10.68%
-
Jun 04, 2024 13:17 ISTவிஜய பிரபாகரன் மீண்டும் முன்னிலை
விருதுநகரில் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் 32 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்
-
Jun 04, 2024 13:13 ISTதிருப்பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்னிலை
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை பெற்றுள்ளார்
-
Jun 04, 2024 12:50 ISTவிருதுநகரில் விஜய பிரபாகரன் பின்னடைவு
விருதுநகரில் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்
-
Jun 04, 2024 12:37 ISTதமிழ்நாட்டில் பா.ஜ.க நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு
தமிழ்நாட்டில் பா.ஜ.க நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு
கோவை – அண்ணாமலை
நீலகிரி - எல்.முருகன்
நெல்லை - நயினார் நாகேந்திரன்
தென் சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
வட சென்னை - பால் கனகராஜ்
கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்
தஞ்சை - கருப்பு முருகானந்தம்
சிதம்பரம் - கார்த்திகாயினி
மதுரை - ராம சீனிவாசன்
-
Jun 04, 2024 12:18 IST350 வாக்குகள் பெற்றுள்ள மன்சூர் அலிகான்
வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் 350 வாக்குகள் பெற்றுள்ளார்
-
Jun 04, 2024 12:01 ISTதி.மு.க.,வுக்கு எதிராக நேரடியாக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் பா.ஜ.க பின்னடைவு
தி.மு.க.,வுக்கு எதிராக நேரடியாக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் பா.ஜ.க பின்னடைவை சந்தித்து வருகிறது.
கோவை, சென்னை வடக்கு, தென்சென்னை, மத்திய சென்னை, நீலகிரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்து வருகிறது
-
Jun 04, 2024 11:45 ISTசசிகாந்த், செல்வகணபதி முன்னிலை
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை.
சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி முன்னிலை
செல்வகணபதி- 30,265
அதிமுக - 23,740
-
Jun 04, 2024 11:19 ISTமத்திய அமைச்சரவையில் இடம்?
சவுமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் சவுமியா அன்புமணி மட்டுமே முன்னிலை வகித்து வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் சவுமியா அன்புமணிக்கு இடம் கிடைக்க வாய்ப்பு என தகவல்
-
Jun 04, 2024 11:18 ISTசௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை
தருமபுரியில் சௌமியா அன்புமணி 70,000 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை
சௌமியா அன்புமணி - 72,761
திமுக ஆர். மணி- 53,379
அதிமுக அசோகன் - 45,473 -
Jun 04, 2024 11:03 ISTமக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும்.. தமிழிசை பேட்டி
மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்வதுதான் வேட்பாளரின் கடமை - தமிழிசை சௌந்தரராஜன்
-
Jun 04, 2024 10:59 ISTதங்கர் பச்சான் 3-வது இடம்
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 70,127 வாக்குகள் பெற்று முன்னிலை. தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 47,603 வாக்குகள் பெற்று 2ம் இடத்திலும், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 23,368 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும் உள்ளனர்!
-
Jun 04, 2024 10:57 ISTவிருதுநகர் மக்களவைத் தொகுதி - 2 சுற்றுகள் நிறைவு
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். 458 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பின்னடைவு. பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 11,121 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார்.
-
Jun 04, 2024 10:53 ISTசென்னை தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலை
வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலை.
வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி 35,087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. மத்திய சென்னை தொகுதியில் 25,581 வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறன் முன்னிலை. தென்சென்னையில் 27,177 வாக்குகள் பெற்று தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை
-
Jun 04, 2024 10:46 IST10 தொகுதியில் பாஜக கூட்டணி 2-வது இடம்
தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட 10 தொகுதியில் பாஜக கூட்டணி 2-வது இடம் பிடித்து முன்னிலை. அதிமுகவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை
10 தொகுதியில் பாஜக கூட்டணி 2 வது இடம் #ElectionResult2024 | #ElectionResultsWithThanthiTV | #Modi | #RahulGandhi | #Congress | #BJP | #மக்கள்தீர்ப்பு2024 | #LoksabhaElection2024
— Thanthi TV (@ThanthiTV) June 4, 2024
முழு விவரம்: https://t.co/HDcUpR30Ps
Youtube Live: https://t.co/odWzfkbz0b pic.twitter.com/4f6z23uTi2 -
Jun 04, 2024 10:29 ISTஆ.ராசா 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 20,760 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 11,133 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
திமுக - 24,110
அதிமுக - 9,644
பாஜக -12,977
-
Jun 04, 2024 10:18 ISTவேகமாக முன்னேறும் கேப்டன் மகன்
காலை 10.10மணி நிலவரப்படி, தேமுதிக விஜய பிரபாகரன் 11,702 வாக்குகள் பெற்று முன்னிலை
காங்கிரஸ் மாணிக்கம் தாகூர் 6,453 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். -
Jun 04, 2024 10:04 ISTவேகமாக முன்னேறும் சௌமியா அன்புமணி
பாஜக கூட்டணியில் பா.மக வேட்பாளர் சௌமியா அன்புமணி 24,788 வாக்குகள் பெற்று முன்னிலை
திமுக மணி 15,252 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார்.
அதிமுக அசோகன் 13,108 -
Jun 04, 2024 09:52 ISTதமிழக, புதுவை முன்னிலை நிலவரம்
காலை 9.43மணி நிலவரப்படி, திமுக 38 இடங்களில் முன்னிலை, அதிமுக 1, பாஜ.க 1 இடங்களில் முன்னிலை
-
Jun 04, 2024 09:45 ISTஓ.பிஎஸ். பின்னடைவு, நவாஸ் கனி முன்னிலை
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட IUML வேட்பாளர் நவாஸ் கனி முன்னிலை.
விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 2660 வாக்குகள் பெற்று முன்னிலை . -
Jun 04, 2024 09:38 ISTஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் பின்னடைவு
தேனி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பின்னடைவு
ராமநாதபுரம் சுயேட்சை வேட்பாளர் ஓ.பிஎஸ். பின்னடைவு
தங்க தமிழ்செல்வன் முன்னிலை
தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் - 23,820 வாக்குகள் பெற்று முன்னிலை
அதிமுக நாராயணசாமி- 13,578
பாஜக கூட்டணியில் அமமுக டிடிவி தினகரன் - 13,525
நாதக - 3,383 -
Jun 04, 2024 09:28 ISTகதிர் ஆனந்த் 21,665 வாக்குகள் பெற்று முன்னிலை
வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 21,665 வாக்குகள் பெற்று முன்னிலை
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குப்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலை
பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி முன்னிலை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.