Coimbatore, Madurai, Trichy News: உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்களுடன் வந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து

Coimbatore, Madurai, Trichy News Live- 31 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 31 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Accidnh

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து, விநாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நீர் வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக இருந்தது. 

Advertisment

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9828 கன அடியில் இருந்து 16,493 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.66 அடியாகவும், நீர் இருப்பு 91.350 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கு மற்றும் கால்வாய் வழியே 15,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

  • Aug 31, 2025 21:22 IST

    உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்களுடன் வந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து

    உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் விளையாட்டுப் போட்டி முடித்துவிட்டு பள்ளி மாணவர்களுடன் வந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து. பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் என தகவல். சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.



  • Aug 31, 2025 21:04 IST

    ஸ்ரீ பவானியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

    வாலாஜா அருகே ஸ்ரீ பவானி அம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சுவாமி தரிசனம். கோயில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Aug 31, 2025 20:00 IST

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் கோலாகலம்

    நெல்லையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் இந்து முன்னனி சார்பில் வைக்கப்பட்ட 95 சிலைகள். வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • Aug 31, 2025 20:00 IST

    விநாயகர் சதுர்த்தி விழா - சிலை கரைப்பு நிகழ்வு

    கோவை முத்தண்ணன் குளத்தில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. சிலை ஊர்வலத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்



  • Aug 31, 2025 19:59 IST

    விஷமருந்திய போக்சோ குற்றவாளி

    பெரம்பலூர், மகிளா நீதிமன்ற வளாகத்தில் பூச்சி மருந்து குடித்த குற்றவாளி மரணமடைந்தார். மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கில் 40 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இவர்,  கடந்த 29ம் தேதி நீதிமன்றத்தில் உள்ள கழிவறைக்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்,



  • Aug 31, 2025 18:45 IST

    வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை என புகார்

    மதுரை செல்லூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 150 சவரன் நகை வரதட்சணையாக கொடுத்த நிலையில் மேலும் 150 சவரன் கேட்டதாக கணவர் வீட்டார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்த உசிலம்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினியின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



  • Aug 31, 2025 18:23 IST

    தவெக மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கு கிடா விருந்து

     தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாடு வெற்றி பெற உழைத்த தன்னார்வலர்கள், மருத்துவ உதவியாளர்கள், மற்றும் தொண்டர்களுக்கு மதுரை பாண்டி கோயிலில் 11 கிடாக்கள் வெட்டி கமகம அசைவ விருந்து வழங்கப்பட்டது.



  • Aug 31, 2025 18:04 IST

    பணத்துடன் சாலையில் கிடந்த பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த மாணவி

    உடல்நிலை சரியில்லாத தாயின் மருத்துவ செலவுக்காக பணம் வைத்திருந்ததாகவும், அதனை பர்ஸுடன் காணவில்லை எனவும் புகாரளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார் விஜய். அப்போது மாணவி பிரியதர்ஷினியும் பர்ஸுடன் வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கு முன்பாக, பர்ஸில் இருந்த அடையாள அட்டையை பார்த்து, அந்த முகவரிக்கே சென்றுள்ளார் பிரியதர்ஷினி. அங்கு யாரும் இல்லாததால், காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவரது நேர்மையைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.



  • Aug 31, 2025 17:14 IST

    8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, கோவையில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Aug 31, 2025 15:15 IST

    நீலகிரி, கோவைக்கு இன்று கனமழை எச்சரிக்கை

    நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.  தமிழகத்தில் செப்.6ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Aug 31, 2025 14:16 IST

    தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்ட சம்பவம்; 15 வயது சிறுவன் கைது

    கோவை, ஆவாரம்பாளையம் அருகே கடந்த 25ம் தேதி ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுவனை கைது செய்த ரயில்வே போலீசார், சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்



  • Aug 31, 2025 13:28 IST

    சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையில் ஒரு அணி அமையும் - டி.டி.வி. தினகரன்

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் ஒரு அணி அமையும், ஏற்கெனவே, தி.மு.க என்.டி.ஏ அணி உள்ளது. அதே போல், சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவிடததுள்ளார். விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்” என்று கூறினார்.



  • Aug 31, 2025 12:50 IST

    என்.டி.ஏ-வில் நான் இருக்கிறேனா? இல்லையா? நயினார் நாகேந்திரன் பதில் சொன்னால் நன்றாக இருக்கும் - டி.டி.வி தினகரன்

    பரமக்குடியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேட்டி: “என்.டி.ஏ-வில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.



  • Aug 31, 2025 12:29 IST

    பீகார் போல வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது - கே.என்.நேரு

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “பீகார் போல வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது; 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய செயலாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.



  • Aug 31, 2025 11:44 IST

    திருவண்ணாமலை கோயிலில் அன்புமணி தரிசனம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்புமணி தரிசனம் செய்தார். 



  • Aug 31, 2025 10:29 IST

    காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தற்போது 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் அருவியில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Aug 31, 2025 09:30 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கத் தடை

    கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 



  • Aug 31, 2025 09:29 IST

    மேட்டூர் அனை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9828 கன அடியில் இருந்து 16,493 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.66 அடியாகவும், நீர் இருப்பு 91.350 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கு மற்றும் கால்வாய் வழியே 15,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



  • Aug 31, 2025 09:28 IST

    சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்த துயரம்.

    ராமநாதபுரம் - மதுரை பிரதான சாலையில் நென்மேனி என்ற இடத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Aug 31, 2025 09:26 IST

    ஒகேனக்கல் நீர் வரத்து

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து, விநாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது.நேற்று நீர் வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: