மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: மாலத்தீவு தீ விபத்து; கன்னியாகுமரியைச் சேர்ந்த கணவன் – மனைவி மரணம்
இந்த சம்பவம் மதியம் 1.30 மணியளவில் நடந்ததாக மதுரை எஸ்.பி சிவ பிரசாத் indianexpress.com இடம் தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின்படி, தொழிற்சாலையின் இரண்டு கொட்டகைகளில் வெடிப்பு ஏற்பட்டது. இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. இந்த சம்பவத்தில் 11 பேர் பலத்த காயம் அடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
6 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். பலத்த தீக்காயம் காரணமாக திருமங்கலம் மருத்துவமனையில் இருந்தவர்கள் பின்னர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்திக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil