Advertisment

இலங்கை கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளியை தேனியில் கைதுசெய்த என்.ஐ.ஏ!

ஜூன் 2021 முதல் தலைமறைவாக இருந்த அவரை தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில்வைத்து பெங்களூருவின் அப்ஸ்காண்டர் டிராக்கிங் டீம் (ATT) கைதுசெய்தது.

author-image
WebDesk
New Update
Coimbatore NIA Raid

2021 ஜூன் 6 ஆம் தேதி 38 இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

தேனியில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளியான ராமநாதபுரத்தை சேர்ந்தவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதுசெய்தனர். இவர் இலங்கை வழக்கு ஒன்றில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

Advertisment

இலங்கையில் மனித கடத்தல் வழக்கு தொடர்பாக 39 வயதுடைய ஹாஜா நஜர்பீடன் என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) தெரிவித்தனர்.

ஜூன் 2021 முதல் தலைமறைவாக இருந்த அவரை தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில்வைத்து பெங்களூருவின் அப்ஸ்காண்டர் டிராக்கிங் டீம் (ATT) கைதுசெய்தது.

ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் (ஹாஜா நஜர்பீடன்), இப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு பிரபலமான கடத்தல்காரர் ஆவார். அவர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக பல சட்ட அமலாக்க நிறுவனங்களின் ரேடாரில் உள்ளார்.

மங்களூருவில் சரியான ஆவணங்கள் இன்றி வசித்த இலங்கை பிரஜைகள் குறித்து உளவுத்துறையின் அடிப்படையில் மங்களூர் தெற்கு போலீசார் நடவடிக்கை எடுத்தபோது இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் மூலம் 2021 ஜூன் 6 ஆம் தேதி 38 இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இந்தியா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment