/indian-express-tamil/media/media_files/2025/09/25/anbil-mahesh-ex-gratia-2025-09-25-15-48-00.jpeg)
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய பகுதியில் கடந்த 6-ம் தேதியன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. அப்போது இடிபாடுகளில் சிக்கி சிவா-சுகந்தி தம்பதியரின் மகள் 12 வயதுடைய கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்த கார்த்தியாவின் இல்லத்திற்குச் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, தமது சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, மாநகர தி.மு.க செயலாளர் மு.மதிவாணன், பகுதிச் செயலாளர் ஆர்.ஜி.பாபு, வட்டக் கழகச் செயலாளர் மனோகர், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி பொறியாளர் புஷ்பராணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.