Tamil Nadu Senior Minister in Sex Scandal: தமிழ்நாடு அமைச்சர் ஒருவரே மீ டூ சர்ச்சையில் சிக்கியிருப்பது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. 58 வயதில் மேற்படி அமைச்சர் அப்பா ஆகியிருப்பதாக புகார் கிளம்பியிருக்கிறது.
#MeToo ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. பெண்கள் பலரும் தங்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபர்களை இந்த ஹேஷ்டேக் மூலமாக அம்பலப்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் ஹீரோ அமிதாப் முதல் நம்மூர் பாடலாசிரியர் வைரமுத்து வரை இதற்கு தப்பவில்லை. மத்திய அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் இந்த விவகாரத்தில் பதவியையே இழந்தார்.
இந்தச் சூழலில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும் ‘மீ டூ’ ரீதியிலான சிக்கல் வந்திருக்கிறது. சென்னை ராயபுரத்தை சேந்த இளம்பெண் இந்து (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தனது தாயாருடன் ஒரு சிபாரிசுக்காக மீடியாவில் பிரபலமாக அடிபடும் அந்த அமைச்சரை சந்திக்க சென்றிருக்கிறார்.
எப்படியோ இந்துவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட அமைச்சர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இந்துவின் குழந்தைக்கு தந்தை ஆகியிருக்கிறார். ஆம், வட சென்னை, வண்ணார்பேட்டையில் ஒரு மருத்துவமனையில் இந்துவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதன் பிறகுதான் க்ளைமாக்ஸ்! குழந்தை பிறந்தது குறித்து சென்னை மாநகராட்சியில் பதிவு செய்தாக வேண்டும். குழந்தையின் தந்தை பெயர் என்ன? என மாநகராட்சி அதிகாரிகள் கேட்க, மேற்படி அமைச்சரின் பெயரே ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் சமூக வலைதளங்கள் வரை பரவி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இதோடு விவகாரம் முடியவில்லை. மேற்படி பெண்ணின் தாயார், தொலைபேசி மூலமாக மேற்படி அமைச்சரிடம் பேசி அதையும் ரெக்கார்ட் செய்திருக்கிறார். அந்த உரையாடலில், ‘நீ நேர்ல வாம்மா. நாம பேசி தீர்த்துக்கலாம்’ என்கிற ரீதியில் அமைச்சர் கெஞ்சுகிறார். குழந்தையை கருவில் கலைக்க முடியவில்லையா? என்பது குறித்தும் உரையாடல் போகிறது.
மேற்படி பெண் தனது அண்ணனுடன் வந்து சந்திப்பதாக கூற, அதற்கு பதற்றத்துடன் மறுக்கிறார் அமைச்சர்! தினம் ஓரிரு முறை தவறாமல் மீடியா முன்பு ஆஜராகும் அமைச்சர் இப்போது பெரும் இக்கட்டில் சிக்கியிருக்கிறார். இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் எப்படி அணுகப் போகின்றன? பாதிக்கப்பட்ட குடும்பம் என்ன செய்யப் போகிறது? என்பவற்றைப் பொறுத்தே இதில் அடுத்தகட்ட நகர்வு இருக்கும்!