உரம் இடுவதை நிறுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்-அக்ரி எக்ஸ்போவில் அமைச்சர் கே.என். நேரு

கடந்த 4 மாதங்களாக உரம் இடுவதை நிறுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். என்னை மாதிரியே நிறைய பேர் இயற்கை விவசாயம் செய்து வருவது மகிழ்ச்சியை கொடுக்கிறது; அக்ரி எக்ஸ்போவில் அமைச்சர் கே.என் நேரு பேச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KN Nehru agri expo

திருச்சி கலையரங்க வளாகத்தில் இன்று முதல் மார்ச் 8,9 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ள பிரம்மாண்ட வேளாண் கண்காட்சியை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.

Advertisment

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், இல்லத்தரசிகள், வேளாண் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டனர். இங்கு அமைக்கப்பட்டிருந்த் 80-க்கும் மேற்பட்ட அரங்குகளில் நவீன நீர்பாசன சாதனங்கள், விதைப்பு மற்றும் நடவு கருவிகள், உழவு இயந்திரங்கள், விசை தெளிப்பான்கள், நாட்டு ரக காய்கறி விதைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானிய உணவு வகைகள், மாடித்தோட்டத்திற்கு தேவையான பொருட்கள், வீட்டிலேயே எளிதாக சமையல் எண்ணெய் தயார் செய்வதற்கான இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்த கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் கே. என்.நேரு விவசாயிகள் மத்தியில் பேசியதாவது; "நான் வருஷத்துக்கு லட்சக்கணக்கில் ரசாயன உரங்களை வாங்கி போடுபவன். சமீபத்தில் பசுமை விகடன் செய்தியாளர் என்னை பேட்டி எடுத்துவிட்டு சென்றார். அவர் என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு என் மனதில் தோன்றியது என்னவென்றால் நாம் ரசாயன உரமிடுவதை நிறுத்திவிட்டு, இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான். அதன்படியே கடந்த 4 மாதங்களாக உரம் இடுவதை நிறுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். என்னை மாதிரியே நிறைய பேர் இயற்கை விவசாயம் செய்து வருவது மகிழ்ச்சியை கொடுக்கிறது” என பேசினார்.

Advertisment
Advertisements

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசியபோது, "நான் பசுமை விகடன் படிக்கிறேன். இளைஞர்களை இயற்கை விவசாயம் பக்கம் திருப்பியதில் பசுமை விகடனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக செயல்படும் விவசாயிகளை சந்தித்து, மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் விவசாய தொழில்நுட்பங்களை எழுதுகின்றனர். இந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்." என்றார்.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் பேசியபோது, "10 லட்சம் ஹெக்டேர் வாழை சாகுபடி செய்து 37 மில்லியன் டன் அளவிற்கு வாழையை உற்பத்தி செய்து கொடுக்கிறோம். அதாவது உலகில் உள்ள மொத்த வாழை உற்பத்தியில் 25% இந்தியாவில் இருந்து தான் சாகுபடி செய்யப்படுகிறது. 40 கோடி திசு வளர்ப்பு கன்றுகள் இந்தியாவில் உபயோகிக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையே இந்தியாவில் வாழை உற்பத்தியில் முதலிடம் வகிக்க உதவுகிறது. இந்தியாவில் ஜி9 எனும் வாழை ரகம் மிகவும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது" என்றார்.

வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் முனைவர் பார்த்திபன். "கோடைக்காலத்தில் அறுவடையாகும் வேப்பம்பழத்தின் கொட்டை விற்பனையில் மட்டுமே 600 முதல் 700 கோடி வரை பணம் புழங்குகிறது. முன்பெல்லாம் 1 கிலோ வேப்பங்கொட்டை 5 ரூபாய்தான் விற்றது. இன்று கிலோ 75 ரூபாய். ஒரு மரம் 50 கிலோ வரை காய்க்கும். 10 மரங்களிருந்தால் 30,000 ரூபாய் நிகர லாபம் பார்க்கலாம். ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்கள் வேப்பங்கொட்டை விற்பனை மற்றும் மதிப்புக்கூட்டலில் கவனம் செலுத்தலாம்." என்று கூறினார்.

இன்னும் நிறைய விவசாயம் சார்ந்த தொழில் சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்ளும் பல்வேறு கருத்தரங்குகள் இன்று மற்றும் நாளை, நாளை மறுநாள் மார்ச் 8, 9 ஆகிய 3 தேதிகளில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம் என கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

க.சண்முகவடிவேல்

Trichy K N Nehru Agriculture

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: