அமைச்சர் பொன்முடிக்கு பின்னடைவு: செம்மண் ஊழல் வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணி உள்ளிடோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணி உள்ளிடோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ponmudi House Locker

அமைச்சர் பொன்முடி

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி,  அவரது மகன் கவுதம் சிகாமணி உள்ளிடோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு  தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

Advertisment

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் வேண்டுமென்றே தமிழக அரசின் கருவூலத்துக்கு ரூ.28.4 கோடிகளை  இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாடியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெள்ளியிட்ட பதிவில், “ அலமாரியில் இருந்து வெளியேறும் எலும்புக்கூடுகள் போல,  திமுக அமைச்சர்களின் ஊழல் ஒவ்வொரு வாரமும்  அம்பலப்பட்டு வருகிறது.

13.02.2007 முதல் 15.05.2011 வரையிலான காலக்கட்டத்தில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர்  பதவியை தவறாக பயன்படுத்தியதாக திமுக அமைச்சர் பொன்முடி  மற்றும் பலர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Advertisment
Advertisements

தனது, அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதன் மூலம் திமுக அமைச்சர் பொன்முடி வேண்டுமென்றே கருவூலத்துக்கு ரூ. 28.4 கோடி இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.

120 பி ஐபிசி படி, திமுக அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான வாய்ப்புகளை  நிராகரிக்க முடியாது என நிதிபதி சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார், மேலும் திமுக அமைச்சர் பொன்முடி குற்றம் செய்ததாகக் கருதுவதற்கான காரணங்களையும் நீதிபதி சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் தனது அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்வாரா அல்லது செந்தில் பாலாஜியை எப்படி  கோபாலபுரம் குடும்பம் பாதுகாக்கிறதோ அதுபோல் பொன்முடியும் பாதுகாக்கப்படுவாரா?” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: