Advertisment

ஆளுநர் போல் ஐ.ஐ.டி இயக்குனர் மாறிவிட்டதாக தெரிகிறது; மாட்டு கோமியம் பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி கருத்து

மாட்டு மூத்திரம் உடலுக்கு கேடு என அறிவியல் ரீதியாக சொல்லப்பட்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், அறிவியல் ரீதியான நிறுவனத்தின் இயக்குனர் இப்படி சொல்லியிருப்பதற்கான காரணம் புரியவில்லை – அமைச்சர் பொன்முடி

author-image
WebDesk
New Update
ponmudi kamakoti

மாட்டு கோமியம் தொடர்பான சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி கருத்துக்கு, ஐ.ஐ.டி போன்ற நிறுவனத்தின் இயக்குனர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Advertisment

சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்றார்.

விழாவில் பேசிய காமகோடி, "எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. அப்போது ஒரு சந்நியாசி வந்தார். அந்த சந்நியாசியின் பெயர் எனக்கு மறந்து விட்டது. சந்நியாசி கோமியத்தை குடிக்க சொன்னார். கோமியம் குடித்த உடன் 15 நிமிடத்தில் அவருக்கு ஜூரம் போய்விட்டது. மேலும் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்சனைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து" என்று கூறினார். 

இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், வனத்துறை அமைச்சர் பொன்முடி இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisement

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “முதலில் அவர் குடிக்கட்டும், அவர் குடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அகில இந்திய அளவில் தலைசிறந்த ஐ.ஐ.டி போன்ற நிறுவனத்தின் இயக்குனர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது. மாட்டு மூத்திரம் உடலுக்கு கேடு என அறிவியல் ரீதியாக சொல்லப்பட்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், அறிவியல் ரீதியான நிறுவனத்தின் இயக்குனர் இப்படி சொல்லியிருப்பதற்கான காரணம் புரியவில்லை. 

மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவரும் ஆளுநர் போல் மாறிவிட்டார் எனத் தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் இந்தக் கருத்துக்கள் வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுவும் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிற தமிழக மக்கள், அறிவியல் ரீதியாக சிந்திக்க கூடியவர்கள், பகுத்தறிவு மிகுந்தவர்கள், ஐ.ஐ.டி இயக்குனர் கூறினார் என்பதற்காக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது தான் நடைமுறை உண்மை,” என தெரிவித்தார்.

Ponmudi Chennai Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment