செந்தில் பாலாஜி கைதை கண்டித்து ஜூன் 16ம் தேதி கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக, ஏமாற்றியதாக வழக்குத் தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று, சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைவரை சென்றது. மேலும் துணை ராணுவத்தினர் அவரது வீட்டில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி நள்ளிரவில், கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியால் கதறி அழுதார். மருத்துவ உதவியை கேட்டார். பின்பு அவர் ஓமந்தூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தனர்.இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு
செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் 3 முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இஎஸ்ஐ முதல்வரிடம் அறிக்கை வழங்கவுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் மத்திய அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் 16ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துறை முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், திராவிட கழகம் வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல் முருகன், மார்க்சிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.