Tamil Nadu Minister Senthil Balaji talked about Velumani Arrest : ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனார். இந்த கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கார்த்திகேய சிவசேனாதிபதி, “திமுக உறுப்பினர்கள் பலர் இங்கே பேசினார்கள். இங்குள்ள அதிகாரிகள் பலரும் இன்னும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக, விசுவாசமாகவே செயல்படுகின்றனர். திமுகவினர் கூறும் எந்த பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை” என்று குறிப்பிட்டார்.
வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைகள் நடைபெற்று வெகுநாட்கள் ஆகிவிட்டது. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அவரை எதிர்த்து தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்பதாலும் நான் இந்ந்த கேள்வியை எழுப்புகிறேன். அவரை எப்போது கைது செய்யப் போகின்றீர்கள்? கைது செய்ய தாமதம் ஆகும் நிலையில் அவருடன் சமரசம் ஆகிவிட்டீர்களா என்றும் கேட்கின்றனர். என்னால் பதில் கூற இயலவில்லை என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சார் செந்தில் பாலாஜி, நகர்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக முதன்முதலாக கோவையில் தான் பூத் உருவாக்கப்பட்டுள்ளது. கமிட்டியினர் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் உதயநிதி கோவை வர உள்ளார். உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாலையில் கொடிசியா மைதானத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றது என்ற நிலை தான் வர வேண்டும். இப்போது நம்முடைய பேச்சைக் கேட்காத அதிகாரிகள் எல்லாம், நம் கவுன்சிலர்கள், மேயர்கள் வந்த பிறகு அவர்கள் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
வேலுமணி கைது குறித்து பேசிய அவர், ரெய்டு முடிந்துவிட்டது, கைது எப்போது, அதிகாரிகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை என்று சொல்கின்றனர். நமக்குப் பின்னால் ஓடுபவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நாம் லட்சத்திற்காக முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது பின்னால் வரும் நபர்களை பார்த்து நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார். பொறுமையாக செயல்படுவோம். சட்டம் தன் கடைமையை செய்யும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil