தமிழ்நாட்டில் மின்சார உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என , சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, “தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வுக்கு உதய் மின்திட்டம்தான் காரணம்” எனக் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை உதய் திட்டத்துக்குக் கையெழுத்து போடவில்லை; ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி உதய் மின் திட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்.
இதனால்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளது” என்றார். தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் அதிகளவு இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்தன. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நாளொன்றுக்கு ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்படைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“