கிராமங்களில் நடமாடும் மருத்துவக்குழு, மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு : சட்டமன்ற ஹைலைட்ஸ்

Tamilnadu News Update : தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம், தொழில்றை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டஙகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

Tamilnadu Assembly Highlights : தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தை தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  தமிழகத்தின் திருத்தி பட்ஜெடை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 14-ந் தேதி முதல்முறையாக வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  தொடர்ந்து இந்த இரு பட்ஜெட் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் இருவரும் பதில் கூறினர்.

அதனைத் தொடர்ந்து மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழில்துறை,  ஆகிய துறைகளின் மானிகோரிக்கை தொடாபாக விவாதங்கள் நடைபெற்றது.

சட்டசபையில் இன்று….

மாற்றுத்திறனாளிகளுக்காக இடஒதுக்கீடு :

அரசுப்பணியிடங்கள், குழுமங்கள், வாரியங்கள், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களில் சி மற்றும் டி பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீடு உகந்ததாக என கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஏ மற்றும் பி பணியிடங்களில் 559 பணியிடங்கள் மற்றும் அரசு தேர்வாணைய மூலமாக 1095 பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் :

தொழில்துறையில் தனிநபர் முதலீடு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக கல்வித்தகுதி +2 ஆக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.23 கோடி செலவில் சிற்ப கலைஞர் பூங்கா அமைக்கப்பம் என்று 18 அறிவிப்புகள் வெளியிட்ட அமைச்சர் த.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.  மேலும் தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் புதிதாக 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்ர் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

போலி பத்திரப்பதிவு – பதிவை ரத்து செய்யும் மசோதா:

போலி பத்திரப்பதிவு – பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. போலியாக ஒருவர் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இனி பத்திரப்பதிவு தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய அதிகரம் உள்ளது.

சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்புகள் :

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும் என்றும், சற்றே குறைப்போம்’ திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படும் என்றும், டெல்டா பிளஸ் குறித்து அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைச்சப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள அவர், 25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும்  கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

32 சுங்கச்சாவடிகள் அகற்ற வலியுறுத்தல் :

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய  பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை தூரத்தை கணக்கிட்டால் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது.  கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை குறைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று, பேரவையில் உறுதியளித்தார்.

21 பேருக்கு மணிமண்டபம் :

“விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மணிமண்டபம் கட்டப்படும்”  என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த மணி மண்டபம் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியிட்டதை முதல்வருக்கு புகழாரம் சூட்டிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வாங்குறுதியை தவறமாட்டார் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் மிகச்சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu mobile medical team reservation for village assembly highlights

Next Story
சென்னையில் மீண்டும் கருணாநிதி சிலை; தி.க – தி.மு.க – அ.தி.மு.க தலைவர்கள் கருத்து என்ன?kalignar karunanidhi statue, karunanidhi statue, tamilnadu, dravidar kazhagam, dmk, kali poongkundran, trichy siva, aiadmk, கருணாநிதி சிலை, சென்னை, அண்ணா சாலை, திராவிடர் கழகம், திமுக, கலி பூங்குன்றன், திருச்சி சிவா, அதிமுக, பொன்னையன், முதலமைச்சர் முக ஸ்டாலின், ponnaiyan, cm mk stalin, dmk mla neelamegam, karunanidhi statue again anna salai, chennai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com