இன்று திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவருக்கொருவர் வார்த்தை போரில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு தர்மபுரி எம்பி செந்தில் குமார் ஆகஸ்ட் 31ஆம் தேதி போட்ட ட்வீட்தான் மூலக் காரணம்.
அவர், அந்த ட்வீட்டில் இரட்டை இலை எமோஜிகளை பகிர்ந்து அடுத்து என எழுதி உதய சூரியன் சின்னத்தின் எமோஜியை பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்து 3 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணையப் போகின்றனர் என்ற செய்திகள் வெளியாகின.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றார். இதற்கு மதுரையில இன்று நடந்த அமைச்சரின் திருமண விழாவில் பதில் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை நகைச்சுவை நடிகர் என்றார்.
தொடர்ந்து அவர் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்திவருகிறார். மக்களை நம்ப வைக்க வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட அவரிடம் பேச மாட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்துவருகிறது. அக்கட்சி இரு குழுக்களாக வழிநடத்தப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி வகிக்கும் பதவியும் தற்காலிகமானதுதான். அவர் எப்படி திமுகவை விமர்சிக்க முடியும்” என்றார். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை.
எதிரணி ஆளும் அணிக்கும், ஆளும் அணியில் இருந்து எதிரணிக்கும் செல்கிறார்கள் என்ற கூற்றில் அர்த்தம் இருக்க வாய்ப்பில்லை. பேச்சு வார்த்தை அல்லது ஆசை தூண்டல்கள் நடத்துயிருக்கலாம் என இருகட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil