ஊடகவியலாளர் மனைவி… நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சுவாரசிய பின்னணி!

Namakkal District Collector News : நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் பத்திரிக்கையாளரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்து மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் இளம் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இடமாறுதலில் குறிப்பாக பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளவர் திருமதி ஸ்ரேயா பி.சிங்

பொறியியல் பட்டதாரியான இந்த இளம் பெண் அதிகாரி கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.  கடந்த 2012ம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்) பணிக்கு தேர்வான இவர், தனது லட்சிய கனவான ஐ.ஏ.எஸ். படிப்பை பணியில் இருந்தவாரே படித்து கடந்த 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பு வகித்த அவர், தொடர்ந்து பத்மநாதபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்த அவர் தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.  இந்த ஆட்சியர் பணி குறித்து கூறிய  ஸ்ரேயா, “தற்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய போராட்டம் கொரோனா வைரஸ் பரவலை ஒழிப்பது தான். தமிழக அரசு கொரோனா தொற்றை முழுமையாக நம் நாட்டிலிருந்தே ஒழிப்பதற்காக தங்களது உழைப்பை செலுத்திவருகின்றனர். மிக விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக நான் உட்பட மாவட்ட நிர்வாகம் தொடர் உழைப்பை செலுத்தும் என கூறியுள்ளார்.

மேலும் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்-ன் கணவர் ஜோபி கேரளாவில் பிரபல தனியார் மலையாள செய்தி நிறுவனத்தில், விளையாட்டு செய்தி பிரிவில் தலைமைபொறுப்பில் பணியாற்றி வருகிறார். ஒரு பத்திரிக்கையாளரின் மனைவி மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu namakkal district collector shreya p singh wife of journalist

Next Story
இபிஎஸ் சந்திப்பு அப்படி… ஸ்டாலின் சந்திப்பு இப்படி… என்னமா ஒப்பிடுறாங்கப்பா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express