நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கத்தில் வெண்கலச்சிலை அமைக்கப்படும் என்றும், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாவலர் நெடுஞ்செழியன், அவருடைய இறுதிமூச்சு வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத்தலைவராக இருந்தார். அதுமட்டுமின்றி, எம்ஜிஆர் அமைச்சரவையிலும், அம்மா அவர்களின் அமைச்சரவையிலும், நிதித்துறை அமைச்சரா திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணா மறைந்தபோதும்,ல எம்ஜிஆர் மறைந்தபோதும், இடைக்கால முதல்வராக பதவி வகித்த சிறப்புக்குரியவர்.
இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட நாவலர் இரா, நெடுஞ்செழியன் அவர்களை சிறப்பிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முழு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்பதையும், அவரது பிறந்தநாளான ஜூலை 11ம் நாளை, அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tamil nadu navalar nedunchezhiyan birth anniversary edappadi palanichami government function
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி