தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்: ஸ்டாலினுக்கு 4 செயலாளர்களும் அறிவிப்பு

TN Chief Secretary : தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் புதிய தலைமை செயலாளரை நியமித்துள்ளார்.

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்ற திழுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முதல் முறையாக இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வருக்கான பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின் இன்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமித்துள்ளா. இவர் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தார். மேலும் உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் உள்ளிட்ட 4 பேர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே தலைமைசெயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு மாற்றப்ட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu new chief secretary v iraianbu was appointed

Next Story
நகர பஸ்களில் பெண்களுக்கு இலவசம், குடும்பத்திற்கு தலா ரூ2000… ஸ்டாலின் முதல் 5 உத்தரவுகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com