Tamil Nadu new guidelines Railways Airways Roadways Tamil News : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநிலத்திற்குள் நுழையும் மக்களுக்கு புதிய வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து ரயில், விமானம் அல்லது சாலை வழியாகத் தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஏழு நாட்களுக்கு தங்கள் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்குக் காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக சுகாதார மையத்திற்கு செல்ல வேண்டும்.
மற்ற மாநிலங்களிலிருந்து ரயில், விமானம் அல்லது சாலை வழியாக நுழையும் பயணிகள் தங்களை 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், ஒரு நபருக்கு இருமல், காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அவர்கள் சுகாதார மையத்திற்கு உடனடியாகச் செல்லவேண்டும்.
நுழைவு இடத்தில் கோவிட் -19-ன் அறிகுறிகளைக் காண்பிக்கும் எந்தவொரு நபரும் பரிசோதிக்கப்பட்டு மருத்துவ வசதிக்குப் பரிந்துரைக்கப்படுவார்.
இதற்கிடையில் விமானங்களில், லண்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களைத் தவிர மற்ற சர்வதேச பயணிகள் ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் (www.newdelhiairport.in) சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பயணத்தை மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் கோவிட் -19 ஆர்டி பி.சி.ஆர் அறிக்கையையும் அவர்கள் பதிவேற்ற வேண்டும்.
இந்த வகை பயணிகளில், கடல் அல்லது நில துறைமுகங்கள் வழியாக வருபவர்களும் அதே நெறிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆன்லைன் பதிவு செய்வதற்கான வசதி இல்லாதவர்கள் சுய அறிவிப்பு படிவத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வந்தவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பயணிகள் 14 நாட்களுக்கு தங்கள் சொந்த ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டும்.
விமானங்களில் இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தமிழ்நாடு வழியாக வரும் அல்லது பயணிக்கும் சர்வதேச பயணிகளுக்கு, ஏர் சுவிதா போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவம் மற்றும் கடந்த 14 நாட்களின் பயண வரலாறு தேவை. அவர்கள் நெகடிவ் கோவிட் -19 ஆர்டி பி.சி.ஆர் அறிக்கையையும் பதிவேற்ற வேண்டும். அதற்கான சோதனை, புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டும். தவறான தகவல்களைப் பதிவேற்றுவது குற்றவியல் வழக்குக்குப் பொறுப்பாகும்.
இந்தப் பயணிகள் விமான நிலையத்தில் சோதனை செய்யப்படுவார்கள். சோதனை நெகட்டிவ்வாக இருந்தால், அவர்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அல்லது ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்படுவார்கள். அதன் பிறகு மற்றொரு சோதனை நடத்தப்படும். சோதனை பாஸிட்டிவ்வாக மாறினால், அவர்கள் நிலையான சுகாதார நெறிமுறையின்படி சிகிச்சைக்கு உட்படுவார்கள்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையங்களில் வெப்பநிலை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில், கோவிட் -19 பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து சுகாதார அமைச்சர் ஜே.ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்த சில நாட்களில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பாசிட்டிவ் விகிதம் குறைவாக இருப்பதால், பொதுமக்களின் அலட்சியம் உள்ளது என்றார். ராதாகிருஷ்ணன் மேலும், அண்டை மாநிலங்கள் பாசிட்டிவ் எண்ணிக்கைகளை அதிகம் சந்திக்கின்றன. பொதுமக்கள் சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் தமிழ்நாட்டிற்கும் இது ஏற்படக்கூடும் என்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"