முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசிய வழக்கு; பாஜக பிரமுகர் கைது!

BJP leader K Agoram, (BJP’s OBC Wing Vice President) was arrested near Sirkazhi for defaming Tamil Nadu CM MK Stalin Tamil News: தமிழக முதல்வர் ஸ்டாலினை அவதூறாகப் பேசிய வழக்கில் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவர் அகோரம் ஜெயங்கொண்டம் போலீஸாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

Tamil Nadu news in tamil: BJP leader Agoram arrested for defaming TN CM Stalin

Tamil Nadu news in tamil: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழக பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவர் அகோரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் அகோரம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பாஜகவின் அகோரம், அவரது சொந்த ஊரான சீர்காழியில் இருப்பதை அறிந்த போலீஸார், அவரை கைது செய்துள்ளனர். பின்னர் மாலையில் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாக மாநில பாஜக பிரிவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவர் அகோரமை ஜெயங்கொண்டம் போலீஸார் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்ட பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news in tamil bjp leader agoram arrested for defaming tn cm stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com