Advertisment

உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம்; ரூ.4 கோடி செலவில் திறப்பு!

New genetic analysis lab in Chennai to help track SARS-CoV-2 variants Tamil News: "மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய மரபணு பகுப்பாய்வகம் ஒரே நேரத்தில் 1,000 மாதிரிகளைச் சோதிக்க அனுமதிக்கும் மற்றும் முடிவுகள் நான்கு மணி நேரத்தில் கிடைக்கும்." என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Tamil Nadu news in tamil: cm stalin opened New lab to help track SARS-CoV-2 variants

Tamil Nadu news in tamil: தமிழக சட்டமன்ற பேரவையில் கடந்த 2.8.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது “மரபணு பகுப்பாய்வு கூடம் ரூ. 4 கோடி செலவில் சென்னை, டி.எம்.எஸ். வளாக பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisment

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

publive-image

கொரோனா நோய் தொற்றினை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புது வகையாக உருமாறி, நோய் தொற்றின் தாக்கத்தினை தீவிரப்படுத்துகிறது. உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம், எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினை கண்டறிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களில் கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தது.

publive-image

தற்போது, இக்குறைகளை போக்கும் வகையில், பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதனடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட இயலும்.

publive-image

இது தொடர்பாக பேசியுள்ள சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் "கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான் சோதனை முடிவுகள் திருப்பித் தரப்படுகின்றன, மேலும் ஒரு மாதிரிக்கு அரசுக்கு 5,000 ரூபாய் வரை செலவு செய்கிறது.

தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய ஆய்வகம் ஒரே நேரத்தில் 1,000 மாதிரிகளைச் சோதிக்க அனுமதிக்கும் மற்றும் முடிவுகள் நான்கு மணி நேரத்தில் கிடைக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் திசையன் மூலம் பரவும் நோய்கள் மற்றும் சூப்பர் பிழைகள் ஆகியவற்றின் மாறுபாடுகளைக் கண்டறிய இந்த ஆய்வகம் உதவும்." என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Tamilnadu News Update Tamilnadu Latest News Delta Variant Covid 19 Tn Assembly Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment