Tamil Nadu news in tamil: தமிழக அரசு கடந்த டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 1,159 மாதிரிகளை அரசு சேகரித்திருந்தது. அவற்றை முழு மரபணு வரிசைமுறைக்கு (WGS) பெங்களூருவில் உள்ள ஸ்டெம் செல் அறிவியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம் (இன்ஸ்டெம்) நிறுவனத்திற்கு அனுப்பியது. அவற்றில் இதுவரை கிடைத்த 554 மாதிரிகளின் முடிவுகளில் 66 முடிவுகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த 66 முடிவுகளில் 55 (83%) முடிவுகளுக்கு டெல்டா மாறுபாடு வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை மாறுபாட்டிற்கு நிச்சயம் கவனம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் பி. கணேஷ்குமார், மாதிரி அளவு போதுமானதாக இல்லாததால் எந்தவொரு முடிவுக்கும் மிக விரைவில் வரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள சென்னையைச் சேர்ந்த தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன், தொற்றுநோய் பரவும் போது நான்கு மாதங்கள் அவற்றுக்கு நீண்ட காலமாகும். ஏனெனில் இந்த 4 மாதத்திற்குள் பல விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மற்றும் இந்த எண்களைக் கொண்டு ஒரு உறுதியான தீர்ப்புக்கு மிக விரைவில் வருவது சரியான ஒன்றாக இருக்காது" என்று கூறியுள்ளார்.
"குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு இடங்களில் அரசு தனது சொந்த மரபணு வரிசைமுறை ஆய்வகங்களை நிறுவ வேண்டும். மதுரை மருத்துவக் கல்லூரி, மாநில பொது சுகாதார ஆய்வகம் மற்றும் சென்னையில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரெவென்டிங் மெடிசின் ஆகியவை எதிர்கால தேவைகளுக்கு கூட சாத்தியமான இடங்கள் என்று பொது சுகாதார நிபுணர் மருத்துவர் கே.குழந்தை சாமி குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்பு டெல்டா மாறுபாடு இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களிடையே (81%) குழந்தைகளுடன் ஒப்பிடும்போது (19%) அதிகம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பார்க்க முடிகிறது. "வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதோடு, அதிக நடுத்தர வயதுடையவர்களும் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால், வைரஸ் மற்ற வயதினரிடமிருந்து ஒரு இடத்தை தேடுகிறது. ஆகவே, நோய்த்தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் சதவீதம் அதிகமாக இருக்கலாம், ஆனால் மருத்துவமனையில் அனுமதிப்பது 5% க்கும் குறைவாக இருக்கும்" என காஞ்சி காமகோட்டி குழந்தை அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“