‘கோப்புகள், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்’ – சபாநாயகர் அப்பாவு

Tamil Nadu assembly speaker M Appavu on setting a binding timeframe by Governors for bills Tamil News: இந்தியக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மாநில சட்டசபைகள் அனுப்பும் கோப்புகள், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் காலவரையின்றி முடிவெடுக்காமல் இருப்பதை தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும், மசோதாவைத் திரும்பப் பெறுவதற்கான காரணங்களை இந்திய குடியரசுத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ளார்.

Tamil Nadu news in tamil: Governors to Set a timeframe for deciding on Bills says TN speaker Appavu

Tamil Nadu assembly speaker M Appavu Tamil News: இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் 82-வது அகில இந்திய சட்டமன்றங்களின் சபாநாயகர்கள் மாநாடு நேற்று புதன் கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “சில சமயங்களில் ஆளுநர்கள் மாநில சட்டசபைகள் அனுப்பும் கோப்புகள் மற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அல்லது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் அதை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரினாலும் கூட, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாக்களை முன்பதிவு செய்ய ஆளுநர்கள் பல மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

இது சட்டமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கிறது. ஆளுநர்கள் மாநில செயற்குழுவின் தலைவர்களாக இருந்தாலும், மத்திய அரசாலே நியமிக்கப்படுகின்றனர். எனவே, அவர்கள் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தும் போது, ​​அவர்கள் மாநில மக்களின் விருப்பத்தை நிராகரிக்கிறார்கள்.” என்றார்.

சமீபத்தில் தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் தகுதித் தேர்வை (நீட்) ரத்து செய்யவும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்க்கை வழங்கவும் திமுக தலைமையிலான சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செப்டம்பர் மாதம் முதல் கால தாமதத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “மக்களுடைய விருப்பத்தை சட்ட சபை பிரதிபலிப்பதால், ஒரு மசோதாவுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்துவது அந்த மாநில மக்களின் விருப்பத்தை நிராகரிப்பதாகும். எந்த காரணத்திற்காக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லையா? குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தடுத்து நிறுத்துவதற்குக் காரணமான குறைபாடுகளைச் சரிசெய்து, காரணங்கள் தெரிந்தால், சட்ட சபையால் மற்றொரு மசோதாவைச் சட்டமாக்க முடியும்.

நமது அரசியல் சாசன அட்டவணை 10-வது பிரிவின் படி சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள பல வழக்குகள் சபாநாயகரின் விசாரணையை முடிக்க 10வது அட்டவணையின் கீழ் கால அவகாசம் எதுவும் விதிக்கப்படவில்லை. சபாநாயகர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால், தகுதி நீக்க நடவடிக்கையின் நோக்கம் தேவையற்றதாகவும் மாறியது. எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்வது உள்ளிட்டவை சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான்.” என்றும் கூறியுள்ளார்.

அகில இந்திய சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் சபாநாயகர்களின் அதிகாரம் பற்றிய தமிழக சபாநாயகர் அப்பாவுவின் பேச்சு பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news in tamil governors to set a timeframe for deciding on bills says tn speaker appavu

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com