Tamil nadu news live updates: சென்னையில் ’ரூட் தல’ பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வடக்கு மண்டலத்தில் 21 பேர், மேற்கு மண்டலத்தில் 36 பேர், கிழக்கில் ஒரு மாணவர் என 58 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது இனி கருணை காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜில்லென்று மாறியிருக்கும் சென்னை..இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
பெட்ரோல் டீசல் விலை:சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.76.06 ஆகவும், டீசல் விலை மாற்றமின்றி ரூ.69.90 காசுகளாகவும் விற்பனை.
வேலூர் தேர்தல்:வேலூர் மக்களவை தேர்தலில் முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
வைகோ, டி ராஜா சந்திப்பு: டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜாவுடன், மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சந்தித்து பேசினார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather,politics, entertainment: தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
5g போனை தயாரித்து வெளியிட்டது ஹவாய் டெக்னாலஜீஸ் நிறுவனம் . நேற்று மாலை இதனை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் அதன் விலையாக 901 டாலரை நிர்ணயித்துள்ளது. 12- வது வகுப்பு பாடப்புத்தகம் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறையின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்ட குரல்களை எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுப்போன்ற தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளை உடனுக்குடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் லிங்கில் உங்களுக்கு வழங்கி வருகிறது.
Highlights
நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள்; நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள் ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும் என்று வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்த ஸ்டாலின் கூறினார்.
தடையில்லா மின்சாரம் தரப்படுவதால் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது என்று வாணியம்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
புதிய பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் உடனடியாக திருத்தப்படும் புதிய பாடத்தில் இதுவரை 19 தவறுகளை உடனடியாக திருத்தம் செய்திருக்கிறோம்; பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு புதிய பாடத்திட்டம் விரைவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்ற அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தல், ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி திமுக வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்ற அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினார்.
திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே, வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கே.வி.குப்பம் பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.
இஞ்ஜினியரிங் படிப்புகளில் சுமார் 79 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். துணை கவுன்சிலிங்கிற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
29ம் தேதி வாணியம்பாடி சட்டசபை தொகுதியிலும், 30ம் தேதி குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், 31ம் தேதி அணைக்கட்டு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
12-ம் வகுப்பில் தமிழை சிறுமைப்படுத்திய விவகாரத்தையடுத்து, 12-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியும் நீக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மும்பை மழையில் சிக்கிய மகாலட்சுமி ரயிலில் இருந்து அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். தானே கலெக்டர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “வெளியேற்றப்பட்ட அனைத்து பயணிகளும் பட்லாப்பூர் கிழக்கில் உள்ள சஹ்யாத்ரி மங்கல் காரியாலயாவில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகு, அவர்களுக்கு உணவு வழங்கப்படும், அவர்கள் கல்யானுக்கு கூட்டிச் செல்லப்பட்டு, மும்பைக்கோ, அல்லது அவர்கள் செல்ல வேண்டிய பிற இடங்களுக்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்றார்.
சென்னை நந்தனம் சிக்னல் சாலை மீண்டும் 4 வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும், ஆயிரம் விளக்கு, ஆனந்த் தியேட்டர் முதல் எல்ஐசி, தர்கா வரையிலான ஒரு வழிப்பாதை இரு வழிப்பாதையாக விரைவில் மாற்றப்பட உள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மும்பையில் தீவிரமான மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை – கோலாப்பூர் செல்லும் மகாலட்சுமி ரயில், அதிம மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியது. பட்லாப்பூரை அடுத்த வாங்கனி பகுதியில் நிற்கும் இந்த ரயிலில் 700-க்கும் அதிகமான பயணிகள் இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது மகாராஷ்டிரா அரசு. இந்நிலையில் தற்போது 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, நேற்று பங்களாதேஷுடன் நடந்த போட்டிக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். நேற்று நடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, இலங்கை அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார். இவருக்கு டிவிட்டரில் ரசிகர்கள் பிரியா விடை அளித்தனர். சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, பும்ரா, முகமது கைஃப் உள்ளிட்டோர் மலிங்காவை வாழ்த்தி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க, தேனீக்கள் மூலம் கூடுகள் அமைத்து யானைகளை வராமல் தடுக்க தமிழக வனத்துறை புதிய முயற்சி எடுத்துள்ளது. இந்த சோதனை முயற்சிக்காக 1.15 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 80.33% பேர் எழுத்தறிவு பெற்றுள்ளதாக, சட்டப்பேரவையில் தாக்கலான ஆவணத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே அளவு இந்த வருடமும் தொடர்வதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. முந்தைய காலங்களில் எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அழுதேனா? என மைத்ரேயனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அதோடு, 12-ம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5% வரியை குறைக்க கோரிக்கை வைத்தோம் என 36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
வண்ணாரப்பேட்டை – மீனம்பாக்கம் விமான நிலைய மெட்ரோ வழித்தடத்தில் நங்கநல்லூர் அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் மெட்ரோ சேவை தொடங்கியது.
அப்துல்கலாமின் 4 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுக் குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவு.
ஆந்திர மாநிலம் குண்டூரில் இன்று நடைபெறும் விழாவில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அப்துல்கலாம் நினைவு தினம் குறித்து ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவு
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி. ஜே. அப்துல்கலாமின் 4- ம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகளும், மலர் தூவி, அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நெல்லையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வீட்டிற்கு திமுக எம்பி கனிமொழி நேரில் சென்றார். அவரின் மகள்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ உமா மகேஸ்வரி கொலைக்கான பின்புலம் இன்னும் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது; விரைவில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் ” என்று கூறினார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினம், நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. தென்காசி மற்றும் செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருண் சுந்தர் தயாளன் ஆகியோரை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை சூலூர் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்ற காரும், பொள்ளாச்சி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த காரின் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ் பாடபுத்தகத்தில் சமஸ்கிருதம் குறித்து சர்ச்சையான கருத்து இடம்பெற்றிருப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கும் ட்வீட்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 27-வது நாளான இன்று காலை முதலே விசேஷமாக துவங்கியது. கடந்த 2 நாட்களாக கூட்டம் குறைவாக இருந்த நிலையில் இன்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டத்தை சமாளிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று அத்தி வரதர் பக்தர்களுக்கு சாம்பல் நிற பச்சை பட்டாடையில் காட்சியளிக்கிறார்.