scorecardresearch

மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் 2 குழந்தைகள் மீட்பு; காப்பக உரிமையாளருக்கு போலீஸ் வலை வீச்சு

Madurai child trafficking case; Police rescue two children Tamil News: மதுரை தனியார் காப்பகத்தில் 2 குழந்தைகள் பணத்திற்காக கடத்தப்பட்ட விவகாரத்தில் அந்த 2 குழந்தைகளை மீட்டுள்ள போலீசார் காப்பக உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்

Tamil Nadu news in tamil: Madurai child trafficking case; Police rescue two children

Tamil Nadu news in tamil: மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள சேக்கிபட்டியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கு வயது 22. ஆதரவற்றவராகவும், மனவளர்ச்சி சற்று குன்றியவராகவும் இருந்த இவரை அந்த பகுதியில் வசித்த ஒரு முதியவர் ஆதரவு அளித்து வந்துள்ளார். சில ஆண்டுக்கு முன்பு ஐஸ்வர்யாவை முதியவரே திருமணம் செய்ததாகவும் அவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும், 5 மற்றும் 1 வயதில் ஆண் குழந்தைகளும் பிறந்ததாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாவையும் குழந்தைகளையும் ஆதரவளித்து வந்த அந்த முதியவர் சமீபத்தில் இறந்த நிலையில், குழந்தைகளுடன் தனியாக வசித்த ஐஸ்வர்யாவை சிலர் தவறான நோக்கில் அணுக முயற்சித்துள்ளனர். இது பற்றி அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசாருதீன், மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ‘இதயம்’ என்ற ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் அந்த காப்பகத்தை நடத்தி வந்த சிவக்குமாரிடம் விபரங்களை சொல்லி பாத்திரமாக கவனித்து கொள்ளும் படி கூறியுள்ளார்.

இந்த நிலையில், தாயாருடன் தங்கியிருந்த ஒரு வயது ஆண் குழந்தை ( பெயர் மாணிக்கம்) மயமாகியுள்ளது இது குறித்து ஜூன் 20ம் தேதி அசாருதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. அசாருதீன், சிவக்குமாரிடம் கேட்டபோது, குழந்தைக்கு கொரோனா தொற்று பாதித்து, ஜூன் 13ம் தேதி முதல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்னர் குழந்தை குறித்த அசாருதீன் விசாரித்தபோது, குழந்தை அன்றைய தினம் 12 மணிக்கு இறந்துவிட்டதாகவும், சுகாதாரத்துறையினர் மூலம் தத்தனேரி மயானத்தில் புதைக்கப்பட்ட தாகவும் சிவக்குமார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறப்பு, தத்தனேரியில் புதைக்கப்பட்டதற்கான மாநகராட்சி முத்திரையிட்ட ரசீதுகளும் அசாருதீன் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனாலும், இதில் சந்தேகமடைந்த அசாருதீன், அரசு மருத்துவமனையில் விசாரித்துள்ளார். அவர் விசாரித்த இடங்களில் எல்லாம் முரண்பாடான தகவல்களே கிடைத்துள்ளன. இதனால், அவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என ஆட்சியர் அனீஷ்சேகரிடமும் மனு அளித்துள்ளார் அசாருதீன்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், குழந்தைகள் நலக்குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வக்குமார், வட்டாட்சியர் முத்துவிஜயன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அரசு மருத்துவமனை, தத்தனேரி மயானத்தில் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் இது குறித்து காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி என்பவரிடம் விசாரித்துள்ளனர். முதலில் உண்மை கூற மறுத்த அவர் பிறகு நடந்தவற்றை அதிகாரிகளிடம் விவரித்துள்ளார். இதன் படி மதுரை இஸ்மாயில்புரத்தில் வசிக்கும் நகைக் கடை உரிமையாளர் கண்ணனிடம் மாணிக்கம் விற்றாகபட்டதாக தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து மாணிக்கத்தை மீட்ட போலீசார், அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்மேடு பகுதியயைச் சேர்ந்த அனீஸ் ராணி மற்றும் சாகுபர் சாதிக் ஆகிய இருவரிடமிருந்து தனம் என்ற 2 வயது பெண் குழந்தையையும் மீட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த குழந்தை கடத்தல் விவகாரத்தில் தலைமறைவான காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளரை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டிவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news in tamil madurai child trafficking case police rescue two children