கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வயதுவந்தோரில் ஒருவருக்கும் குறைந்தது ஒரு டோஸ் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி கிடைத்துள்ளது எனவும், மாநில மக்கள்தொகையில் உள்ள 6% வயதுவந்தோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில நோய்த்தடுப்பு பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன. மூன்றாவது அலைக்கு மத்தியில் போதிய தடுப்பூசிகள் செலுத்தப்படாதாதது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் 6.06 கோடி வயதுவந்தோருக்கு 12.12 கோடி டோஸ் (தலா இரண்டு டோஸ்) தேவை. கடந்த ஜனவரி 15 முதல் ஜூலை 18 வரை சுமார் 1.9 கோடி டோஸ் வழங்கப்பட்டுள்ளன. இதில் மே 1 வரை தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்ட 12.5 லட்சம் டோஸ்களும் உள்ளடங்கும். தவிர நேற்று திங்கள் கிழமையன்று தனியார் மருத்துவமனைகளுக்கு மேலும் 2.35 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12.82 லட்சமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், தமிழத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் அளவு ஒரே மாதிரியாக இல்லை. நீலகிரியில் குறைந்தது 47% பேரும், சென்னையில் 36% பேரும் குறைந்தது ஒரு டோஸ் எடுத்திருக்கிறார்கள். குறைந்தது ஒன்பது சுகாதார பிரிவுகளில் 20% க்கும் குறைவான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். குறைந்தது 26 சுகாதார பிரிவுகளில் 5% க்கும் குறைவான மக்கள் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
இது குறித்து பேசிய சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன், “திங்கள்கிழமை காலை எங்களிடம் 3.42 லட்சம் அளவு இருந்தது. அடுத்த பேட்ச் தடுப்பூசிகள் விரைவில் நாங்கள் பெறாவிட்டால், செவ்வாய்க்கிழமைக்குள் பல மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும்" என்றார்.
மாநிலத்தில் தடுப்பூசிகள் பற்றாக்குறை தொடர்ந்து நிகழ்வது குறித்து 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' இதழுக்கு மூத்த வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான் அளித்த பேட்டியில், "அமெரிக்காவில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றும் செலுத்திக் கொள்ளாத மாகாணங்களிடையே உள்ள இறப்பு சராசரியை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
நோய்த்தடுப்பு மருந்துகள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் கொமொர்பிடிட்டி உள்ளவர்கள், கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளைக் கொண்டு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் (ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோய் எதிர்ப்பு சக்தி இரண்டும்). "ஆனால் அந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக, அனைத்து பெரியவர்களுக்கும் பற்றாக்குறை இருந்தபோதிலும் தடுப்பூசி எடுக்க அனுமதி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
சிறிய சுகாதார பிரிவுகளை கொண்டுள்ள மாநில நோய்த்தடுப்பு பிரிவு, மாநிலத்தில் உள்ள அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. "பெரும்பாலான மக்கள் கோவிஷீல்ட்டை எடுத்துள்ளனர். கோவிட்ஷீல்டீன் 2வது டோஸ் எடுத்துக்கொள்ளும் கால அளவு குறைந்தது 80 நாட்கள் வித்தியாசம் இருப்பதால், இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் தாமதமாகத் தெரிகிறது.” என்று மாநில நோய்த்தடுப்பு பிரிவின் கூடுதல் இயக்குனர் மருத்துவர் கே வினய் குமார் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.