மின்தடை… அணில்கள்… ஷெர்லாக் ஹோம்ஸ்! செந்தில் பாலாஜியை வறுத்த ட்விட்டர்வாசிகள்

TN EB Minister Senthil Balaji explains on power cut Tamil News: மின் வெட்டு அடிக்கடி ஏற்பட அணில்கள் தான் காரணம் என்ற புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி.

Tamil Nadu news in tamil: Squirrels climbing electric lines through tall trees results in frequent power outage says TN EB Minister Senthil Balaji

Tamil Nadu news in tamil: தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனைகளுள் ஒன்றாக மின்தடை உள்ளது. இந்த தொன்றுதொட்ட பிரச்சனைக்கு 10 நாட்களுக்குள் முற்று புள்ளி வைப்போம் என தற்போது ஆட்சி அமைத்துள்ள முக ஸ்டாலின் அரசு தெரிவித்திருந்தது. ஆனால் பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாலும், முந்தைய ஆட்சியில் முறையான பராமரிப்பு இல்லததாலும் தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின் தடைக்கு காரணம் அணில்கள் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. “மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இதனால் தான் மின் தடை ஏற்படுகிறது” என்றுள்ளார்.

இந்த புதிய விளக்கத்திற்கு தனது ட்விட்டர் பதிவு மூலம் பதிலளித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்!

சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இதை கையில் எடுத்துள்ள ட்விட்டர் வாசிகள் அமைச்சரை அணிலுடன் சேர்த்து ட்ரோல் செய்ய துவங்கியுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த விளக்கத்தை கடுமையாக விமர்ச்சித்துள்ள ஒரு ட்விட்டர் வாசி, “கடவுள் குறித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்குப் பிறகு, அரசியல்வாதிகளின் அடுத்த அபத்தமான கருத்து இது” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவரோ, ‘தமிழ்நாட்டின் மின்சார தடுப்புப் பிரிவு’ என்று அணில்கள் மின் கம்பியை கடிப்பது போன்ற புகைப்படத்துடன் மின்சார வாரிய அமைச்சரை டேக் செய்துள்ளார்.

இன்னொரு ட்விட்டர் வாசி, ‘மின் வெட்டுக்கு புதிய பதில் கண்டுபிடித்துள்ளார் நமது மின்சார வாரிய அமைச்சர்’ என்றும், துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸையே மிஞ்சிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வேறுறொருவாரோ,

Ohms law :

மின் தடை என்பது, ஒரு மின்கடத்தியின் ஒரு புள்ளியில் இருந்து அதன் மறு புள்ளியை மின்னோட்டம் அடையும் போது இடையில் ஏற்படும் மின் சேதாரம் ஆகும்!

செந்தில் பாலாஜி லாவ்:

செடி வளர்ந்து அதுல அணில் ஓடி உரசி ஏற்படுவதே மின்தடை !! என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள ஒருவர், ‘உங்களில் யாராவது திண்டுக்கல் சீனிவாசனை தவறவிட்டீர்களா?
சரி விடுங்கள் நமக்கு இப்போது செந்தில் பாலாஜி கிடைத்துவிட்டர்’ என்றுள்ளார்.

இது போன்ற பல சுவாரஷ்யமான ட்ரோல்களும், கடுமையான விமர்சனங்களும் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news in tamil squirrels climbing electric lines through tall trees results in frequent power outage says tn eb minister senthil balaji

Next Story
டெண்டர் முறைகேடு… முந்தைய அரசு கைவிட்ட வழக்கை இந்த அரசு தொடர முடியாது: எஸ்.பி வேலுமணி வாதம்SP Velumani, aiadmk, admk, admk govt, corporation contracts irregularities case, chennai high court, அதிமுக, எஸ்பி வேலுமணி, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு, அறப்போர் இயக்கம், திமுக, ஆர் எஸ் பாரதி, dmk, dmk govt, rs bharathi, arappor iyakkam
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express