மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
state wise vaccination in india Tamil News: பயன்படுத்திய தடுப்பூசிகள் போக, மாநிலங்களிடமும், யூனியன் பிரதேங்களிடமும் 5 கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 125 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
state wise vaccination in india Tamil News: பயன்படுத்திய தடுப்பூசிகள் போக, மாநிலங்களிடமும், யூனியன் பிரதேங்களிடமும் 5 கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 125 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tamilnadu news in tamil: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலை நாடு முழுதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தொற்றை எதிர்த்துப் போராட மத்திய - மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது.
Advertisment
கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசின் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 12ம் தேதி அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்குடன் தமிழகம் கிட்டத்தட்ட 10,000 தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் தொடர் கோரிக்கையால் மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வரும் நிலையில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 70 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
மேலும், பயன்படுத்திய தடுப்பூசிகள் போக, மாநிலங்களிடமும், யூனியன் பிரதேங்களிடமும் 5 கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 125 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், 96 லட்சத்து 25 ஆயிரத்து 760 டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.