Tamil Nadu news in tamil: தமிழகம் முழுதும் உள்ள முக்கிய நகரங்கள் முதல் குக் கிராமங்கள் வரை மின்தடை ஒரு தலையாய பிரச்சனையாக உள்ள நிலையில், மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாலும், முந்தைய ஆட்சியில் முறையான பராமரிப்பு இல்லததாலும் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் மின் தடை குறித்து தொடர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு சமீபத்தில் பதிலளித்துள்ள மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இதனால் தான் மின் தடை ஏற்படுகிறது” என கூறியிருந்தார்.
இந்த வித்தியாசமான விளக்கத்தை கையில் எடுத்த ட்விட்டர் வாசிகள் அமைச்சரை அணிலுடன் சேர்த்து ட்ரோல் செய்தும், கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
இதற்கிடையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்…. விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?" என்று கிண்டலடித்து பதிவிட்டிருந்தார்.
சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?#Doubt
— Dr S RAMADOSS (@drramadoss) June 22, 2021
இந்த கிண்டல் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் சில படங்களுடன் அதை விளக்கியும் உள்ளார். மேலும் தமிழகத்தில் இப்படி அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான முக்கிய காரணத்தையும், கடந்த ஆட்சியில் அதிமுக அரசின் செயல்பாட்டையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.
அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம். அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்.
பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று. திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்." என்று அந்த பதிவில் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். (1/3) pic.twitter.com/ZSMiI5qeQC
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 22, 2021
பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.
எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று!
திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்!— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 22, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.