Advertisment

கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக்குகள் அமைக்க தமிழக அரசு முடிவு

TN Govt to set up special post-Covid care clinics Tamil News: கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக சிறப்பு பராமரிப்பு மையங்கள் மற்றும் வார்டுகளைத் திறக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்போதுள்ள கிளினிக்குகளை மேம்படுத்த உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu news in tamil: TN Govt to set up special post-Covid care clinics

Tamil Nadu news in tamil:  இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த 2 மாதங்களில் இருந்த இதன் தொற்று பரவல் வேகம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 97% நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், பலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு, கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக்குகளை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கென சிறப்பு பராமரிப்பு மையங்கள் மற்றும் வார்டுகளைத் திறக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்போதுள்ள கிளினிக்குகளை மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisment

பல நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்த சில வாரங்களுக்குப் பிறகு வலி மற்றும் சோர்வு போன்ற எஞ்சிய அறிகுறிகளைக் கடக்க போராடுகிறார்கள். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இரத்த நாளங்களில் உயிருக்கு ஆபத்தான கட்டிகளால் அவதிப்படுவோர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 600 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக வசதியுடைய அரசு கொரோனா மருத்துவமனையை முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த வாரம் திறந்து வைக்க உள்ளார். இங்கு வெளிநோயாளர் பிரிவு, சோதனை வசதிகள், உள்நோயாளிகள் மற்றும் மறுவாழ்வு சேவைகளுடன் விரிவான சிகிச்சை என பல வசதிகள் உள்ளன.

publive-image

"கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்கள் மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும். எங்கள் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம், மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு தரமான பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்" என்று மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள சுகாதார துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன்,"கொரோனாவை நீண்ட காலமாக எதிர்த்துப் போராடிய பின்னர் மோசமான நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சினைகள் உள்ள பல நோயாளிகளை நாங்கள் காண்கிறோம். எங்களிடம் மூத்த நுரையீரல் நிபுணர்கள், நீரிழிவு மருத்துவர்கள், இருதயநோய் மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் உள்ளனர். பிசியோதெரபி மற்றும் பிற சிகிச்சைகள் வழங்கப்படும் மறுவாழ்வு வார்டுகளும் உள்ளன. மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கான கிளினிக்குகளின் சேவைகளை அரசு மேம்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Chennai Tamilandu Latest News Tamilnadu Latest News Tamilnadu News Update Tamilnadu News Latest Tamilnadu Covid 19 Update Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment