Advertisment

உச்சம் தொட்ட தக்காளி விலை… அதுக்காக இப்படியா? கூகுள் பாவம்பா…

Tomato price increases in TN; People search for without Tomato recipes, this google search goes viral Tamil News: தக்காளி விலை உயர்வால் கடந்த சில நாட்களாக மக்கள் கூகுளில் வித்தியாசமான தேடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu news in tamil: tomato price increases in TN, this google search goes viral

Tamil Nadu news in tamil: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரப்பி வழிந்த வண்ணம் உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும், 2 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் இந்த தீவிர கனமழையால் பயிர்கள் மற்றும் காய்கறிகள் நாசமடைந்துள்ளன.

Advertisment

இதில், தமிழ்நாட்டில் விளைய வைக்கப்பட்ட தக்காளிகளும் நாசம் ஆகியுள்ளன. இதனால், சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதேபோல், அண்டை மாநிலங்களாலான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் தீவிர கனமழை பெய்து வருவதால், அங்கிருந்து வரும் தக்காளிகளின் வரத்தும் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

publive-image

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

publive-image

கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று, அகில இந்திய அளவில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.40 ஆக இருந்தது. அது மாத இறுதியில் கிலோவுக்கு ரூ.50 ஆக உயர்ந்தது. நவம்பர் 23ம் தேதி மேலும் விலை உயர்ந்து கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.119க்கும், திருநெல்வேலியில் ரூ.103க்கும், திருச்சியில் ரூ.97க்கும், கடலூரில் கிலோ ரூ.94க்கும், கோவையில் ரூ.90க்கும் விற்பனையாகிறது. சென்னையில் தக்காளியின் சில்லரை விலை கிலோவுக்கு ரூ.100 ஆகவும், புதுச்சேரியில் கிலோ ரூ.90 ஆகவும், பெங்களூருவில் கிலோ ரூ.88 ஆகவும், ஹைதராபாத்தில் கிலோ ரூ.65 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

publive-image

தலைநகர் சென்னையில் தக்காளி சில இடங்களில் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டாலும், பல இடங்களில் ஒரு கிலோ ரூ.150க்கும், 200க்கும் விற்கப்படுகிறது. மேலும், காய்கறி தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 முதல் 200 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

வைரலாகும் புதிய கூகுள் தேடல்

publive-image

இந்நிலையில், தக்காளி விலையேற்றத்தை வைத்து நிறைய மீம்களை நெட்டிசன்கள் தற்போது பதிவிட்டு வருகின்றனர். முன்பு வெங்காய விலை உயர்வுக்கு வந்த மீம்களை விட இவை சற்று சுவாரஷ்யமாக உள்ளன. இதனால் அவை அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

publive-image

தக்காளி விலை உயர்வால் கடந்த சில நாட்களாக மக்கள் கூகுளில் வித்தியாசமான தேடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதை தற்போது சமூக வலைதள பக்கங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். அவையும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகிறது.

இந்த வித்தியாசமான கூகுள் தேடல்களில் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி?, தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி?, சட்னி செய்வது எப்படி? என்கிற கேள்விகளை மக்கள் தேடி வருகின்றனர். மேலும், குறைவான விலையில் குழம்பில் பயன்படுத்தும் தக்காளி சாஸ் குறித்தும், தக்காளிக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம் என்றும் மக்கள் கூகுள் செய்து வருகின்றனர்.

publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tamilnadu News Update Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment