/tamil-ie/media/media_files/uploads/2021/03/karunas.jpg)
Tamil Nadu News Updates: வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைகட்சியும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு நேற்று தொடங்கியது.
திருச்சி - சிறுகனூரில் நடைபெற்ற 'விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு. க ஸ்டாலின் பத்தாண்டு இலக்கை அறிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும் என்றும், மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுவதும் தொழில்நுட்ப இயந்திரங்களே இனி இப்பணிக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது.
டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 100வது நாளைத் தாண்டி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேற்று, திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர தற்கொலை செய்து கொண்டார். இது, இந்த போராட்டத்தின் எட்டாவது தற்கொலையாகும்.
இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் விவசாயிகளின் நலனை பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.