Tamil News Live: இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவரது சந்திப்பின்போது, குடியரசு தலைவரிடம் பல்வேறு விஷயங்களை முதல்வர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை:
சென்னையில் இன்று டீசலின் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும், பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.102.73 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வெள்ளி விலை:
சென்னையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,640 என்றும், சவரனுக்கு ரூ.45,120 என்றும் விற்பனையாகிறது. இன்று 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,153 என்றும், சவரனுக்கு ரூ.49,224 என்றும் விற்பனையாகிறது.
வானிலை நிலவரம்:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் அரங்கில் உருவாக்கப்பட்ட பெரிய மண் பேனாவை விலை கொடுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“திமுகவையெல்லாம் யாரும் அச்சுறுத்த முடியாது..ஐடி ரெய்டு எப்போதும் நடப்பது தானே…இது புதிதல்ல” என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார் நடிகர் கமல்ஹாசன். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். ராகுல் காந்தி அழைப்பை ஏற்று மே முதல் வாரம் கர்நாடகா செல்ல கமல்ஹாசன் திட்டம்
கடந்தாண்டு நவம்பரில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது மெயின் தேர்வு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கும் என அறிவிப்பு
சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை தமிழ்நாடு அரசு திறந்துள்ளது.
இந்த இயந்திரத்தில் பணம் செலுத்தி பீர் உள்ளிட்ட மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக மேடையில் தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தச் சர்ச்சை தொடர்பாக பதிலளித்த அண்ணாமலை, “அது முழுமையான பாடல் அல்ல. அதன்பின்னர், கர்நாடக மாநில பாடல் ஒலிபரப்பப்பட்டது” என்றார்.
மே தின நாளில் அரசு மதுபான கூடங்கள், டாஸ்மாக் இயங்காது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அளித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவருமான கமல்ஹாசன் கோவையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, “திறந்த கதவுதான் என்னுடைய வீடு; என்னுடைய வீட்டில் குளியல் அறைக்குதான் கதவுகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
வெறுப்பு பேச்சு என்பது நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதிக்கும் கடுமையான குற்றம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திரௌபதி முர்முவை சந்தித்த போது அவருக்கு கருணாநிதி புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார் மு.க. ஸ்டாலின்.
தொடர்ந்து, கருணாநிதி பெயரிடப்பட்ட மருத்துவமனையை திறந்துவைக்க சென்னை வரும்படி அழைப்பும் விடுத்தார்.
ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷிற்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பட்டியலில் பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறவில்லை.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் கடந்த ஒரு மாதமாக மணீஷ் சிசோடியா சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கோரிய சி.வி.சண்முகம் மனுவை 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பது சரியல்ல. விமர்சிக்கும் பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை கண்டிக்க வேண்டும். அண்ணாமலை கண்டிக்காவிட்டால், எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டையில் சாலையோரம் இருந்த மாற்றுத்திறனாளியின் தேநீர் கடையை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். இதனை எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேநீர் கடையை அகற்ற கூடாது என அரசிடம் அனுமதி பெற்றுள்ளேன். தனக்கு அடிக்கடி நெடுஞ்சாலை துறையினர் தொல்லை தருவதாக மாற்றுத்திறனாளி வேதனை அளித்துள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, கடையை அகற்றாமல் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தை 3,888 மேற்பட்ட இணையதளங்களில் சட்டவிரோதமாக திரைப்படத்தை வெளியிடுவதை தடுக்கக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கும் என புதுக்கோட்டையில் கரூர் எம்.பி ஜோதிமணி பேட்டியளித்துள்ளார்.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நேற்று நள்ளிரவு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல். இந்த தாக்குதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் கார்த்தியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்த போது உடைந்தது முகப்பு கண்ணாடி உடைந்து சுக்குநூறாகியது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தை பார்க்க நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் குவிந்தனர். “ரசிகர்கள் கூட்டத்தால் உடைந்த காசி தியேட்டர் முகப்பு கண்ணாடி சரி செய்து தரப்படும்” என்று நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக மாநில நிர்வாகி சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரணடைந்துள்ளனர். 20 – 25 வயது மதிக்கத்தக்க 9 பேர் 13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளை கொண்ட சங்கர், நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
சரத், சங்க குமார், ஜெயன், சஞ்சீவ், குணா, சந்தான குமார், தினேஷ், உதயகுமார், ஆனந்த் ஆகிய 9 பேர் சரணடைந்துள்ளனர். தொழில் போட்டியில் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். டெல்லி விமானநிலையத்தில் விமானத்திற்காக இருவரும் காத்திருந்த போது தற்செயலாக சந்தித்துக்கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; மதிப்பெண்கள் முக்கியம்தான் ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மதிப்பெண்கள் குறைவாகிவிட்டால் திறமை இல்லாத மாணவர்கள் என நீங்கள் கருதிவிடக்கூடாது; உங்கள் திறமைக்கான நாற்காலி உங்களுக்காக காத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் 7 பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். நிலுவையில் உள்ள 30 மாதம் சம்பளத்தை வழங்கவும், நஷ்டம் காரணத்தால் 3 ஆண்டுகளாக சரிவர இயங்காத அமுதசுரபி அங்காடி, புதுச்சேரியில் ஊழியர்கள் தொடர் போராட்டம் வெடித்துள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூரில் கடந்த 2018ம் ஆண்டு தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தேவனாம்பட்டினம் மீனவர் பஞ்சநாதன் படுகொலை செய்யப்பட்டார். 5 ஆண்டுகளாக வழக்கை விசாரித்து வந்த கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகளாக தீர்ப்பிட்டுள்ளது.
கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என்றும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த பிரபல திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் நினைவாக சென்னையில் சதுக்கம் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவரது சந்திப்பின்போது, குடியரசு தலைவரிடம் பல்வேறு விஷயங்களை முதல்வர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறார்கள் தப்பி ஓட்டம்.
“அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்”, என்று அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முதல் நாளில் இருந்து பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.