Advertisment

இன்றைய முக்கிய செய்திகள் : 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates : தமிழகத்தின் முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய முக்கிய செய்திகள் : 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி

Flash News in Tamilnadu Today Updates:  கடந்த 8 மாதங்களில் 5 புதிய மாவட்டங்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த 5 புதிய மாவட்டங்களுக்கும் முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்தும் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இதற்காக,  5 முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களை நிரப்பவும் அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

உலக புற்றுநோய் தினம் - விழுப்புணர்வு வீடியோ :  

 

வங்கி வைப்பு நிதிக்கான காப்பீடு உயர்வு - ஓர் முழுமையான அலசல்

வரும் பிப்ரவரி 8ம் தேதி நடக்கவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா மற்றும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஜங்புரா, சங்க விஹாரில் நடைபெறும் தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளனர்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of Politics, Sports, Entertainment, weather, traffic, train services and airlines தமிழகத்தின் முக்கியச் செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்!














Highlights

    20:57 (IST)04 Feb 2020

    5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; கல்வி அமைச்சர், தமிழக அரசு நடிகர் சூர்யா நன்றி

    5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து நடிகர் சூர்யா வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    19:55 (IST)04 Feb 2020

    ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

    ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    19:19 (IST)04 Feb 2020

    நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றுதல் தொடர்பாக நாளை தீர்ப்பு

    நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

    18:39 (IST)04 Feb 2020

    ரூ.20.கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற 4 பேர் கைது

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ரூ.20 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற 4 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து - 5 சிலைகள், 1 பீடம் மீட்கப்பட்டுள்ளது.

    18:08 (IST)04 Feb 2020

    பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்கிறார்; ஆனால், ஒரு தொழிற்சாலை கூட நிறுவவில்லை - ராகுல் விமர்சனம்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: பிரதமர் மோடி 'மேக் இன் இந்தியா' என்று முழக்கமிடுகிறார். ஆனால், இதுவரை ஒரு தொழிற்சாலையைக் கூட நிறுவவில்லை. இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, ரயில்வே ஆகியவற்றை விற்றுவிட்டனர். கூடிய விரைவில் செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    17:45 (IST)04 Feb 2020

    விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, மனுதாரர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அவரை கைது செய்யக்கூடாது உத்தரவிட்டார்.

    17:32 (IST)04 Feb 2020

    ஃபாஸ்ட் டேக் வந்த பிறகும் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு

    நாடாளுமன்றத்தில், ஃபாஸ்ட் டேக் முறை தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “FASTag முறை அமல்படுத்தப்பட்ட பிறகும் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது” என்று கூறினார். இதன் மூலம் FASTag முறை அமல்படுத்தப்பட்ட பிறகும் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்திருப்பதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

    17:27 (IST)04 Feb 2020

    சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜா நீக்கம் - ஆதரவாளர்கள் கண்டனம்

    சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜா நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளனர்.  வீரபாண்டி ராஜா நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன் பதவி விலகியுள்ளார்.

    16:53 (IST)04 Feb 2020

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

    உலக நாடுகளை கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தி வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. 21 பேரை பரிசோதித்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள-தமிழக எல்லையில் முழுமையான கண்காணிப்பு பணிகளில் அரசு
    கவனம் செலுத்துகிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய ஆலோசனைகளின்படி செயல்பட்டு வருகிறோம்.” என்று கூறினார்.

    16:31 (IST)04 Feb 2020

    சிஏஏ, என்சிஆர், என்பிஆர்-க்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்திய மம்தா பானர்ஜி

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள்பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடியாவில் பொதுக்கூட்டம் நடத்தினார்.

    16:25 (IST)04 Feb 2020

    முதல்வர் பழனிசாமி தலைமையில் 2020-21 பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம்

    2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை இன்று கூடியது.

    இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கும் பசுமை தொழிற்சாலைகளை நேரடியாக இயக்குவதற்கான DIRECT CTO திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல் அமைச்சரவையில் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்.

    5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் முதலமைச்சர் பழனிசாமி, ஆவேசமாக கேள்வி எழுப்பி, ஆதங்கப்பட்டதாகவும், அதன்பிறகே, பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது என தெரியவந்துள்ளது.

    15:54 (IST)04 Feb 2020

    மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா விமர்சனம்

    திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசுகையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் கிராமப்புற – மலைவாழ் – பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ – மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று கடுமையாக விமர்சித்தார்.

    15:50 (IST)04 Feb 2020

    தனிநபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவர முடியுமா - உயர் நீதிமன்றம் கேள்வி

    தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    15:37 (IST)04 Feb 2020

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி கைது

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டியை ராமநாதபுரம் - சிவகங்கை சாலையில் உள்ள அவருடை தோட்டத்டில் இருந்தபோது சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் சித்தாண்டி அவரது குடும்பத்தினர், உறவினர் உள்பட பல்வேறு நபர்கள் முறைகேடாக தேர்ச்சி பெற உதவியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    15:30 (IST)04 Feb 2020

    5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்து தேவையில்லாத பதற்றத்தை அரசு உருவாக்காமல் இருந்திருக்கலாம்; தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

    15:25 (IST)04 Feb 2020

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு சம்மன்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து தெரிவித்தது தொடர்பாக ரஜினிகாந்த் வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    14:05 (IST)04 Feb 2020

    5, 8 பொது தேர்வுகள் ரத்து- தமிழக அரசு அறிவிப்பு

    5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணையை தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

    13:54 (IST)04 Feb 2020

    பட்ஜெட் 2020-21 சிறந்த பட்ஜெட், மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் - மோடி

    பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி,"சனிக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்,  தற்போது நிலவும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலையில் இது சிறந்த பட்ஜெட்  என்று கூறினார். மேலும், பட்ஜெட் குறித்து  மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். 

    12:52 (IST)04 Feb 2020

    பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முக ஸ்டாலின்

    குடியுரிமை திருத்தம் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு  எதிராக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து பயணிகள், பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். 

    12:42 (IST)04 Feb 2020

    பொது மக்களிடம் ஸ்டாலின் கையெழுத்து வாங்கினார்:

    குடியுரிமை திருத்தம் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு  எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 8ம் தேதி வரை நடத்தபப்டுகிறது. இன்று சென்னையில் பல இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கினார். 

    11:54 (IST)04 Feb 2020

    கே.எஸ். அழகிரி அறிக்கை

    11:53 (IST)04 Feb 2020

    ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும் - கே.எஸ் அழகிரி

    மதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு இருப்பதால் உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று தமிழக  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.  மேலும், திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்டக் காரணம் தான் என்று போலீசார் தெளிவுபடுத்திய பின்னரும்,  இந்த கொலைக்கு காரணம்  இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறார்.  இந்த பேச்சு காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா? இவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்று கூறிய கே.எஸ் அழகிரி"தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.       

    11:42 (IST)04 Feb 2020

    இந்தியாவிற்கு அழைத்து செல்லுங்கள் - சீனாவில் சிக்கி தவிக்கும் பெண் கோரிக்கை

    கொரானா வைரஸ் காரணமாக  இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் பத்திரமாக இந்தியாவிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனினும்,அதிக காய்ச்சல் காரணமாக 10 இந்தியர்கள் மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கபப்டவில்லை. இந்நிலையில், விடப்பட்டவர்களில் பட்டியலில் இருக்கும் அன்னம் ஜோதி என்ற பெண் தன்னை உடனடியாக சீனாவில் இருந்து மீது செல்லுமாறு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில், தனக்கு தற்போது காய்ச்சல் குரயுந்து வருவதாகவும், அடுத்த மாதம் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த அன்னம் ஜோதி ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.                

    11:21 (IST)04 Feb 2020

    உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தவே டிஎன்பிஎஸ்சி போராட்டம் - அமைச்சர் விஜயகுமார்

    திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு போராட்டம் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்று அமைச்சார் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.  

    11:18 (IST)04 Feb 2020

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்

    நடந்து முடிந்த  குரூப் 2ஏ,குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக தொடங்கிய இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறைகேடு வழக்கு அனைத்தையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.   

    11:04 (IST)04 Feb 2020

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி- டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

    70 உருப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 54 முதல் 60 இடங்களையும், பாஜக  10 முதல் 14 இடங்களையும் தக்க வைத்துக் கொள்ளும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  

    Tamil Nadu news today updates:  கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வந்த 8 பேர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனையின்போது காய்ச்சலும் ஜலதோஷமும் இருந்தது.

    தஞ்சை பெரிய கோயிலில் நாளை (பிப்ரவரி 5-ம் தேதி) நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தெற்கு ரயில்வே நான்கு சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் இருந்து – தஞ்சாவூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment